TNPSC Current Affairs – May 26, 2022

0
45

C.A.26.05.2022 (Tamil Version)

 

  1. மத்திய அரசின் திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (26.5.2022) சென்னை வருகிறார். இதில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கிவைப்பதுடன் ரூ.28,500 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார்.

 

பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் நிறைவடைந்த திட்டங்கள் வருமாறு:-

 

  • பிரதம மந்திரி வீட்டு வசதி-நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ.116 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 1,152 வீடுகள் திறப்பு.
  • மதுரை-தேனி இடையே ரூ.500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ. ரெயில் பாதை திட்டம்.
  • தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் போடப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதை திட்டம்.
  • எண்ணூர்-செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.
  • திருவள்ளூர்-பெங்களூரு இடையே 271 கி.மீ. தூரத்துக்கு ரூ.910 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.

 

இதைப்போல பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் வருமாறு:-

 

  • சென்னை-பெங்களூரு இடையே 262 கி.மீ. தூரத்துக்கு ரூ.14,870 கோடியில் அதிவிரைவு சாலை அமைத்தல்.
  • சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு ரூ.5,850 கோடியில் 4 வழி சாலையுடன் கூடிய இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல்.
  • தர்மபுரி-நேரலுரு இடையே 94 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,870 கோடியில் 4 வழி சாலை அமைத்தல்.

 

  • சிதம்பரம்-மீன்சுருட்டி இடையே ரூ.720 கோடியில் 31 கி.மீ. தூரத்துக்கு நடைபாதையுடன் கூடிய இருவழி சாலை அமைத்தல்.
  • சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களை ரூ.1,800 கோடியில் மேம்படுத்துதல்.
  • சென்னையில் ரூ.1,400 கோடி மதிப்பில் பன்முக தளவாட பூங்கா அமைத்தல்..
  1. இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளார்.
  2. இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத்தலங்களுக்கு செல்லும் “சார் தாம்” யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 

C.A.26.05.2022 (English Version)

 

  1. Prime Minister Modi is coming to Chennai today (26.5.2022) to launch the project work of the Central Government. Of this, he is launching 5 completed projects worth Rs 2,900 crore and laying the foundation stone for 6 projects worth Rs 28,500 crore.

 

The completed projects to be launched by Prime Minister Modi are as follows: –

 

  • Opening of 1,152 houses in Chennai at a cost of Rs.116 crore under the Prime Minister’s Housing-Urban Scheme.
  • 75 km between Madurai and Theni at a cost of Rs.500 crore. Railroad project.
  • Tambaram-Chengalpattu 3rd Rail Line Project at a cost of Rs. 590 crore.
  • 115 km between Ennore and Chengalpattu at a cost of Rs 850 crore. Natural gas pipeline project set up at a distance.
  • 271 km between Tiruvallur and Bangalore. 910 crore natural gas pipeline project for the distance.

 

Here are the plans laid by Prime Minister Modi: –

 

  • 262 km between Chennai-Bangalore. Construction of Expressway at a cost of Rs. 14,870 crore for distance.
  • 21 km between Chennai Port and Maduravayal. Construction of double track flyover with 4 lane road at a cost of Rs. 5,850 crore.
  • 94 km between Dharmapuri-Neraluru. Construction of 4 way road at a cost of Rs. 3,870 crore for distance.
  • Chidambaram-Meenchurutti 31 km at a cost of Rs 720 crore. Construction of two way road with sidewalk for distance.
  • Upgradation of 5 railway stations at Chennai Egmore, Rameswaram, Madurai, Katpadi and Kanyakumari at a cost of Rs. 1,800 crore.
  • Establishment of a multi-logistics park at a cost of Rs. 1,400 crore in Chennai.
  1. Abilasha Barak has been appointed as the first female fighter pilot of the Indian Air Force. Abilash Barak has become the first female pilot of an Indian warplane.
  2. The pilgrimage to the four holy places in the Himalayas, namely Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri, has resumed.

Click here to download PDF material: CA 26.05.2022