Home TNPSC TNPSC Current Affairs – Sep 12, 2022

TNPSC Current Affairs – Sep 12, 2022

0

CA 12.09.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. நம்ம ஊரு சூப்பர்

  • மோகனூர் ஊராட்சி ஒன்றியம் அரூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் தொடர்பான ‘நம்ம ஊரு சூப்பர்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.

மத்திய செய்திகள்

1. தாராகிரி போர்க்கப்பல்

  • இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட் 17 ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போர்க்கப்பலான தாராகிரி மும்பையில் முதல்முறையாக இறக்கப்பட்டது.
  • மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் எம் பி எல் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுமான முறையின் கீழ் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
  • இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட் 17 திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே நான்கு போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
  • இதன் மொத்த திட்ட செலவு ரூபாய் 25 ஆயிரத்து 700 கோடியாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் போர்க்கப்பலான நீலகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த கப்பலின் கடல் பயண சோதனை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தின் கீழான இரண்டாவது போர்க்கப்பல் உதயகிரி கட்டி முடிக்கப்பட்டு கடந்த மே 17ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த கப்பலின் கடல் பயண சோதனை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

2. எஸ்இஓ மாநாடு

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்ல உள்ளார்.
  • மாநாட்டின் போது கடந்த 20 ஆண்டுகளாக எஸ்சிஓ அமைப்பின் செயல்பாடு குறித்து தலைவர்கள் ஆய்வு மேற்கொள்வர் எனவும், எதிர்காலத்தில் பலதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு செய்திகள்

1. சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்

  • முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
  • 1997 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சென்னையில் ஆண்கள் பங்கேற்கும் ஏடிபி சென்னை டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது.
  • அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த போட்டி 2018 ஆம் ஆண்டு மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.

2. ஆசிய சேம்பியன் இலங்கை

  • துபாயில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக இலங்கை அணி கைப்பற்றியது.

3. யூஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்வியா டெக்

  • நியூயார்க்கில் நடைபெற்ற யூஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக்.
  • உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆன ஸ்வியா டெக் 6-2, 7-6 என்று நேர் செட்டுகளில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியூரை வீழ்த்தினார்.
  • இது அவரது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

CA 12.09.2022(English Version)

State news

1. Our town is super

  • In Moganur Panchayat Union Arur Panchayat, Rural Development and Panchayat Department organized ‘Namma Uru Super’ awareness program and rally related to environment and health.

Central News

1. Taragiri Warship

  • Taragiri, the third warship built under Project 17A of the Indian Navy, was launched in Mumbai for the first time.
  • The ship was built under integrated construction method by Mazacon Shipbuilding Company MPL, Mumbai.
  • Four warships are being built indigenously under Project 17A of the Indian Navy.
  • Its total project cost is Rs 25,700 crores.
  • The first warship built under this project ‘Nilgiri’ was launched on 28th September 2019.
  • Sea trials of this vessel are expected to be carried out in the first half of 2024.
  • The second warship under this project ‘Udayagiri’ was completed and commissioned on 17th May.
  • Sea trials of this vessel are scheduled to be carried out in the second half of 2024.

2. SEO conference

  • PM Modi to visit Uzbekistan to participate in Shanghai Cooperation Organization’s SEO conference.
  • During the conference, the leaders are expected to review the functioning of the SEO Organization over the last 20 years and discuss the opportunities for multilateral cooperation in the future.

Sports news

1. International Women’s Open Tennis

  • International women’s open tennis tournament to be held in Chennai where leading players will participate.
  • From 1997 to 2017, ATP Chennai tennis tournament for men was held in Chennai.
  • Later due to various reasons the tournament was shifted to Maharashtra in 2018.

2. Asian Champion Sri Lanka

  • Sri Lanka defeated Pakistan by 23 runs in the T20 Asia Cup final in Dubai and won the title for the sixth time.

3. US Open champion Svia Tech

  • Poland’s Ika Swiadek won the US Open women’s singles final in New York.
  • World number one Zwia Tech beat Tunisia’s Anse Zabieure in straight sets 6-2, 7-6.
  • This is his third Grand Slam title.

Exit mobile version