Home TNPSC TNPSC Current Affairs – Oct 24, 2022

TNPSC Current Affairs – Oct 24, 2022

0

CA 24.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. மதுரை எய்ம்ஸ் தலைவர் நியமனம்

  • மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.
  • அதைத்தொடர்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மத்திய செய்திகள்

1. சரக்கு கையாளுகை குறியீடு

  • நாட்டின் வளர்ச்சியில் சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) மிகவும் முக்கியமானது.
  • தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வேளாண் நிலங்களில் இருந்தும், வனப்பகுதிகளிலிருந்தும் கொண்டு செல்லப்படுகின்றன.
  • தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
  • மூலப்பொருளானது மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளர்களின் கைகளில் சேர்வதில் போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • எனவேதான் சரக்கு கையாளுகைக்கு அரசுகள் முக்கியத்துவம் அளித்து போக்குவரத்து சார்ந்த திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
  • சாகர்மாலா திட்டம், பாரத் மாதா திட்டம், தங்க நாற்கரச் சாலை திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தட திட்டம் உள்ளிட்ட பலவும் சரக்குகளை கொண்டு செல்லும் நேரத்தை குறைக்கவே அமல்படுத்தப்படுகின்றன.
  • சரக்குகளை கையாள்வதில் மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆண்டுதோறும் ஆராய்ந்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
  • நடபாண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:
  • சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் நிலை
பிரிவுகள்சாதனையாளர்கள்வேகமாக வளர்பவர்கள்வளர்பவர்கள்
நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள்ஹரியானா இமாச்சல்  பஞ்சாப் தெலுங்கானா உத்தர பிரதேசம் உத்தரகாண்ட்  மத்திய பிரதேசம் ராஜஸ்தான்பீகார் சத்தீஸ்கர் ஜார்கண்ட்  
கடற்கரையோர மாநிலங்கள்தமிழகம் ஆந்திரம் குஜராத் கர்நாடகம் மகாராஷ்டிரம் ஒடிசாகேரளம்  கோவா மேற்குவங்கம்  
வடகிழக்கு மாநிலங்கள்அசாம்  சிக்கிம் திரிபுரா  அருணாச்சல் மணிப்பூர் மேகாலயம் மிசோரம் நாகாலாந்து  
யூனியன் பிரதேசங்கள்சண்டிகர் டில்லிபுதுச்சேரிஅந்தமான்-நிக்கோபார் தீவுகள் டாமன்-டையூ தாத்ரா-நகர் ஹவேலி ஜம்மு-காஷ்மீர் லடாக் லட்சத்தீவுகள்

2. ஆர்பிஐ கடன் வசதிகள்: அதிகமாக பயன்படுத்தும் ஆந்திரம், தெலுங்கானா

  • மாநிலங்களின் நிதிநிலையை சரி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கி வரும் குறுகிய கால கடன் வசதிகளை ஆந்திரம், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதிநிலைமை சரியில்லாத மாநிலங்கள் சந்தையில் இருந்து கடன் வாங்கி செலவு செய்து வருகின்றன.
  • அந்த மாநிலங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியும் குறுகிய கால கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • எஸ்டிஎஃப், டபிள்யூஎம்ஏ, ஓடி ஆகிய குறுகிய கால கடன் வசதிகளை ஆர்பிஐ செயல்படுத்தி வருகிறது. செலவினத்தை விட வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள் அந்த வசதிகளை பயன்படுத்தி கடன் பெற்று வருகின்றன.
  • ஆந்திரம், தெலுங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் ரிசர்வ் வங்கியின் கடன் வசதிகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி மகாராஷ்டிரம், அசாம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் எஸ்டிஎஃப் வசதியை அதிகமாக பயன்படுத்தியுள்ளன.
  • கேரளம் டபுள்யூஎம்ஏ வசதியின் கீழும், பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் ஓடி வசதியின் கீழும் கடன்களை பெற்றுள்ளனர்.
  • நடப்பு 2022-23 நிதியாண்டில் மட்டும் எஸ்டிஎஃப் வசதியின் கீழ் ஆந்திரம் ரூபாய் 712 கோடியையும், தெலுங்கானா ரூபாய் 735 கோடியையும் பெற்றுள்ளன.
  • டபிள்யூஎம்ஏ வசதியின் கீழ் ஆந்திரம் ரூபாய் 1673 கோடியையும், தெலுங்கானா ரூபாய் 1206 கோடியையும் பெற்றுள்ளன.
  • மாநிலங்களின் கடன் உள் மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதமானது பீகார், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் ஆந்திரம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடன் இலக்கு, நிதி பற்றாக்குறை இலக்கு ஆகியவற்றைக் கடந்து செயல்பட்டதாகவும் ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கர்நாடக சட்டப்பேரவை துணைத்தலைவர் காலமானார்

  • கர்நாடக பாஜக எம்எல்ஏவும் அந்த மாநில சட்டப்பேரவை துணைத்தலைவருமான விஸ்வநாத் சந்திரசேகர் மமானி என்ற ஆனந்த் மமானி  உடல் நலக்குறைவால் காலமானார்.
  • கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் சௌவுண்டாட்டி எல்லம்மா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கல்லீரல் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
  • பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • அரசியல் ரீதியாக செல்வாக்கு மிகுந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மமானி ஆவார்.

4. ஹிந்தி மொழி கற்றோர் 100 சதவீதம்: இலக்கை நோக்கி பயணிக்கும் கேரள கிராமம்

  • கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சோளன்னூர் கிராமம் ஹிந்தி மொழி அறிவில் 100 சதவீதத்தை அடைவதை இலக்காகக் கொண்டு கிராம மக்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி கற்பிக்கும் நடவடிக்கையை கிராம பஞ்சாயத்து மேற்கொண்டு வருகிறது.
  • அடுத்த ஆண்டு குடியரசு தினத்திற்குள் கேரளத்தின் குறிப்பாக தென்னிந்தியாவின் முதல் ஹிந்தி கற்றறிந்த பஞ்சாயத்தாக சோளன்னூரை அறிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • வட இந்தியாவில் சேர்ந்த அதிக அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் இப்பஞ்சாயத்தில் வசித்து வருவதால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • 20-70 வயது வரையிலான அனைவருக்கும் ஹிந்தி மொழியை படிக்க பேச மற்றும் எழுத தெரிந்திருப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • கேரள மாநில கல்வியறிவு திட்டத்துக்கான ஆணையம் சர்வ சிக்க்ஷா அபியான், தக்ஷின பாரத் ஹிந்தி பிரசார சபை உள்ளிட்ட அமைப்புகள் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகின்றன.
  • கடந்த 1991 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் முழு கல்வியறிவை அடைந்தபோது கோழிக்கோடு மாவட்டத்தில் முழு கல்வியறிவு பெற்ற முதல் பஞ்சாயத்து என்ற அந்தஸ்தை சோளன்னூர் பஞ்சாயத்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் எல்விஎம்-3 என பெயர் மாற்றம்

  • விண்ணுக்கு மிக அதிக எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் இன் பெயரை எல்விஎம்-3 (செலுத்து வாகனம் மாக்-3) என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • இந்தியாவில் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி திட்டத்திலும் இந்த எல்விஎம்-3 ராக்கெட் தான் பயன்படுத்தப்பட உள்ளது.
  • விண்ணில் துருவ செயற்கைக்கோள்களை செலுத்த பயன்படும் ராக்கெட் பிஎஸ்எல்வி எனவும், புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை ஜிஎஸ்எல்வி எனவும் பெயர் வைக்கப்பட்டது.
  • புவி ஒத்திசைவு புவி வட்டப் பாதை (ஜிஇஓ), புவிநிலை சுற்றுப்பாதை (எம்இஓ), தாழ்புவி சுற்றுப்பாதை (எல்இஓ) ஆகிய சுற்றுப்பாதைகளிலும் செயற்கைக்கோள்களை தற்போது செலுத்த முடியும்.
  • அந்த வகையில் சுற்றுப்பாதையை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பெயர் மாற்றத்தை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
  • எம்இஓ, எல்இஓ ஆகிய சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்தும் பணியிலும் நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்திலும் எல்விஎம்-3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

6. சந்திராயன்-3: அடுத்த ஆண்டு ஜூனில் செயல்படுத்த திட்டம்

  • நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
  • பிரிட்டனின் 36 செயற்கை கோள்களுடன் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாக்-3) கனரக ராக்கெட் அக்டோபர் 23 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டமானது இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம்மற்றும் பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
  • மொத்தம் 43.5 மீட்டர் உயரம், 640 டன் எடையும் கொண்ட எல்விஎம்-3 ராக்கெட் ஆனது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
  • அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஜூன் மாதத்தில் சந்திரன்-3 திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

CA 24.10.2022(English Version)

State news

1. Appointment of Chairman of AIIMS Madurai

  • Dr. Nagarajan has been appointed as the President of Madurai AIIMS Medical College Hospital.
  • The Union Ministry of Health has issued an order in this regard.
  • The announcement that AIIMS Medical College will be set up in Tamil Nadu was announced in February 2015.
  • Subsequently, a place was chosen for it in Madurai Thopur and the foundation stone was laid by Prime Minister Modi in 2019.

Central News

1. Cargo Handling Code

  • Logistics is very important in the development of the country.
  • Raw materials required for industries are transported from agricultural lands and forests.
  • The product produced in the factory is taken to the markets for sale.
  • Transportation plays a very important role in converting raw material into value added product and reaching the hands of customers.
  • That is why governments are giving importance to cargo handling and implementing transport related projects rapidly.
  • Sagarmala scheme, Bharat Mata scheme, Golden Quadrilateral scheme, Separate route scheme for freight trains etc. are implemented to reduce the time of transporting goods.
  • The Union Ministry of Commerce and Industry publishes a report annually examining how states are performing in handling goods.
  • Key Information Mentioned in Current Statement:
  • Status of States in cargo handling
CategoriesAchieversFast GrowersGrowers
The landlocked statesHaryana Himachal Punjab Telangana Uttar Pradesh Uttarakhand  Madhya Pradesh RajasthanBihar Chhattisgarh Jharkhand  
Coastal statesTamil Nadu Andhra Pradesh Gujarat Karnataka Maharashtra OdishaKerala  Goa West Bengal  
North Eastern StatesAssam  Sikkim Tripura  Arunachal Manipur Meghalaya Mizoram Nagaland    
Union TerritoriesChandigarh DelhiPuducherryAndaman-Nicobar Islands Damon-Dieu Dadra-Nagar Haveli Jammu and Kashmir Ladakh Lakshadweep  

2. RBI credit facilities: High utilization Andhra Pradesh, Telangana

  • States including Andhra Pradesh, Telangana and Punjab are making more use of the short-term credit facilities provided by the Reserve Bank of India (RBI) to improve the financial condition of the states, according to the report.
  • Financially poor states are spending by borrowing from the market.
  • Reserve Bank of India is also implementing short term credit schemes for those states.
  • RBI operates short term loan facilities like STF, WMA, OD. States whose revenue is less than expenditure are taking advantage of those facilities to borrow.
  • The states of Andhra Pradesh, Telangana, Rajasthan, Punjab, Manipur, Mizoram and Nagaland are using the credit facilities of the Reserve Bank more, according to a report issued by the RBI.
  • Maharashtra, Assam and Karnataka have utilized the STF facility the most as of last August.
  • Kerala has availed loans under WMA facility and most North Eastern states under ODI facility.
  • In the current financial year 2022-23 alone, Andhra Pradesh has received Rs 712 crore and Telangana Rs 735 crore under the STF facility.
  • Andhra Pradesh has received Rs 1673 crore and Telangana Rs 1206 crore under WMA facility.
  • State’s Debt to Domestic Product (GSTP) ratio is noted to be worst in Bihar, Kerala, Punjab, Rajasthan and West Bengal.
  • In the last fiscal year 2020-21, the states of Andhra Pradesh, Bihar, Rajasthan and Punjab have exceeded the debt target and the fiscal deficit target, according to the RBI report.

3. Karnataka Legislative Assembly Deputy Speaker passed away

  • Karnataka BJP MLA and Deputy Speaker of the state Legislative Assembly Vishwanath Chandrasekhar Mamani alias Anand Mamani passed away due to ill health.
  • He was elected MLA from Chavundatti Ellamma constituency in Belagavi district of Karnataka and was suffering from liver problem.
  • He was admitted to a Bengaluru hospital where he succumbed to treatment.
  • Mamani belonged to the politically influential Lingayat community.

4. Hindi Language Learners 100 Percent: Travel Towards The Goal Kerala village

  • Solannur village in Kozhikode district of Kerala is carrying out a Grama Panchayat to teach Hindi to all the villagers with the aim of achieving 100 percent Hindi proficiency.
  • The initiative is being taken to declare Solannur as the first Hindi literate Panchayat in Kerala especially South India by Republic Day next year.
  • As large number of migrant workers from North India reside in this Panchayat, this initiative has been initiated to communicate with them.
  • The scheme was launched with the aim of making everyone in the age group of 20-70 able to read, speak and write Hindi.
  • Kerala State Literacy Program Commission Sarva Siksha Abhiyan, Dakshina Bharat Hindi Prasara Sabha etc. are providing all support and assistance to this program organized by Panchayat.
  • It is noteworthy that Solannur Panchayat got the status of being the first panchayat in Kozhikode district to achieve full literacy in the state of Kerala in 1991.

5. Renamed GSLV Mach-3 Rocket as LVM-3

  • The Indian Space Research Organization (ISRO) has renamed GSLV Mag-3 rocket as LVM-3 (Length Vehicle Mag-3), a geosynchronous satellite launch vehicle capable of carrying very heavy loads to space.
  • This LVM-3 rocket is also going to be used in India’s space program to send humans to space.
  • The rocket used to launch polar satellites was named PSLV and the Geosynchronous Satellite Launch Vehicle was named GSLV.
  • Satellites can now be launched into Geosynchronous Earth Orbit (GEO), Earth Orbit (MEO) and Low Earth Orbit (LEO).
  • In order to avoid confusion in the identification of the orbiter, ISRO has made this name change.
  • It was announced that the LVM-3 rocket will be used to launch satellites into MEO and LEO orbits and to launch satellites to study the Moon and the Sun.

6. Chandrayaan-3: Planned for implementation in June next year

  • Indian Space Research Organization (ISRO) chief Somnath said that the Chandrayaan-3 project to explore the moon is planned to be launched in June next year.
  • Britain’s LVM-3 (GSLV Mac-3) heavy rocket carrying 36 satellites was successfully launched on October 23 at 12.07 am from the Satish Dhawan launch pad in Sriharikota.
  • This project, implemented for commercial use, was carried out on the basis of MoUs between ISRO’s ‘New Space India’ and UK’s ‘OneWeb’.
  • The LVM-3 rocket with a total height of 43.5 meters and weight of 640 tons successfully launched the satellites.
  • ISRO chief Somnath said that they are planning to go ahead with the Chandran-3 program in February or June next year.

Exit mobile version