Home TNPSC TNPSC Current Affairs – Oct 27, 2022

TNPSC Current Affairs – Oct 27, 2022

0

CA 27.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் 

  • சென்னை நந்தனத்தில் ரூபாய் 365 கோடியில் 12 மாடிகளுடன் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
  • சென்னை மெட்ரோ ரயில் தலைமையகம் என்ற பெயரில் இக்கட்டிடம் 12 மாடிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.
  • இதில் ஆறு மாடிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், மீதமுள்ள ஆறு மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. இதன் அருகிலேயே மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் உள்ளது.

2. நம்ம சென்னை செயலி

  • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் மற்றும் நிகழ் நிலையில் கட்டிட திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகளும் ‘நம்ம சென்னை’ செயலியில் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. தமிழகத்தில் வானூர்தி-ராணுவ தளவாட தொழில் வாய்ப்புகள்

  • தமிழகத்தில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்க ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கும், மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையப்பமாகின.
  • குஜராத் மாநிலம் காந்திநகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த ராணுவ கண்காட்சியில் தமிழகம் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) பங்கேற்றது.
  • தமிழகத்தைச் சேர்ந்த 20 வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
  • இந்த கண்காட்சியில் தமிழகம் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டதாக வெளியிட்ட  செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி வானூர்தி மற்றும் ராணுவ தளவாட பொருள்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், ஏவிஎன்எல், ஏடபள்யூஇஐஎல், டிசிஎல், மிதானி, மியூடினியாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

மத்திய செய்திகள்

1. மாநில உள்துறை மந்திரிகள், போலீஸ் டிஜிபிகள் மாநாடு

  • ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில உள்துறை மந்திரிகள் மற்றும் போலீஸ் டிஜிபிக்கள் மாநாடு நடக்கிறது.
  • சிந்தனை அமர்வு என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. போலீஸ் படைகளை நவீனப்படுத்துதல், இணைய குற்றங்கள், குற்றவியல் நீதி முறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நில எல்லை நிர்வாகம், கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

2. குடியரசு தலைவரிடம் நியமனச் சான்றுகளை வழங்கிய ஐந்து நாட்டு தூதர்கள்

  • இந்தியாவுக்கான ஐந்து நாட்டு தூதர்கள் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினர்.
  • இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்தியாவுக்கான ஈரான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஈரஜ் எலாஹி, ஸ்வீடன் தூதர் ஜேன் தெஸ்லெஃப், உகாண்டா தூதர் ஜாய்ஸ் ககுராமட்ஸி, வியட்நாம் தூதர் நுவென்தான்  ஹை, பெல்ஜியம் தூதர் டிடியேர் வேன்டர் ஹே சல்ட் ஆகியோர் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

3. இந்தியாவில் பருவநிலை பேரிடர், வறுமை தாக்கத்தில் 22 கோடி குழந்தைகள்

  • இந்தியாவில் பருவநிலை ரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையின் தாக்கத்தில் சுமார் 22.2 கோடி அதாவது 51 சதவீத குழந்தைகள் வாழ்வதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான சேவ் தி சில்ட்ரன்தன்னார்வ அமைப்பு மற்றும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
  • அதன்படி, ஆசிய நாடுகளிலேயே கம்போடியாவில் 72% குழந்தைகள் பருவநிலை ரீதியிலான பேரிடர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அடுத்தடுத்த இடங்களில் மியான்மர் 64 சதவீதம், ஆப்கானிஸ்தான் 57 சதவீதம் ஆகிய நாடுகள் உள்ளன. உலகளவில் 77.4 கோடி குழந்தைகளும் இந்தியாவில் சுமார் 22.2 கோடி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் மேற்கண்ட அச்சுறுத்தல்களால் பாதிப்பை எதிர்கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • அசாம், கேரளம், ஒடிசாவில் மிக மோசமான வெள்ள பாதிப்புகளால் விளிம்புநிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  • ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.

CA 27.10.2022(English Version)

State news

1. Metro Rail Head Office

  • Chief Minister M. K. Stalin inaugurates the head office of the Chennai Metro Rail Corporation, built at a cost of Rs 365 crore with 12 floors at Nandanam, Chennai.
  • Named as ‘Chennai Metro Rail Headquarters’ this building is constructed with 12 floors.
  • Of which six floors are to be rented out to the Metro Rail Corporation and the remaining six floors to private and government sectors. There are also residences for Metro Rail officers nearby.

2. Our Chennai app

  • Services like business tax payment, business license renewal and real-time status of building project application have also been introduced on the ‘Namma Chennai’ app for the benefit of the public.

3. Aviation-Military Logistics Industry Opportunities in Tamil Nadu

  • Six MoUs were signed in Tamil Nadu to accept business opportunities for manufacturing of aeronautics and military equipment.
  • These contracts were signed between the Tamil Nadu Industrial Development Corporation and the largest public sector enterprises.
  • Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) participated on behalf of Tamil Nadu in the recently concluded Army Exhibition in Gandhinagar, Gujarat.
  • Activities of 20 aircraft and military logistics manufacturing companies from Tamil Nadu were also showcased.
  • According to a press release, Tamil Nadu signed six MoUs in this exhibition.
  • Accordingly, TIDCO entered into MoUs with companies such as Hindustan Aeronautical Company, AVNL, AWL, TCL, Midani, Mutinias to promote the production of aircraft and military logistics.

Central News

1. Conference of State Home Ministers, DGPs of Police

  • A conference of State Home Ministers and Police DGPs is being held at Surajkund, Haryana.
  • The conference is held in the name of Thought Session. Issues such as modernization of police force, cyber crime, increased use of information technology in criminal justice system, land border management, coastal security, women’s safety and drug trafficking are also discussed.

2. Five countries that have issued nomination papers to the President messengers

  • Five ambassadors to India presented their credentials to President Draupadi Murmu.
  • In this regard, a press release issued by the President’s House stated that ‘Eraj Elahi, Ambassador of Sweden Jane Theslef, Ambassador of Uganda Joyce Kaguramadzi, Ambassador of Vietnam Nuenthan Hai, Ambassador of Belgium Didier Van der Hesult presented their credentials to President Draupadi Murmu, who have been appointed as Iran’s Ambassador to India. .

3. Climate disaster in India, 22 crore in poverty impact children

  • According to a study report, about 22.2 crore or 51 percent children live under the influence of climate-related disasters and poverty in India.
  • The report was prepared by the Child Rights Protection NGO ‘Save the Children’ and climate researchers from the University of Brussels, Belgium.
  • Accordingly, 72% of Cambodia’s children are affected by climate-related disasters and poverty among Asian countries.
  • Next are Myanmar with 64 percent and Afghanistan with 57 percent. 77.4 crore children are affected worldwide and about 22.2 crore children in India.
  • According to the report, India has the highest number of children affected by these threats in the world.
  • Assam, Kerala and Odisha were the worst affected by the floods and marginalized people were hit the hardest.
  • The G-20 summit will be held in India next year.

Exit mobile version