TNPSC Current Affairs – Nov 14, 2022

0
46

CA 14.11.2022 (Tamil Version)

முக்கிய தினங்கள் 

 1. 14-11-22 

 • தேசிய குழந்தைகள் தினம் 
 • உத்திரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு – சுவரூபராணி தம்பதியருக்கு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மூத்த மகனாகப் பிறந்தார், ஜவஹர் லால் நேரு. செல்வ வளம் பொருந்திய வீட்டில் பிறந்த இவரது தந்தை வழக்கறிஞராக பணியாற்றினார்.  
 • காஷ்மீர் கால்வாயைக் குறிக்கும் ‘நெகர்’ என்ற சொல்லே, மருவி ஜவஹர்லால் நேரு பரம்பரையைக் குறிக்கும் ‘நேரு என்று மாறியது. 
 • 1916-ம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு, தனது தந்தையுடன் சென்ற நேரு, அங்கு காந்தியடிகளைச் சந்தித்தார். 
 • இருப்பினும் 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை சம்பவமே, நேருவை முழுமையாக காங்கிரசில் சேர்ந்து நாட்டிற்காக போராடத் தூண்டியது. 
 • 1920-ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, முதன் முறையாக சிறைக்குச் சென்றார். ஜவஹர்லால் நேரு, விரைவிலேயே காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார். 
 • தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் உலக வரலாற்றின் காட்சிகள்‘, ‘சுயசரிதை‘, “இந்தியாவின் கண்டுபிடிப்பு உள்ளிட்ட நூல்களை எழுதினார்.  
 • 1929-ம் ஆண்டு லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் நிகழ்ச்சியை நேரு தலைமையேற்று நடத்தினார். ஆங்கிலேயே அரசின் பிடியில் இருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் பிரகடனப்படுத்தினார். 
 • 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததும், டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது.  
 • 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவரது அஸ்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை  இந்திய தேசம் முழுவதும் தூவப்பட்டது.  
 • குழந்தைகளிடம் அன்போடு பழகிவந்த, ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், இந்தியாவின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

நியமனம் 

 1. அமெரிக்க நீதிபதியாக கே.பி.ஜார்ஜ் மீண்டும் தேர்வு 

 • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் பெண்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கே.பி. ஜார்ஜ் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 
 • கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கே.பி. ஜார்ஜ் (57). அமெரிக்காவில் குடியேறிய இவர், அந்நாட்டில் உள்ள ஃபோர்ட் பெண்ட் பகுதிக்கான நீதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.  
 • இந்தத் தேர்தலில் சுமார் 2.46 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட குடியரசுக்கட்சியின் ட்ரெவர் நெல்ஸை கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வீழ்த்தினார். அவருக்கு 52 சதவீத வாக்குகள் பதிவாகின.  
 • இதன்மூலம் ஏற்கெனவே ஃபோர்ட் பெண்ட் நீதி பதியாகப் பதவி வகித்து வந்த ஜார்ஜ், அந்த பகுதி நீதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

விளையாட்டு செய்திகள் 

 1. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 

 • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று வாகை சூடியது. 
 • இந்த ஃபார்மட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் ஆகியிருக்கும் இங்கிலாந்து, இரு முறை டி20 உலகக் கோப்பை வென்ற 2-ஆவது அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 
 • ஆட்ட, போட்டி நாயகன்: 
 • இந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் நாயகனாக. முக்கியமான தருணங்களில் அபாரமாகப் பந்துவீசிய இங்கிலாந்தின் சாம் கரன் தேர்வானார். 
 • அதிக ரன்கள்: 
 • விராட் கோலி (இந்தியா)-296 
 • அதிக விக்கெட்டுகள்: 
 • வனிந்து ஹசரங்கா (இலங்கை)-15 
 • சிறந்த பௌலிங் (ஒரு இன்னிங்ஸ்): 
 • சாம் கரன் (இங்கிலாந்து)-5/10 
 • இதுவரை சாம்பியன்கள்: 
ஆண்டு அணி 
2007 இந்தியா 
2009 பாகிஸ்தான் 
2010 இங்கிலாந்து 
2012 மேற்கிந்தியத் தீவுகள் 
2014 இலங்கை 
2016 மேற்கிந்தியத் தீவுகள் 
2021 ஆஸ்திரேலியா 
2022 இங்கிலாந்து 

மாநாடு 

 1. ஜி20 உச்சிமாநாடு: 

 • ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியாவுக்கு செல்கின்றார் 
 • பெரும் பொருளாதார நாடுகளின் சங்கமமாக கருதப்படும் இந்த மாநாடு, இந் தோனேசியாவின் பாலி தீவில் நவ.15, 16-இல் நடைபெறுகிறது.  
 • இதில், உலகப்பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், எண்மரீதியிலான மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர். 
 • உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்மரீதியிலான மாற்றம், சுகாதாரம் தொடர்பான மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறைச்செயலர் வினய் குவாத்ரா தெரிவித்தார். 
 • தற்போது ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா வகிக்கும் நிலையில், டிசம்பர் 1-இல் அப்பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்கவுள்ளது. இதனால், இந்த மாநாடு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
 • உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20இல், ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா,பிரான்ஸ்,ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 
 • உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும் இந்தக்கூட்டமைப்பு நாடுகள் பங்களிக்கின்றன.  
 • உலக மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கை இந்நாடுகள் கொண்டுள்ளன. 

CA 14.11.2022 (English Version)

Important Days 

 1. 14-11-22 

 • National Children’s Day 
 • Jawahar Lal Nehru was born on November 14, 1889 to Motilal Nehru and Suvaruparani in Allahabad, Uttar Pradesh. Born in a wealthy family, his father worked as a lawyer. 
 • The word ‘Negar’ referring to the Kashmir Canal was changed to ‘Nehru’ referring to the lineage of Maruvi Jawaharlal Nehru. 
 • In 1916, Nehru accompanied his father to the Congress meeting in Lucknow where he met Gandhiji. 
 • However, it was the Jallianwala Bagh massacre in 1919 that motivated Nehru to fully join the Congress and fight for the country. 
 • In 1920, he participated in the non-cooperation movement of Gandhijis and went to jail for the first time. Jawaharlal Nehru soon became one of Gandhi’s confidants. 
 • Nehru spent 9 years of his life in prison, during his prison days he wrote books including ‘Views of World History’, ‘Autobiography’, ‘Discovery of India’. 
 • Nehru presided over the program of the Indian National Congress held in Lahore in 1929. He declared that he wanted complete independence from the grip of the British government. 
 • On 15th August 1947 when India became independent, Nehru was given the distinction of hoisting the flag of independent India in Delhi. 
 • He was the Prime Minister of India from 15th August 1947 till his death on 27th May 1964. His ashes were scattered all over the Indian nation from Kanyakumari to Kashmir. 
 • The birthday of Jawaharlal Nehru, who loved children, is celebrated as Children’s Day in India. 

Appointment 

  1. KP George re-elected as US judge 

 • Indian-origin K.P.George has been re-elected is a judge at Fort Bend, Texas, USA.  
 • A native of Kerala, K.P. George (57). He immigrated to the United States and ran for the Democratic Party in the judge election for the Fort Bend area in that country. 
 • With around 2.46 lakh votes cast in this election, George defeated his opponent Trevor Nels of the Republican party by almost 8,000 votes. He got 52 percent of the votes. 
 • With this, George, who was already serving as Fort Bend Texas Justice  has been re-elected as that area judge. 

Sports News 

 1. 8th T20 World Cup Cricket 

 • England beat Pakistan by 5 wickets in the final match of the 8th T20 World Cup held in Australia. 
 • Reigning as World Champions after 12 years in this format, England became only the 2nd team to win the T20 World Cup twice. 
 • Man of the Match: 
 • Man of this T20 World Cup. England’s Sam Curran, who bowled brilliantly at crucial moments, was selected. 
 • Most Runs: 
 • Virat Kohli (India)-296 
 • Most Wickets: 
 • Vanindu Hazaranga (Sri Lanka)-15 
 • Best Bowling (Per Innings): 
 • Sam Curran (England)-5/10 
 • Champions so far 
Year Team 
2007 India 
2009 Pakistan 
2010 England 
2012 West Indies 
2014 Sri Lanka 
2016 West Indies 
2021 Australia 
2022 England 

Conference 

 1. G-20 Summit: 

 • Prime Minister Narendra Modi is on a three-day official visit to Indonesia to attend the G-20 Summit. 
 • This conference, which is considered as a confluence of major economic countries, is being held on November 15 and 16 in Bali, Indonesia. 
 • In this, Prime Minister Modi and the leaders of the Member States will mainly discuss the global economy, energy, environment, digital transformation, Ukraine issue and its implications. 
 • Indian External Affairs Secretary Vinay Quadra said that Prime Minister Modi will participate in three important sessions related to food and energy security, digital transformation and health. 
 • While Indonesia currently holds the G-20 presidency, India will formally take over on December 1. Thus, this conference is important for India. 
 • In G-20, a group of important developed and developing countries in the world, Argentina, Australia, Brazil, Canada, China, France, Germany, India, Indonesia, Italy, Japan, South Korea, Mexico, Russia, Saudi Arabia, South Africa, Turkey, Britain, The United States and the European Union are also present. 
 • These confederation countries contribute 85 percent of the world’s total production and 75 percent of international trade. 
 • These countries have two-thirds of the world’s population.