Home TNPSC TNPSC Current Affairs – Aug 27, 2022

TNPSC Current Affairs – Aug 27, 2022

0

CA 27.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. சாரண சாரணியர் இயக்க தலைவர்  

  • தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  

2. வெம்பக்கோட்டை அகழாய்வு  

  • வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணாளான கற்கால பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றங்களை விஜய கரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரை உச்சி மேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.  

மத்திய செய்திகள் 

1. இந்தியா அமெரிக்க நிதித்துறை ஒத்துழைப்பு  

  • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நிதித்துறை இணை அமைச்சர் வாலி அடியேமோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் சந்தித்தார்.  
  • இந்த சந்திப்பின்போது சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் இந்திய அமெரிக்க நிதித்துறை ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.  
  • நிதி அமைச்சக Twitter பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் இறுதிவரை ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்க இருக்கிறது.  

2. பிரதமர் மோடிக்கு முதலிடம்  

  • மக்களின் 75 சதவீத ஆதரவை பெற்று உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.  
  • அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் மார்னிங் கன்சல்ட் என்ற சமூக வலைத்தளம் உலக அளவில் மக்களின் ஆதரவு பெற்ற பிரபல தலைவர்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.  
  • மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் லோபஸ் ஓப்ரடார் 63 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி 58 சதவீத மக்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

விளையாட்டு செய்திகள் 

1. யுஇஎஃப்ஏ: சிறந்த வீரர் வீராங்கனை  

  • ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (யூஇஎப்ஏ) இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற கரிம் பென்ஸிமா (பிரான்ஸ்/ரியல் மாட்ரிட்).  
  • சிறந்த வீராங்கனை விருது பெற்ற அலெக்ஸியா புடேலாஸ் (ஸ்பெயின்/பார்சிலோனா).  
  • துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த ஆடவர் பயிற்சியாளர்களாக கார்லோ அன்செலோட்டி சிறந்த மகளிர் பயிற்சியாளராக சரிகா வீக்மேன்  தேர்வாகினர். 

CA 27.08.2022(English Version)

State news 

1. Sarana Saraniyar Movement Leader 

  • School Education Minister Anbil Mahesh Poiyamozhi was elected unopposed as the head of the Tamil Nadu Sarana Saraniyar movement. 

2. Excavation at Vembakota 

  • In the ongoing excavation at Vembakottai, Neolithic pots have been found. 
  • Excavation work has been going on since 16th March in the 25 acre archeological mound at Vadakarai Uchi Meth under Vijaya Karisalkulam Panchayat at Vembakkottai near Sattur in Virudhunagar District. 

Central News 

1. India US Financial Cooperation 

  • US Secretary of State for Finance Wally Adeyemo, who is on a tour of India, met Union Finance Minister Nirmala Sitharaman in Delhi. 
  • During this meeting the two leaders discussed the international economic environment and India-US financial cooperation. 
  • In a post published on the Finance Ministry’s Twitter page, India will chair the G20 from December 1, 2022 to the end of November 2023. 

2. Prime Minister Modi 

  • Prime Minister Narendra Modi tops the list of popular leaders of the world with 75 percent support of the people. 
  • A social website called ‘Morning Consult’, which is based in America, publishes a weekly list of famous leaders who have the support of people worldwide. 
  • Mexican President Andrews Lopez Obrador is second with 63 percent and Australian Prime Minister Anthony Albanese is third with 58 percent. 

Sports news 

1. UEFA: Player of the Year 

  • Karim Benzema (France/Real Madrid) winner of the UEFA Player of the Year award. 
  • Player of the Year Award winner Alexia Butelas (Spain/Barcelona). 
  • Carlo Ancelotti was selected as the best men’s coach and Sarika Wiegmann as the best women’s coach at the event held in the Turkish capital, Istanbul. 

Exit mobile version