TNPSC Current Affairs – Nov 04, 2022

0
31

CA 04.11.2022(Tamil Version)

முக்கிய தினங்கள் 

 1. 04-11-22 

 • உலகின் மிகப் பிரமிப்பான புதையல் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு தினம்.  

மத்திய செய்திகள் 

 1. சினேரியஸ் வகை கழுகு 

 1. ஒக்கி புயலால் சிக்கி கண்டெடுக்கப்பட்ட சினேரியஸ் வகை கழுகு சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 
 2. சினேரியஸ் வகை கழுகானது அதிக தொலைவு இடம் பெயா்ந்தும், கூட்டமாக வாழும் ஒரு சமூகப் பறவையாகும். இந்தக் கழுகானது, ஒக்கி புயல் ஏற்பட்ட நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. 
 3. தற்போது இந்தக் கழுகு நல்ல நிலையில் இருப்பதால், இதை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கெரு என்ற இடத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.  
 • இங்குள்ள பூங்காவில் வளா்ப்பு கழுகுகளை பராமரிக்கத் தேவையான வசதிகள் உள்ளன. 
 • கழுகானது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் ஜோத்பூா் உயிரியல் பூங்காவுக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மரணம் 

 1. மலையாள எழுத்தாளர் டி.பி. ராஜீவன் காலமானார் 

 • மலையாள இலக்கிய வட்டாரத்தில் டி.பி. என்று அறியப்பட்ட ராஜீவன், கவிதை, நாவல், பயணநூல், திரைக்கதை உள்ளிட்ட இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். 
 • அவர் எழுதிய பாலேரிமாணிக்கம் என்னும் நாவல் அதே பெயரில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.  
 • கே.டி.என். கோட்டூர்: எழுத்தும் ஜீவிதமும் என்ற நாவலுக்காக கேரள சாகித்ய அகாதெமி விருது அவருக்கு கடந்த 2014-இல் வழங்கப்பட்டது.  
 • கிரியாசேஷம், குஞ்ஞாலி மரக்கார் உள்ளிட்டவை அவரின் பிற முக்கியப் படைப்புகளாகும். இவர் தச்சம்பொயில்ராஜீவன் என்ற பெயரில் ஆங்கிலக் கவிதைகளையும் எழுதியுள்ளார். 

விருது 

 1. அப்துல் கலாமுக்கு அணுவிரத் புரஸ்கார் விருது 

 • மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் .பி.ஜெ. அப்துல் கலாமுக்கு ‘அணுவிரத் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.  
 • ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அணுவிரத் என்ற தனியார் சேவை மையத்தை 1949ஆம் ஆண்டு தொடங்கினார்.  
 • உலக அமைதி, சமநிலைத் தன்மை, பூமி பாதுகாப்பு, ஜாதிமதபேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் பல்வேறு போதனைகளை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உணர்த்தி வருகின்றார்.  
 • இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தினார் இணைந்து வழிநடத்தி வருகின்றனர் 
 • மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான அணுவிரத் புரஸ்கார் விருதை அளிக்க விருதுக்குழு பரிந்துரைத்தது.  
 • அதன்படி ராஜஸ்தான் மாநிலம், கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் குடும்பத்தினா் சார்பில் ‘ஹவுஸ் ஆஃப் கலாம்’ மற்றும் அப்துல் கலாம் இன்டா்நேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளான கலாமின் அண்ணன் மகன் ஆ.ப.ஜெ.மு.ஜெயினுலாபுதீன், பேரன்கள் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் தாவூது, ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம் இணைந்து விருதைப் பெற்றுக் கொண்டனா். 
 • முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா, இடைக்காலப் பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் பைரோன் சிங் ஷெகாவத், பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

மாநில செய்திகள் 

 1. 2020-21ம் ஆண்டு கல்வி செயல்பாடு தமிழகம், புதுவை மூன்றாவது இடம் 

 • ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டில் தமிழகம், புதுச்சேரிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. 
 • ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டை நேற்று வெளியிட்டது. பள்ளிக் கல்வி அமைப்புமுறையின் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த தரிவரிசை குறியீடு வழங்கப்படுகிறது. 
 • இதன்படி, தமிழகம்,புதுவை ஆகியவை முறையே ஆயிரத்துக்கு 855, 897 புள்ளிகள் பெற்று 3வது நிலையில் உள்ளன.  
 • தமிழகம்:- 
 • கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகள்,  
 • அணுகல் பிரிவில் 78 புள்ளிகள்.  
 • உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் 131 புள்ளிகள்,  
 • சமத்துவம் என்ற பிரிவில் 183 புள்ளிகள்,  
 • ஆளுகை நடைமுறை என்ற பிரிவில் அதிகபட்சமாக 331 புள்ளிகள்  
 • புதுச்சேரி:- 
 • கற்றல் வெளிப்பாடுகளில் 124 புள்ளிகள்,  
 • அணுகலில் 76 புள்ளிகள்,  
 • உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகளில் 134 புள்ளிகள்,  
 • சமத்துவப் பிரிவில் 220 புள்ளிகள்,  
 • ஆளுகை நடைமுறையில் 343 புள்ளிகள் 

நூற்றாண்டு தினம் 

  1. உலகின் மிகப் பிரமிப்பான புதையல்கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு தினம் 

 • தொல்லியல் ஆய்வாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில், பழங்கால மக்கள் பயன்படுத்திய ஏராளமான அரிய பொருள்களையும், மண்ணுக்குள் புதைந்து கிடந்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற மதிப்பு மிக்க பொருள்களையும் தோண்டி எடுத்து இருக்கிறார்கள். 
 • உலகம் முழுவதும் கிடைத்த தொல்பொருள் புதையல்களிலேயே மிக அதிகமான மதிப்புக் கொண்ட புதையல் தோண்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு தினம், இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. 
 • அந்தப் பிரமாண்ட புதையலின் சொந்தக் காரர், எகிப்து மன்னர் டூடங்காமன். 10 வயதில் மன்னராகப் பதவி ஏற்று, 19-வது வயதில் மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர் டூடங்காமன். 
 • தந்தை அகெனாடென் திடீர் என்று மரணம் அடைந்ததால், டூடங்காமன், 10 வயதில் மன்னர் பொறுப்பு ஏற்றார். 19-வது வயதில், கி.மு. 1323-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். 
 • மரணம் அடைபவர்களின் ஆன்மா அழியாது;  
 • அந்த ஆன்மா உடலை எடுத்துக் கொண்டு மறு உலகில் வாழும் என்ற நம்பு காரணமாக எகிப்து மக்கள், மரணம் அடைபவர்களின் உடல், எரிப்பது இல்லை. 
 • பல்வேறு மூலிகைகள், ரசாயன திரவங்களைக் கொண்டு, இறந்தவரின் உடலைப் பதப்படுத்தி சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடுவார்கள்.  
 • அப்படிப் பாதுகாக்கப்பட்ட உடல்கள், மம்மி என்று அழைக்கப்பட்டன. 
 • பழங்கால மன்னர்களின் மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு எகிப்தின் வரலாற்றை எழுத முயன்ற ஆய்வாளர்கள், அந்தக் கல்லறைகள் எங்கே இருக்கின்றன என்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 
 • மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த பல மன்னர்கள் மற்றும் ராணிகளின் கல்லறைகள், தீப்ஸ் என்று முன்னர் அழைக்கப்பட்ட லக்ஸார் நகரின் பாலைவனப் பகுதியில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். 
 • அங்கே மன்னர்கள் புதைக்கப்பட்ட இடம், மன்னர்களின் பள்ளத்தாக்கு (கிங்ஸ் வேல்லி) என்றும், ராணிகளின் கல்லறைகள் இருந்த இடம், ராணிகளின் பள்ளத்தாக்கு (குயீன்ஸ் வேல்லி) என்றும் அமைக்கப்படுகின்றன. 
 • பல மன்னர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடைசி பரம்பரை மன்னரும், மர்மமாக இறந்தவருமான டூடங்காமன் என்பவர் கல்லறை இருக்கும் இடம் மட்டும் எங்கே இருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. 
 • இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹோவர்டு கார்ட்டர் என்பவர், 17 வயதில் எகிப்து நாட்டுக்குச் சென்று, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்லறைகளில் உள்ள கல்வெட்டு மற்றும் சித்திர எழுத்துக்களைப் பதிவு செய்யும் பணியைச் செய்தார். 
 • டூடங்காமன் பற்றி அறிந்த கார்ட்டர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரரான கார்னர்வன் ஜார்ஜ் ஹெர்பெர்ட் என்பவரின் பண உதவியுடன், மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதியில், டூடங்காமன் கல்லறையைப் பல ஆண்டுகளாகத் தேடினார். 
 • மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு. 1922 ஆம் ஆண்டு நவம்பர் 4ந் தேதி, டூடங்காமன் கல்லறையை கார்ட்டர் கண்டுபிடித்தார். 
 • 3,300 ஆண்டுகளாக மூடிக்கிடந்த அந்தக்கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அலிபாபா குகைப் புதையல்போல, அங்கே ஏராளமான பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன. 
 • டூடங்காமன் கல்லறையில் கிடைத்த, விலை மதிப்பு மிக்க புதையல் பொருள்கள் சிலவற்றின் விவரம் – 
 • 10 கிலோ எடையுள்ள தங்க முகக்கவசம். (இதன் மீது வைரம், வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன). 
 • 110 கிலோ எடை கொண்ட தங்கச் சவப் பெட்டி.  
 • தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள். 
 • டூடங்காமன் உடல் பாகங்களைக் கொண்ட ஜாடிகள் வைக்கப்பட்டு இருந்த தங்கப் பெட்டி. 
 • தங்கச் செருப்பு.  
 • தங்கமுலாம் பூசப்பட்டு மரத்தால் செய்யப்பட்ட பசு மாட்டின் முகம். 
 • தங்கத்தால் ஆன புலியின் முகச் சிற்பம். 
 • தங்கப் படுக்கை. 
 • தமிழகத்தின் பழங்கால ஆயுதமான வளரிகள். 

CA 04.11.2022(English Version)

 Important Days 

   1. 04-11-22 

 • Centenary day of the discovery of the world’s most amazing treasure. 

Central News 

        1. A cinereous type of eagle 

 • A cinereous vulture found trapped by Cyclone Ockhi was airlifted from Chennai to Jodhpur. 
 • The cinereus vulture is a long-distance, gregarious social bird. This eagle was found at Asaripallam in Kanyakumari district at the time of Cyclone Ockhi. 
 • As the eagle is now in good condition, it was released in Jodhpur, Rajasthan, 20 km from the city. It has been decided to leave at a distant place called Keru.  
 • The park here has facilities for rearing eagles.  
 • The eagle was flown from Chennai airport to Jodhpur zoo on Thursday by an Air India flight, according to a press release issued by the forest department. 

Death 

        1. Malayalam writer D.P. Rajeev passed away 

 • In Malayalam literary circles D.P. Rajeevan, popularly known as, has contributed significantly in various fields of literature including poetry, novel, travelogue, screenplay. 
 • His novel ‘Balerimaanikkam’ was released as a movie of the same name starring actor Mammootty. 
 • He was awarded the Kerala Sahitya Akademi Award in 2014 for his novel KTN Kottoor: Chhydum Jeevithum.  
 • His other important works include Kriyasesham, Kunjali Marakar
 • He has also written English poetry under the name Thachampoilrajeevan. 

Award 

         1. Anuvirath Puraskar Award 

 • Late former President A.P.J. Abdul Kalam was awarded ‘Anuvirath Puraskar’.  
 • In 1949 Swami Acharya Tulsi from Rajasthan started a private service center called Anuvirath. 
 • Through this center which was created with the aim of world peace, balance, earth protection, casteism and casteism throughout the world, he is spreading various teachings throughout the world.  
 • This organization is jointly run by Jain community 
 • The award committee has recommended the late former President Abdul Kalam for the 2022 Anuvirath Puraskar award.  
 • Accordingly, on behalf of Abdul Kalam’s family, in a program held on October 31st in Chabar, Rajasthan, Kalam’s nephew A.P.J.M. Jainulabuddin, grandsons A.P.J.M. J.Sheikh Dawood received the award together with A.P.J.M.J.Sheikh Salim. 
 • Former President Shankar Dayal Chama, Interim Prime Minister Gulzarilal Nanda, Former Prime Minister Manmohan Singh, Former Vice President Byron Singh Shekhawat, Senior BJP leader L.K. Advani and others have already been given this award. 

State news 

         1. 2020-21 educational activity in Tamil Nadu, Puducherry is third 

 • Tamil Nadu and Puducherry have been ranked third in the performance ranking index of states and union territories for the year 2020-21 by the Union Ministry of Education. 
 • The Department of School Education and Literacy under the Union Ministry of Education has released the Performance Ranking Index of States and Union Territories for the year 2020-21 yesterday. 
 • This ranking index is given based on the functioning of the school education system. 
 • According to this, Tamil Nadu and Puducherry have scored 855 and 897 points per thousand respectively and are in the 3rd position. 
 • Tamil Nadu:- 
 • 132 points in the Learning Expressions section, 
 • 78 points in the accessibility category. 
 • 131 points in infrastructure and facilities, 
 • 183 points in the Equality category, 
 • Maximum 331 marks in the Governance Practice category 
 •  Puducherry:- 
 • 124 points in Learning Expressions, 
 • 76 points in access, 
 • 134 points in infrastructure and facilities, 
 • 220 points in the Equality section, 
 • 343 points in governance practice  

Centenary Day 

         1. 100th anniversary of the discovery of the world’s most amazing treasure 

 • Archaeologists, in various parts of the world, have unearthed many rare objects used by ancient people and valuable objects such as gold, diamonds, and vitriol buried in the soil. 
 • The centenary of the unearthing of the world’s most valuable archaeological treasure is being celebrated on a grand scale today (Friday). 
 • The owner of that great treasure was Tutankhamun, the king of Egypt. Became king at the age of 10 and died mysteriously at the age of 19 
 • Due to the sudden death of his father Akhenaten, Tutankhamun became king at the age of 10. At the age of 19, B.C. He died in 1323. 
 • The souls of those who die are immortal;  
 • The Egyptians did not cremate the bodies of the dead because of the belief that the soul would take over the body and live on in the afterlife. 
 • The body of the deceased is treated with various herbs and chemical liquids and buried in a coffin 
 • They will let Bodies so preserved called ‘mummies’. 
 • Researchers trying to write the history of Egypt with the information found in the tombs where the mummies of ancient kings were buried, conducted a search to find out where those tombs are. 
 • They discovered the tombs of many of the kings and queens who ruled Egypt three thousand five hundred years ago in the desert area of ​​the city of Luxor, formerly known as Thebes
 • The burial place of the kings there is called the Valley of the Kings (Valley of the Kings) and the tombs of the queens are called the Valley of the Queens (Queens Valley)
 • While the tombs of many kings have been discovered, no one knows the location of the tomb of Tutankhamun, the last lineal king who died mysteriously. 
 • Englishman Howard Carter traveled to Egypt at the age of 17 to record the inscriptions and pictographs found in ancient tombs. 
 • Knowing about Tutankhamun, Carter spent several years searching for Tutankhamun’s tomb in the Valley of the Kings with the help of money from English millionaire Carnarvon George Herbert. 
 • Exactly one hundred years ago. On November 4, 1922, Carter discovered the Tutankhamun tomb. 
 • When the tomb, which had been closed for 3,300 years, was opened, many treasures were piled up there, like the Alibaba Cave treasure. 
 • Description of some of the valuable treasures found in Tutankhamen Tomb – 
 • 10 kg gold mask. (It was studded with diamonds and vitreous stones). 
 • Golden coffin weighing 110 kg. 
 • Thrones made of gold. 
 • Golden box containing jars containing Tutankhamun’s body parts. 
 • Golden sandal. 
 • Cow face made of wood with gold plating. 
 • Gold tiger face sculpture. 
 • Golden bed. 
 • Valaris, an ancient weapon of Tamil Nadu.