C.A.26.05.2022 (Tamil Version)
- மத்திய அரசின் திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (26.5.2022) சென்னை வருகிறார். இதில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கிவைப்பதுடன் ரூ.28,500 கோடி மதிப்பிலான 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார்.
பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் நிறைவடைந்த திட்டங்கள் வருமாறு:-
- பிரதம மந்திரி வீட்டு வசதி-நகர்ப்புறம் திட்டத்தில் சென்னையில் ரூ.116 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள 1,152 வீடுகள் திறப்பு.
- மதுரை-தேனி இடையே ரூ.500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 75 கி.மீ. ரெயில் பாதை திட்டம்.
- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.590 கோடியில் போடப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதை திட்டம்.
- எண்ணூர்-செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் 115 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.
- திருவள்ளூர்-பெங்களூரு இடையே 271 கி.மீ. தூரத்துக்கு ரூ.910 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.
இதைப்போல பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் வருமாறு:-
- சென்னை-பெங்களூரு இடையே 262 கி.மீ. தூரத்துக்கு ரூ.14,870 கோடியில் அதிவிரைவு சாலை அமைத்தல்.
- சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரத்துக்கு ரூ.5,850 கோடியில் 4 வழி சாலையுடன் கூடிய இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல்.
- தர்மபுரி-நேரலுரு இடையே 94 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,870 கோடியில் 4 வழி சாலை அமைத்தல்.
- சிதம்பரம்-மீன்சுருட்டி இடையே ரூ.720 கோடியில் 31 கி.மீ. தூரத்துக்கு நடைபாதையுடன் கூடிய இருவழி சாலை அமைத்தல்.
- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்களை ரூ.1,800 கோடியில் மேம்படுத்துதல்.
- சென்னையில் ரூ.1,400 கோடி மதிப்பில் பன்முக தளவாட பூங்கா அமைத்தல்..
- இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளார்.
- இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத்தலங்களுக்கு செல்லும் “சார் தாம்” யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
C.A.26.05.2022 (English Version)
- Prime Minister Modi is coming to Chennai today (26.5.2022) to launch the project work of the Central Government. Of this, he is launching 5 completed projects worth Rs 2,900 crore and laying the foundation stone for 6 projects worth Rs 28,500 crore.
The completed projects to be launched by Prime Minister Modi are as follows: –
- Opening of 1,152 houses in Chennai at a cost of Rs.116 crore under the Prime Minister’s Housing-Urban Scheme.
- 75 km between Madurai and Theni at a cost of Rs.500 crore. Railroad project.
- Tambaram-Chengalpattu 3rd Rail Line Project at a cost of Rs. 590 crore.
- 115 km between Ennore and Chengalpattu at a cost of Rs 850 crore. Natural gas pipeline project set up at a distance.
- 271 km between Tiruvallur and Bangalore. 910 crore natural gas pipeline project for the distance.
Here are the plans laid by Prime Minister Modi: –
- 262 km between Chennai-Bangalore. Construction of Expressway at a cost of Rs. 14,870 crore for distance.
- 21 km between Chennai Port and Maduravayal. Construction of double track flyover with 4 lane road at a cost of Rs. 5,850 crore.
- 94 km between Dharmapuri-Neraluru. Construction of 4 way road at a cost of Rs. 3,870 crore for distance.
- Chidambaram-Meenchurutti 31 km at a cost of Rs 720 crore. Construction of two way road with sidewalk for distance.
- Upgradation of 5 railway stations at Chennai Egmore, Rameswaram, Madurai, Katpadi and Kanyakumari at a cost of Rs. 1,800 crore.
- Establishment of a multi-logistics park at a cost of Rs. 1,400 crore in Chennai.
- Abilasha Barak has been appointed as the first female fighter pilot of the Indian Air Force. Abilash Barak has become the first female pilot of an Indian warplane.
- The pilgrimage to the four holy places in the Himalayas, namely Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri, has resumed.