TNPSC Current Affairs – Aug 28, 2022

0
47

CA 28.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. ஆறுமுகசாமி ஆணையம்  

 • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் அளிக்கப்பட்டது.  
 • 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் சுமார் ஐந்து ஆண்டு காலத்துக்கு பின்னர் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.  

2. நூல் வெளியீட்டு விழா  

 • இந்தியா 75 போர்முனை முதல் ஏர்முனை வரை என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன், நூலாசிரியர்கள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு.  

3. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: பதிப்பு துறைக்கு பொறுப்பாளர் நியமனம்  

 • சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ ஆராய்ச்சி நிறுவனத்தில் பதிப்பு துறையின் முதல் பொறுப்பாளராக பேராசிரியர் .மணவழகன்  நியமனம் செய்யப்பட்டார்.  
 • தனிநாயகம் அடிகள், மறைந்த முதல்வர் அண்ணா போன்றோரின் அரிய முயற்சியால் 1968இல் தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.  
 • தமிழ் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழ் ஆய்வாளருக்கு தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் என துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  

மத்திய செய்திகள் 

1. சாகர்மாலா  

 • பத்தாவது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சியை (சாரக்ஸ்) மத்திய பாதுகாப்பு அமைச்சக செயலாளர் அஜய்குமார் சென்னையில் தொடங்கி வைத்தார்.  
 • இந்திய கடலோர காவல் படையின் கீழ் இயங்கி வரும் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு வாரியம் சார்பில் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி முகாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.  
 • உள்கட்டமைப்பை விரிவு படுத்துவதிலும், சாகர்மாலா போன்ற இந்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும் இந்திய கடலோர காவல் படை முக்கிய பங்காற்றுகிறது.  

2. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு  

 • உச்சநீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) பதவியேற்றார்.  
 • குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  
 • நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி:  
 • தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுதன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர், தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.  
 • இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13 வது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார்.  
 • முக்கிய தீர்ப்புகள்:  
 • உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை யு.யு.லலித் வழங்கியுள்ளார்.  
 • குறிப்பாக, இஸ்லாமியர்கள் உடனடி முத்தலாக் மூலமாக விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்த அமர்வில் இவரிடம் பெற்றிருந்தார்.  
 • வரலாற்று சிறப்புமிக்க திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் நிர்வாக உரிமை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உள்ளது என்று நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு 2020ல் தீர்ப்பளித்தது.  
 • குழந்தைகளின் பாலியல் உறுப்புகளை தொடுவது மட்டுமல்லாமல், ‘பாலியல் நோக்கத்துடன்’ உடல் ரீதியில் தொடர்பு கொள்ளும் எந்த ஒரு செயலும் பாலியல் வன்கொடுமையே என்று குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை இவர் இடம் பெற்ற உச்சநீதிமன்ற அமர்வு அளித்துள்ளது.  
 • 1957ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த நீதிபதி யு.யு.லலித் 1983 ஆம் ஆண்டு ஜூனில் வழக்குரைஞராக பதிவு செய்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குரை நீர் பணியை தொடங்கினார்.  
 • பின்னர் 1986 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்து வழக்குரைஞர் பணியை தொடர்ந்த அவர் 2004 ஆம் ஆண்டு ஏப்ரலில் மூத்த வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.  
 • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு அரசு வழக்குரைஞராக அவர் நியமிக்கப்பட்டார்.  
 • 74 நாள்கள் மட்டுமே பதவி  
 • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே இந்த பதவியை வகிப்பார்.  
 • வரும் நவம்பர் எட்டாம் தேதி 65 வயதை அடையும் இவர், அன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.  
 • இவருக்கு அடுத்து, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட் தலைமை நீதிபதி ஆவதற்கான வரிசையில் உள்ளார்.  
 • உச்சநீதிமன்ற வரலாற்றில் யு.யு.லலித்துக்கு முன்பாக மிக குறைந்த நாள்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்களில் முதலிடம் வகிப்பவர் நீதிபதி கமல் நாராயணன் சிங். 1991 நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை 18 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியை அவர் வகித்தார்.  
 • இவருக்கு அடுத்தபடியாக நீதிபதி எஸ்.ராஜேந்திர பாபு (2004 மே 2 முதல் 31ஆம் தேதி வரை) முப்பது நாள்களும்,  
 • நீதிபதி ஜே.சி. ஷா (1970 டிசம்பர் 17 – 1971 ஜனவரி 21 வரை) 36 நாள்களும்,  
 • நீதிபதி ஜி.பி.பட்நாயக் (2002 நவம்பர் 8 – 2002 டிசம்பர் 18 வரை) 41 நாள்களும்,  
 • நீதிபதி எல்.எம்.சர்மா (1992 நவம்பர் 18 – 1993 பிப்ரவரி 11 வரை) 86 நாள்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.  
 • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதிலும் பணி ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

3. அடல் மேம்பாலம் திறப்பு  

 • அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் குறுக்கே 300மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு முன்னால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல் மேம்பாலம்’  என பெயரிடப்பட்டுள்ளது.  
 • அந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  

4. பாரத்  

 • ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.  
 • விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையை குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.  
 • பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூர்வாரக் பரியோஜனாபிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவர் மேலும் கூறியதாவது:  
 • உரப்பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிக பெயர், இலட்சினை, பொருள் தொடர்பான இதர விவர குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும்.  
 • மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிக பெயரும் பிஎம் பிஜேபி திட்டத்தின் இலட்சினையும் இடம்பெற வேண்டும்.  
 • உர நிறுவனங்கள், தங்களிடம் உள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதி வரை அவகாசம் அளிக்கப்படும்.  
 • யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம். டை அமோனியம் பாஸ்பேட்க்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.  

விளையாட்டு செய்திகள் 

1. டைமண்ட் லீக் தடகளம்  

 • கௌரவமிக்க டைமண்ட் லீக் தடகள போட்டியில் முதலிடம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா.  

2. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்  

 • உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர் இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி.  
 • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது.  
 • இதில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையுடன் மோதினர் இந்தியாவின் சாத்விக்-சிராக்.  
 • உலக தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள சிராக்-சாத்விக் இணை ஆறாம் நிலையில் உள்ள மலேசிய இணையும் சரிக்கு சமமாக ஆடினான்.  
 • சிராக் ஷெட்டிசாத்விக் இணை வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.  
 • உலக சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.  
 • மேலும் 13 வது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும். 

CA 28.08.2022(English Version)

State news 

1. Arumugasamy Commission 

 • The report of Justice Arumugasamy Commission regarding the death of former Chief Minister Jayalalithaa was presented to Chief Minister M. K. Stalin. 
 • In September 2017, the commission, which was set up during the previous DMK regime, has submitted a 500-page report after a period of about five years. 

2. Book release ceremony 

 • Senior leader of the Communist Party of India R. Nallakannu, Scientist S. Nambi Narayanan, authors of the book, Scientist Mylaswamy Annadurai and Army Scientist V. Tillibabu participated in the launch of the book ‘India 75 From Frontline to Airfront’. 

3. World Tamil Research Institute: Appointment of Officer in charge of Publication  Department 

 • Professor A. Manavazhagan was appointed as the first in-charge of the publishing department at the World Tamil Research Institute, which is functioning at Taramani, Chennai. 
 • The World Tamil Research Institute was established in 1968 with the rare efforts of Thaninayagam Adigal, Late Chief Minister Anna etc. 
 • This institute is working with the objectives of enriching higher research in Tamil education, creating necessary documents for Tamil researchers, promoting Tamil research in every field such as Tamil, Tamils, literature, history, medicine, education, art, society, culture, science. 

Central News 

1. Sagarmala 

 • Union Ministry of Defense Secretary Ajay Kumar inaugurated the tenth National Maritime Search and Rescue Exercise (SARAX) in Chennai. 
 • Search and rescue training camp is conducted every two years in the coastal areas of India by the National Maritime Search and Rescue Board, which is run under the Indian Coast Guard. 
 • The Indian Coast Guard plays an important role in expanding infrastructure and supporting Indian government projects like Sagarmala. 

2. Acceptance of office of Chief Justice of the Supreme Court 

 • Udai Umesh Lalit (UU Lalit) was sworn in as the 49th Chief Justice of the Supreme Court. 
 • President Draupadi Murmu administered the oath of office to him at the swearing-in ceremony held at the President’s House. 
 • Directly appointed Second Chief Justice: 
 • By assuming office as Chief Justice, U.U.Lalit became the second person to become a Supreme Court judge directly from a lawyer and then as Chief Justice. 
 • Before him, Justice SM Sikri, who was a lawyer, directly became a Supreme Court judge and then became the 13th Chief Justice of the country in January 1971. 
 • Key Verdicts: 
 • U.U.Lalit has given many important judgments as Supreme Court judge. 
 • In particular, he had obtained from him the session which ruled that the practice of divorce by Muslims through instant triple talaq was illegal and unconstitutional. 
 • A bench headed by Justice Lalith ruled in 2020 that the royal family of Travancore has the right to manage the historic Thiruvananthapuram Sri Padmanapaswamy temple. 
 • A bench headed by Justice U.U. Lalit held various important judgments including the judgment of the Supreme Court under Section 7 of the POCSO Act, which protects children from sexual offences, not only by touching the genitals of children, but also by physical contact with ‘sexual intent’. The session has given. 
 • Born on November 9, 1957, Justice U.U.Lalith enrolled as an advocate in June 1983 and started his practice as a lawyer in the Bombay High Court. 
 • Later he came to Delhi in 1986 and pursued his career as a lawyer and in April 2004 he was appointed as a Senior Advocate by the Supreme Court. 
 • He was appointed as the special public prosecutor for the CBI in the 2G spectrum allocation case. 
 • Only 74 days post 
 • U.U. Lalit, who has been sworn in as the 49th Chief Justice of the Supreme Court, will hold this post for only 74 days. 
 • He will be 65 years old on November 8 and will retire on that date. 
 • After him, senior Supreme Court judge TY Chandra Chute is in line to become the Chief Justice. 
 • In the history of the Supreme Court, Justice Kamal Narayanan Singh was the first person to hold the post of Chief Justice for the shortest period of time before YU Lalit. He held the post of Chief Justice for only 18 days from 25 November to 12 December 1991. 
 • He was succeeded by Justice S. Rajendra Babu (May 2 to 31, 2004) for thirty days and  
 • Justice J.C. Shah (December 17, 1970 – January 21, 1971) 36 days,  
 • Justice GP Patnaik (November 8, 2002 – December 18, 2002) 41 days,  
 • Justice LM Sharma (November 18, 1992 – February 11, 1993) 86 days. He has also served as the Chief Justice of the Supreme Court. 
 • It is to be noted that Supreme Court judges retire at the age of 65 and High Court judges at the age of 62. 

3. Opening of Atal flyover 

 • The 300-meter-long flyover across the Sabarmati River in Ahmedabad is named ‘Atal Flyover’ in honor of Prime Minister Atal Bihari Vajpayee. 
 • Prime Minister Modi inaugurated the flyover. 

4. Bharat 

 • Under the ‘Ore Nadu Ore Uram’ scheme, all the subsidized fertilizers under the single name ‘Bharat’ will be sold from October. 
 • Union Minister for Chemicals and Fertilizers Mansuk Mandaviya said that the objective of this scheme is to ensure timely availability of fertilizers to the farmers and reduce the burden of subsidy for its transportation. 
 • Announcing the ‘One Nation One Fertilizer’ scheme under the Prime Minister’s Fertilizer Subsidy Scheme (Prime Minister’s Bharatiya Janurwarak Paryojana-PMBJP), he added: 
 • In one-third space on the fertilizer bags, the trade name, logo and other details related to the product of the concerned manufacturing company are allowed. 
 • Two-thirds of the space should feature the business name ‘Bharat’ and the slogan of the PM BJP project. 
 • Fertilizer companies will be given time till the end of this year to clear their old stocks. 
 • 80 percent of the retail price of urea. The central government provides subsidy of 65 percent for diammonium phosphate, 55 percent for NBK fertilizer and 31 percent for MOP fertilizer. 

Sports news 

1. Diamond League Athletics 

 • Olympic champion Neeraj Chopra became the first Indian athlete to win the prestigious Diamond League athletics competition. 

2. World Badminton Championship 

 • India’s Satwik Rangritty-Chirag Shetty have created a historic record by winning the first bronze medal in men’s doubles at the World Badminton Championship. 
 • The semi-final match of the doubles division of the tournament was held in Tokyo, the capital of Japan. 
 • In this, Aaron Chia-So Wooi Yik of Malaysia clashed with India’s Sathwik-Chirag. 
 • The seventh-ranked Chirag-Sadhwi pair in the world played level with the sixth-ranked Malaysian pair. 
 • Chirag Shetty-Sadwik combined to win the bronze medal. 
 • This is India’s first medal in doubles at the World Championships. 
 • Also 13th World Championship medal.