Home TNPSC TNPSC Current Affairs – Nov 03, 2022

TNPSC Current Affairs – Nov 03, 2022

0

CA 03.11.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

 1. 03-11-22

  • சவாய் ஜெய் சிங், அன்னபூர்ணா மகாராணா, அமர்த்தியா சென் மற்றும் மானவ்ஜித் சிங் சந்து ஆகியோரின் பிறந்தநாள்.
  • அன்னபூர்ணா மகாராணா:-
  • அவர் ஒரு முக்கிய சமூக மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலராகவும் இருந்தார்.
  • சவாய் ஜெய் சிங்:-
  • ஒரு துணிச்சலான மற்றும் மிகவும் இராஜதந்திர மன்னர். இவரை ‘இரண்டாம் ஜெய்சிங்’ என்றும் அழைப்பர்.
  • அமர்த்தியா சென்:-
  • 1998 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆசியர்.
  • மானவ்ஜித் சிங் சந்து:-
  • 2006 இல், ஜாக்ரெப்பில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் ட்ராப்ஷூட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • மேஜர் சோம்நாத் சர்மா:-
  • அக்டோபர்-நவம்பர் 1947 இன் இந்தோ-பாக் போரில் பணியாற்றிய இந்திய இராணுவத்தின் குமாவோன் படைப்பிரிவின் 4 வது பட்டாலியனின் டெல்டா நிறுவனத்தின் ஒரு நிறுவன-தளபதி.
  • சிதம்பரம் பிள்ளை:-
  • சிதம்பரம் பிள்ளை ‘பேங்-பாங்’க்கு எதிரான இயக்கத்தில் சுதேசியைப் பிரச்சாரம் செய்தார்.

மத்திய செய்திகள்

 1. உர மானியம் ரூ. 51,875 கோடி மத்தியஅமைச்சரவை ஒப்புதல்

  • பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான ரூ.51,875 கோடி மானியத்துக்கு மத்தியஅமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது
  • 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை பாஸ்பேட் பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், சல்ஃபர் போன்ற ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • அதன்படி, நைட்ரஜனுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாஷுக்கு ரூ.23.65, சல்ஃபருக்கு ரூ.6.12 கிலோவுக்கு மானியமாக வழங்கப்படும்.
  • இதன்மூலம் மொத்தம் ரூ.51,875 கோடி அளவுக்கு மானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • எத்தனால் விலை உயா்வு:
  • பெட்ரோலில் கலக்கப்படும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை ரூ.63.45 -லிருந்து (லிட்டா்) ரூ. 65.61-ஆக உயா்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • இதேபோல், சி-ஹெவி மொலாசஸ் முறையில் பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை ரூ.46.66- லிருந்து (லிட்டா்) ரூ. 49.41-ஆகவும், பி-ஹெவி முறையில் பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை ரூ.59.08-லிருந்து ரூ.60.73-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது
  • தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த ரூ.40 ஆயிரம் கோடி, விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
  • அடுத்த ஆண்டு முதல் எத்தனால் கலப்பை 12 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விமான நிலையம் பெயா் மாற்றம்:
  • அருணாசலபிரதேச தலைநகா் இட்டா நகா், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகா் என்று பெயா் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அருணாசலபிரதேசம்

  • தலைநகரம்: இட்டாநகர் (நிர்வாகக் கிளை)
  • முதல்வர்: பெமா காண்டு
  • அதிகாரப்பூர்வ விலங்கு: கயல்

மாநில செய்திகள்

1. ராஜராஜ சோழன் பிறந்த தினம் அரசு விழா

  • ‘மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினம், அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் ஆண்டுதோறும், சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
  • இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த தினம், அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
  • சதய விழா:
  • உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
  • நிகழாண்டு ராஜராஜ சோழனின் 1037-ஆவது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிவில் புதன்கிழமை தொடங்கியது.

ஏவுகணை

 1. இலக்குகளை இடைமறித்து தாக்கும் ஏடி-1 ஏவுகணை சோதனை வெற்றி

  • இலக்குகளை இடைமறித்து தாக்கும் ஏடி-1 ஏவுகணை முதல்முறையாக வானில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
  • ஏடி-1 என்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கி.மீ. உயரத்துக்கு கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாக பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தொலைதூரத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறித்து தாக்கும். இந்த ஏவுகணை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு அமைப்பு, வழிகாட்டுமுறைகளைக்கொண்டுள்ளது.
  • இந்த ஏவுகணை ஒடிஸாவில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவின் கடற்கரையையொட்டி, வெவ்வேறு இடங்களில் முதல்முறையாக வானில் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

பொருளாதார செய்திகள்

 1. கோதுமை ஏற்றுமதி ரூ.12,200 கோடி இரு மடங்கு உயர்வு

  • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் 1.48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,200 கோடி) மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
  • முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 630 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.5,200 கோடி) மதிப்பிலான கோதுமை ஏற்றுமதியாகி இருந்தது.
  • ஒட்டுமொத்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு இந்த 6 மாதத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.05 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.91 ,000 கோடி) இருந்த ஏற்றுமதி, இப்போது 13.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

நியமனம்

 1. சிஆர்பிஎஃப் பெண் அதிகாரிகள் முதல்முறையாக ஐ.ஜி.யாக நியமனம்

  • மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) கலவரத் தடுப்பு சிறப்புப் பிரிவான அதிவிரைவுப் படை (ஆா்ஏஎஃப்) ஐ.ஜி.யாக முதல்முறையாக பெண் அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அதேபோல், சிஆா்பிஎஃப்-இன் பிகார் பிரிவுக்கும் முதல்முறையாக பெண் ஐ.ஜி. நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான சிஆா்பிஎஃப்-இல் (3.25 லட்சம் பணியாளா்கள்), பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு கடந்த 1987ஆம் ஆண்டில் முதல் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
  • இந்நிலையில், சிஆா்பிஎஃப் அதிவிரைவுப் படை ஐ.ஜி.யாக பெண் அதிகாரி ஆனி ஆப்ரஹாம், பிகார் பிரிவு ஐ.ஜி.யாக சீமா துந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அப்படையின் தலைமை அலுவலகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிவிரைவு படைக்கு பெண் ஐ.ஜி. தலைமை தாங்குவது இதுவே முதல்முறையாகும்.
  • இவ்விருவரும் கடந்த 1987-இல் முதல்முறையாக சிஆா்பிஎஃப் பணியில் இணைந்த பெண் அதிகாரிகள் பிரிவைச் சோ்ந்தவா்களாவா்.
  • ஐ.நா.வில் இந்திய பெண்கள் காவல் குழுவுக்கு ஏற்கெனவே தலைமை தாங்கிய இவா்கள், சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவா் காவல் பதக்கத்தையும் பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                           சிஆா்பிஎஃப்(CRPF)

  • தலைமையகம்: புது தில்லி
  • உருவாக்கப்பட்டது: 27 ஜூலை 1939; (கிரவுன் பிரதிநிதியின் காவல்துறையாக); 28 டிசம்பர் 1949; 72 ஆண்டுகளுக்கு முன்பு

உலக செய்திகள்

 1. ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ பெற மாதம் ரூ. 662 கட்டணம்

  • ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப் பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை ப்ளூ (டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ.662) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
  • போலிகணக்குகளைத்தடுக்க ட்விட்டர் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற நீதிமன்ற விமர்சனத்துக்கு உள்ளான பிறகு 2009-இல் ப்ளூ டிக்‘ சேவையை அந்த நிறுவனம் தொடங்கியது.

 2. இஸ்ரேல்: மீண்டும் பிரதமராகிறார் நெதன்யாகு

  • இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கு கணிப்பு முடிவுகள், ஆளும் லிகுட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிப்பதால், அந்த நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஏற்கெனவே இஸ்ரேலில் அதிக காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ள நெதன்யாகு. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமராவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

CA 03.11.2022(English Version)

Important Days

    1. 03-11-22

  • The birth anniversary of Sawai Jai Singh, Annapurna Maharana, Amartya Sen, and Manavjit Singh Sandhu.
  • Annapurna Maharana-
  • She was also a prominent social and women’s rights activist.
  • Sawai Jai Singh
  • a brave and very diplomatic king . He is also known as ‘Jaisingh II’
  • Amartya Sen-
  • The first Asian to receive the 1998 Nobel Prize for Economics.
  • Manavjit Singh Sandhu-
  • In 2006, he won a gold medal in trapshooting at the World Championships in Zagreb.
  • 3 November is also observed as the death anniversary of Major Somnath Sharma, and Chidambaram Pillai.
  • Major Somnath Sharma-
  • a company-commander of the Delta Company of the 4th Battalion of the Kumaon Regiment of the Indian Army, which served in the Indo-Pak war of October–November 1947.
  • Chidambaram Pillai-
  • Chidambaram Pillai propagated Swadeshi in the movement against ‘Bang-Bhang’.

Central News

    1.Fertilizer subsidy Rs. 51,875 crore approved by the Union Cabinet

  • The Union Cabinet on Wednesday approved a subsidy of Rs 51,875 crore for phosphate and potassium fertilizers.
  • During the Rabi season 2022-23 from October 1, 2022 to March 31, 2023, phosphate potassium fertilizers have been approved to provide nutrients like nitrogen, phosphorus, potash, sulfur at subsidized rates.
  • Accordingly, subsidy will be provided for nitrogen at Rs.98.02, phosphorus at Rs.66.93, potash at Rs.23.65 and sulfur at Rs.6.12 per kg.
  • With this, the Cabinet has approved a total subsidy of Rs.51,875 crore.
  • Ethanol Price Increase:
  • The price of sugarcane ethanol, which is blended with petrol, has been increased from Rs.63.45 (lit) to Rs. The Cabinet also approved the amendment as 65.61
  • Similarly, the price of C-heavy molasses extracted ethanol has increased from Rs.46.66 (lit) to Rs. 49.41 and it was decided to increase the price of B-heavy ethanol from Rs.59.08 to Rs.60.73.
  • Currently, 10 percent ethanol is blended into gasoline. As a result, the farmers have got Rs.40 thousand crores which were to go abroad.
  • It has been decided to increase ethanol consumption to 12 percent from next year.
  • Airport renaming:
  • The cabinet approved the renaming of the green airport at Halonghi, Thalainagar, Itanagar, Arunachal Pradesh to Donyi Polo Airport, Itanagar.

Arunachal Pradesh

  • Capital: Itanagar (Executive Branch)
  • Chief minister: Pema Khandu
  • Official animal: Gayal

State news

    1.Rajaraja Cholan’s birthday is a government event

  • Tamil Nadu Chief Minister M. K. Stalin has announced that the birthday of  Rajaraja Chola will be celebrated as a state festival.
  • Rajaraja Chola’s birthday is celebrated annually as a Sadaya festival by various organizations in Thanjavur district. There have been requests from various quarters to declare the birthday as a government holiday.
  • Accepting this request, Rajaraja Cholan’s birthday will be celebrated as a state festival this year and in the years to come.
  • Sathaya Festival:
  • The birthday of Rajaraja Chola, who built the world-famous Thanjavur Great Temple, is celebrated as the Sadaya Festival every year in the month of Aippasi in the Sataya Nakshatra.
  • This year Rajaraja Chola’s 1037th Sadaya Festival began on Wednesday at Thanjavur Periya Kovil.

Missile

    1.Target interception missile AT-1 test success

  • The AT-1 interceptor missile was successfully test-fired on Wednesday for the first time.
  • The AT-1 interceptor has a range of 100 km of the atmosphere. It is designed to flow in two ways, above and below the height.
  • It can intercept and attack long-range ballistic missiles and aircraft. The missile has an indigenously developed modern control system and guidance.
  • The missile was successfully test-fired for the first time at different locations off the coast of ABJ Abdul Kalam Island in Odisha.

Economic news

   1.Wheat exports doubled to Rs.12,200 crores

  • Wheat exports worth USD 1.48 billion (roughly Rs 12,200 crore in Indian value) during the six months from April to September of the current financial year, the Union Commerce Ministry said on Wednesday.
  • This is reported to be more than double compared to the same period of the previous financial year.
  • Wheat exports worth USD 630 million (Rs 5,200 crore) during the same period of the previous financial year.
  • The overall export value of agricultural and processed food products has increased by 25 percent in the last six months.
  • Exports have now increased to USD 13.77 billion (about Rs 1 lakh crore) from USD 11.05 billion (Rs 91,000 crore) in the corresponding period of the previous fiscal.

Appointment

   1. CRPF women officers appointed as I.G for the first time

  • For the first time, a woman officer has been appointed as the IG of the Central Reserve Police Force’s (CRPF) anti-riot special force Rapid Response Force (RAAF).
  • Similarly, for the first time, the Bihar division of the CRPF has a woman IG. Appointed.
  • The country’s largest paramilitary force, the CRPF (3.25 lakh personnel), was inducted for the first time in 1987 after years of waiting.
  • In this case, female officer Annie Abraham has been appointed as IG of CRPF Rapid Action Force and Seema Dundia as IG of Bihar Division, according to the order issued by the head office of the force.
  • Woman IG for Rapid Response Force This is the first time to lead.
  • Both of them will miss the category of women officers who joined the CRPF service for the first time in 1987.
  • It is noteworthy that she has already headed the Indian Women’s Police Committee at the UN and will also receive the President’s Police Medal for her outstanding work.

CRPF

  • Headquarters: New Delhi
  • Formed: 27 July 1939; (as Crown Representative’s Police); 28 December 1949; 72 years ago

World news

    1.To get ‘Blue Tick’ on Twitter Rs. 662 fee

  • New owner Elon Musk has announced that Twitter users will have to pay $8 a month (Rs. 662) to get a blue tick, which indicates an authenticated account.
  • The company launched the ‘Blue Tick’ service in 2009 after Twitter came under court criticism for not taking steps to prevent fake accounts.

    2.Israel: Netanyahu becomes Prime Minister again

  • Israel’s Prime Minister Netanyahu is expected to be re-elected in general election, with polls showing a majority for the ruling Likud party.
  • Netanyahu already holds the record of being the longest serving Prime Minister in Israel. After a brief hiatus, the prime minister is almost certain to return.

Exit mobile version