Home TNPSC TNPSC Current Affairs – Nov 27, 2022

TNPSC Current Affairs – Nov 27, 2022

0

CA 27.11.2022 (Tamil Version)

மாநில செய்திகள்

 1. இலக்கியத் திருவிழா

  • திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் இரண்டு நாள்கள் பொருநை இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது.
  • இந்ந விழாவை, தொடக்கி வைத்து காணொலி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
  • தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளைப் போற்றும் விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி,சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
  • இதில் முதல் நிகழ்வாக, அன்னை மடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டு இருக்கும் இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி.

 2. இலவச பேருந்து சேவை: மாதம் ரூ.888 சேமிக்கும் பெண்கள்

  • இலவச பேருந்து சேவைத் திட்டம் மூலம் மாதந்தோறும் சராசரியாக ரூ.888 என்ற அளவில் மகளிருக்கு சேமிப்பு ஏற்பட்டு வருவதாக மாநில திட்டக்குழு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விவசாய பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், தொழில் வளப்பகுதியான திருப்பூர் மாவட்டம், வர்த்தகப்பகுதியான மதுரை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார செய்திகள்

 1. ரபி பருவம்

  • நடப்பு ரபி பருவத்தில் கோதுமை மற்றும் எண்ணெய் வித்துக்கன் சாகுபடி பரப்பு 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த ஆண்டின் ரபி பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பு 10.5 சதவீதம், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு 13.58 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள்.

 1. ஆதித்யா எல் ஒன்விரைவில்

  • சூரியனை ஆராய்ச்சி செய்யும் ‘ஆதித்யா எல் ஒன்’ விண்ணில் விரைவில் செலுத்தப்படவுள்ளது.
  • தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் எடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 24 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும்.
  • கடந்த 2019-இல் பிரதமர் நரேந்திர மோடி பூடான் பயணம் மேற்கொண்டபோது, தெற்காசிய செயற்கைக்கோளுக்கான தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை திம்புவில் திறந்துவைத்தார். இது, இஸ்ரோ ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும்.

2. பிஎஸ்எல்வி-சி 54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

  • புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 உள்பட 9 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனுடன், வணிக ரீதியில் 8 நானோ செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.
  • அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • வணீக ரீதியில் விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் ஐஎன்எஸ் 2பி மற்றும் ஆனந்த் செயற்கைக்கோள், தைபோல்ட் செயற்கைக்கோள் (2), ஆஸ்ட்ரோகாஸ்ட் செயற் கைக்கோள் (4) என 8 நானோ செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
  • 9 செயற்கைக்கோள்களின் முக்கியப் பயன்கள் என்ன?
  • புவி கண்காணிப்புக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ள இஓஎஸ்-06 செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன ஆர்கோஸ் தொழில்நுட்பம் மற்றும் கு-பேண்ட் மூலம் கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், காற்றின் வேகம் ஆகியவை கண்காணிக்கப்படும்.
  • மேலும், இது கடல் நிறம், காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்
  • ஐஎன்எஸ் 2பி:
  • இந்தியா-பூடான் ஒப்பந்தத்தின் அடிப்படையில். ஐஎன்எஸ்2 பி2 நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
  • ஆனந்த் சாட்:
  • பெங்களூரை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘பிக்செல்’, ஆனந்த் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
  • நாட்டின் முதல் தனியார் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இதுவாகும். இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், பூமியை விரிவாக படம்பிடிக்க முடியும். குறைந்த வட்டப் பாதையில் செயற்கைக்கோள் சுற்றி வரும்.
  • தைபோல்ட்:
  • ஹைதராபாதை தளமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான துருவா ஸ்பேஸ் உருவாக்கிய தைபோல்ட் 2 செயற்கைக் கோள்கள், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் காக ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஓராண்டு ஆகும்.
  • ஆஸ்ரோகாஸ்ட் 4 செயற்கைக்கோள்:
  • அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட்டின் செயற்கைக் கோள் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஆஸ்ரோகாஸ்ட் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

CA 27.11.2022 (English Version)

State news

  1. Literary festival

  • A two-day Borunai Literary Festival is being held at palayankottai, Tirunelveli District.
  • Inaugurating the ceremony, Chief Minister M.K.Stalin spoke through video:
  • The Tamil Nadu government organizes five literary festivals namely Borunai, Vaigai, Kaveri, Siruvani and Chennai to celebrate the rich literary traditions of Tamil.
  • As the first event, the Literary Festival which is being conducted on the banks of Annai Madiyana Borunai River is a great initiative.
  •  

2. Free bus service: Women who save Rs.888 per month

  • According to the study by the State Planning Commission, the monthly saving of Rs.888 per woman is on an average through the free bus service scheme.
  • Field studies were carried out in three districts namely Nagapattinam district which is an agricultural area, Tirupur district which is an industrial area and Madurai district which is a commercial area.

Economic news

 1. Rabi season

  • The Union Agriculture Ministry has informed that the area under wheat and oilseed cultivation has increased by more than 10 percent during the current rabi season.
  • According to the statistics published by the Union Ministry of Agriculture, wheat cultivation area has increased by 10.5 percent and oilseeds cultivation area by 13.58 percent in this year’s Rabi season.

Satellite.

   1. Aditya L One- Soon

  • Aditya L One, a solar probe, will be launched soon.
  • Excavation of land for setting up a rocket launch pad in Tamil Nadu’s Kulasekaranpattinam is underway. The works will be completed and operational within 24 months.
  • When Prime Minister Narendra Modi visited Bhutan in 2019, he inaugurated the ground control station for the South Asian satellite in Thimphu. It is set up with the support of ISRO.

 2. PSLV-C 54 rocket launched.

  • PSLV-C54 rocket launched with 9 satellites including EOS-06 for earth observation.
  • ISRO planned to launch EOS-06 earth observation satellite by PSLV C-54 rocket. Along with this, ISRO plans to launch 8 nanosatellites commercially.
  • Accordingly, the PSLV C-54 rocket was successfully launched from the first base of the Satish Dhawan Space Research Center in Sriharikota, Andhra Pradesh.
  • India’s commercially launched INS 2B and 8 nanosatellites such as Anand satellite, Diebold satellite (2) and Astrogast operational satellite (4) were placed into orbit in the next few hours.
  • 9 What are the main uses of satellites?
  • The advanced ARGOS technology used in the EOS-06 satellite launched for earth observation and the temperature change in the sea and wind speed will be monitored through Ku-band.
  • Also, it will continuously monitor and provide data on activities including ocean color, wind direction variations, optical changes occurring in the atmosphere.
  • INS 2B:
  • Based on India-Bhutan Agreement. INS2 P2 nano satellite is designed. This satellite is launched for development of information technology.
  • Anand Chad:
  • Bengaluru-based space technology start-up ‘Pixel’ has designed the Anand satellite.
  • It is the country’s first private earth observation satellite. This satellite is equipped with a sophisticated camera. With it, the Earth can be imaged in detail. A satellite orbits in a low circular orbit.
  • Diebold :
  • Diebold 2 satellites developed by Hyderabad-based start-up Dhruva Space have been launched for information technology research. The lifetime of this satellite is one year.
  • Astrogast 4 Satellite:
  • US Space Flight’s satellite Astrocast is launched for technological research development.

Exit mobile version