Home TNPSC TNPSC Current Affairs – Oct 09, 2022

TNPSC Current Affairs – Oct 09, 2022

0

CA 09.10.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 09.10.2022

  • உலக தபால் தினம்.
  • உலக தபால் அமைப்பானது, 1874 ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில்  தொடங்கப்பட்டது.
  • உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது.
  • இந்த துரையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

மாநில செய்திகள்

1. மாணவர்களுக்கு புதிய செயலி

  • பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட நவீனமாக்கப்பட்டு வருவதால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • மேலும் மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்க வகை செய்யும் புதிய செயலி (ஆப்) தொடங்கப்பட உள்ளது.
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது டிஜிட்டல் முறையிலான புள்ளி விவரங்களே.
  • கண்ணாடி வழங்கும் திட்டமும் டிஜிட்டல் முறையால் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரங்களின் மூலமே அமலானது.

மத்திய செய்திகள்

1. குழந்தைகள் திருமணம் ஜார்க்கண்ட் முதலிடம்

  • குழந்தை திருமணங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் ஆய்வு நடத்தியது.
  • இதில் நாட்டில் அதிக குழந்தை திருமணம் நடக்கும் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது.
  • இம்மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 5.8 ஆக உயர்ந்துள்ளது.
  • தேசிய அளவில் குழந்தை திருமணங்கள் செய்து கொள்ளும் பெண்களின் சதவீதம் 1.9% ஆகும்.
  • ஜார்கண்டில் குழந்தை திருமணங்கள் கிராமப்புறங்களில் 7.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் மூன்று சதவீதமாகவும் உள்ளன.
  • ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.
  • மேற்கு வங்கத்தில் 54.9% பெண்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
  • ஜார்கண்டில் இந்த எண்ணிக்கை 54.6 சதவீதமாக உள்ளது. இதன் தேசிய சராசரி 29.5 சதவீதமாக உள்ளது.

2. விமானப்படைகள் புதிய ஆயுதப் பிரிவு

  • இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்பு பிரிவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அப்படையின் தலைமை தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்துள்ளார்.
  • அக்னிபத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் பெண்களும் விமானப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இந்திய விமானப்படையின் 90 வது நிறுவன தினம் சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
  • தனி ஆயுத பிரிவு:
  • விமானப்படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்பு பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த பிரிவு அமைக்கப்படுவது சுதந்திரத்திற்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
  • தரையிலும் மாநிலம் உள்ள இலக்குகளை தரையில் இருந்து தாக்கி அளிக்கும் ஏவுகணைகள் தொலைவில் இருந்து ரிமோட் வாயிலாக கட்டுப்படுத்தக்கூடிய விமானங்கள், விமானங்களில் இடம்பெறும் ஆயுதங்கள் உள்ளிட்டவை ஆயுத அமைப்பு பிரிவில் இடம் பெறும்.
  • இதன் மூலமாக அதிகாரிகளுக்கு எளிதில் பயிற்சி அளிக்க முடியும். அதனால் ரூபாய் 3400 கோடி வரை சேமிக்கப்படும்.

CA 09.10.2022(English Version)

Important days

1. 09.10.2022

  • World Postal Day.
  • The Universal Postal System was started in 1874 in Bern, Switzerland.
  • World Postal Day was declared on 9th October 1969 to commemorate the Universal Postal System.
  • This day is celebrated to appreciate the services of this Durai and to make people aware about its schemes.

State news

1. New ‘processor’ for students

  • A number of projects have been launched due to the modernization of school education sector with the introduction of digital technology.
  • Also a new application (app) is going to be launched to help students understand and study the subject.
  • Digitized statistics guide the Chief Minister’s breakfast programme.
  • The scheme of providing glasses is also implemented through digitized statistics.

Central News

1. Child Marriage Jharkhand tops

  • The Office of the Registrar General and Census Commissioner of the Union Ministry of Home Affairs conducted a study on child marriages.
  • Jharkhand has the highest number of child marriages in the country.
  • The percentage of women who marry as children has increased to 5.8 in this state.
  • Nationally the percentage of women in child marriage is 1.9%.
  • Child marriage in Jharkhand is 7.3 percent in rural areas and three percent in urban areas.
  • Jharkhand and West Bengal are the only two states where more than half of the girls are married before the age of 21.
  • In West Bengal 54.9% girls get married before reaching 21 years of age.
  • In Jharkhand this figure is 54.6 percent. The national average is 29.5 percent.

2. Air Force New Weapons Division

  • Indian Air Force Chief of Staff VR Chaudhary said that the Central Government has approved the establishment of a separate weapon system unit for Indian Air Force officers.
  • He also informed that women will also be selected for the Air Force from next year under the ‘Agnipath’ scheme.
  • The 90th Foundation Day of the Indian Air Force was celebrated at the Air Force Base in Chandigarh.
  • Special Weapons Section:
  • The Central Government has approved the creation of a separate Armament Unit for Air Force officers.
  • This is the first time that this unit has been set up since independence.
  • Missiles that attack targets on the ground and in the state from the ground, aircraft that can be controlled from a distance through ‘remote’, weapons carried in the aircraft will be included in the weapon system category.
  • Through this the officers can be easily trained. So Rs 3400 crores will be saved.

Exit mobile version