TNPSC Currrent Affairs – May 13, 2022

0
51

C.A.13.05.2022 (Tamil Version)

 

  1. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்க் நேற்று (12.05.2022) பதவியேற்றுக்கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து நடைபெற்ற வன்முறையை அடுத்து அதிபர் மகிந்தா ராஜ பட்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கை நாட்டின் 26-வது பிரதமராக ரணில் விக்ரம சிங்க் பதவியேற்றுக்கொண்டார்.

* நாட்டின் பழமை வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரம சிங்க், ஐந்து முறை பிரதமர் பதவி வகித்தவர்.

 

  1. இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

 

  1. செவிலியர்களுக்கு முன்மாதிரியாக உலகமெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் தன்னலமற்ற சேவையை கொண்டாடும் வகையில் உலகமெங்கும் “சர்வதேச செவிலியர் தினம் (12.05.2022)” கொண்டாடப்படுகிறது.

 

  1. சிறப்பான சேவையாற்றும் செவிலியர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் “ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது” வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

  1. உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் (1.5.2021 முதல் 1.5.2022 வரை)
    • லயோனல் மெஸ்ஸி – அர்ஜென்டினா கால்பந்து வீரர் – ரூபாய் 1,006 கோடி
    • லெப்ரான் ஜேம்ஸ் – அமெரிக்கா கூடைப்பந்து வீரர் – ரூபாய் 936 கோடி
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ – போர்ச்சுகல் கால்பந்து வீரர் – ரூபாய் 890 கோடி
    • நெய்மர் – பிரேசில் கால்பந்து வீரர் – ரூபாய் 735 கோடி
    • ஸ்டிபன் கரி – அமெரிக்க கூடைப்பந்து வீரர் – ரூபாய் 712 கோடி
    • கெவின் டியூரென்ட் – அம்ரெய்க்க கூடைப்பந்து வீரர் – ரூபாய் 712 கோடி
    • ரோஜர் பெடரர் – சுவிஸர்லாந்து டென்னிஸ் வீரர் – ரூபாய் 696 கோடி
    • கேன்வோ அல்வெரெஸ் – மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் – ரூபாய் 696 கோடி
    • டாம் பிராடி – அமெரிக்கா ஃபுட்பால் வீரர் – ரூபாய் 641 கோடி
    • யானிஸ் அண்டெடோகும்போ – கிரீஸ் கூடைப்பந்து வீரர் – ரூபாய் 618 கோடி

 

  1. இலக்கு நீடிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் (ஒலியைவிட அதிவேகமானது) ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வங்கக்கடலில் நேற்று (12.5.2022) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனையின்போது மேம்படுத்தப்பட்ட வடிவம் முதல் முறையாக சுகோய் எஸ்யூ – 30 எம் கே ஐ போர் விமானத்தில் இருந்து வங்கக்கடல் பகுதியில் இருந்த இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது.

 

  1. நமது பால் வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். சூரியனை விட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்த கருந்துளை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருந்துளைக்கு ஸாஜிடேரியஸ் – ஏ என்று பெயரிடப்பட்டுள்ளது. அஸ்ட்ரோபிசிக்கல் ஐர்னல் லெட்டர்ஸ் என்ற அறிவியல் இதழ் வெளியிட்டது

 

  1. நேபாளத்தில் மலையேற்ற நிபுணத்துவம் மிகுந்த “ஷெர்பா” இனத்தை சேர்ந்த லக்பா ஷெர்பா, 10 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார்.

 

  1. நேட்டோ அமைப்பில் பின்லாந்தை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை உடனடியாக சமர்பிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் சாவ்லி நினிஸ்டா மற்றும் பிரதமர் சனா மரின் தெரிவித்துள்ளனர்.

 

C.A.13.05.2022 (English Version)

 

  1. Ranil Vikram Singh was sworn in as the new Prime Minister of Sri Lanka yesterday (12.05.2022). President Mahinda Rajapakse has resigned as prime minister in the wake of violence in Sri Lanka, which has been embroiled in an economic crisis since last Monday.

* Ranil Vikram Singh becomes the 26th Prime Minister of Sri Lanka.

* Ranil Vikram Singh is the leader of the country’s oldest United National Party, a five-time prime minister.

 

  1. The Union Government has announced that Rajiv Kumar will be the next Chief Election Commissioner of India

 

  1. International Nurses’ Day (12.05.2022) is celebrated around the world to celebrate the selfless service of Florence Nightingale, who is recognized around the world as a role model for nurses.

 

  1. Public Welfare Minister Subramanian has announced that the “Florence Nightingale Award” will be presented annually on behalf of the Government of Tamil Nadu to outstanding service nurses.

 

  1. World’s highest-earning athletes (1.5.2021 to 1.5.2022)
    • Lionel Messi – Argentine footballer – Rs 1,006 crore
    • LeBron James – US basketball player – Rs 936 crore
    • Cristiano Ronaldo – Portuguese footballer – Rs 890 crore
    • Neymar – Brazilian footballer – Rs 735 crore
    • Stephen Curry – American basketball player – Rs 712 crore
    • Kevin Durant – American basketball player – Rs 712 crore
    • Roger Federer – Swiss tennis player – Rs 696 crore
    • Canvo Alvarez – Mexican boxer – Rs 696 crore
    • Tom Brady – American footballer – Rs 641 crore
    • Yannis Andotokumbo – Greek basketball player – Rs 618 crore

 

  1. An improved version of the Target Prolonged Pramos Supersonic (faster than sound) missile was successfully tested in the Bay of Bengal yesterday (12.5.2022). During the test, the upgraded version of the Sukhoi SU-30MKI fighter jet was aimed at a target in the Bay of Bengal.

 

  1. Astronomers have released the first photo of a giant black hole found in our Milky Way galaxy. The black hole is said to be 40 million times larger than the Sun. This black hole is named Sagittarius-A. It was Published by the scientific journal Astrophysical Ironal Letters

 

  1. Lakba Sherpa, a “Sherpa” from Nepal who specializes in trekking, has climbed Mount Everest for the 10th time.

 

  1. President Chawli Ninista and Prime Minister Sana Marin have expressed support for the immediate submission of an application for Finland to join NATO.

Click here to download PDF material: CA 13.05.2022