TNPSC Current Affairs – Aug 15, 2022

0
38

CA 15.08.2022(Tamil Version)

முக்கிய தினங்கள் 

1. 15.08.2022 

  • இந்திய சுதந்திர தினம் 
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம்  நடைபெற உள்ளது. 
  • ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன. 

மாநில செய்திகள் 

1. உலகளாவிய பொது சுகாதார மாநாடு  

  • உலகளாவிய பொது சுகாதார மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.  
  • தமிழக பொது சுகாதாரத்துறை சுமார் ஒரு லட்சம் பணியாளர்களை கொண்டது.  
  • பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.  
  • இந்தப் பயணத்தை எடுத்துக் கூறவும், சேவைகளை மேம்படுத்தவும் நம்முடைய சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் நூறாவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.  
  • அதன் ஒரு பகுதியாக உலகளாவிய பொது சுகாதார மாநாட்டை வரும் டிசம்பர் 6ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடத்த திட்டமிட்டு இருக்கிறன.  
  • இந்த மாநாட்டின் கருப்பொருள் பொது சுகாதாரத்தின் சிறப்புகள் என்பதாகும். 

2. தமிழக காவல்துறையில் 27 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது  

  • இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.  
  • போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.  
  • நிகழாண்டு சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் மூன்று பேருக்கும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள் 24 பேருக்கும் என தமிழக காவல்துறையைச் சேர்ந்த மொத்தம் 27 பேருக்கு வழங்கப்பட்டது வழங்கப்பட்டன. 

3. இரு ஆண்டுகளாக கொடியேற்றாத பட்டியலின ஊராட்சி தலைவர்  

  • சுதந்திர தின விழாவில் கடந்த இரு ஆண்டுகளாக தேசிய கொடி ஏற்றாத ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம், தலைமைச் செயலர் வெ.இறையன்பு  தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.  
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியலின தலைவர் அமிர்தம்  கொடியேற்றினார். 

மத்திய செய்தி 

1. ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மறைவு  

  • பங்குச்சந்தையில் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரும், நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடத்தில் இருப்பவருமான ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மாரடைப்பால் காலமானார்.  
  • இந்தியாவின் வாரன் பஃபெட் எனவும், இந்திய பங்குச் சந்தையின் பெரும் காளை எனவும் அவர் அறியப்படுகிறார். 
  • ஃபோர்ப்ஸ் இதழ் 2021 ஆம் ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 36-வது இடத்தில் இருந்தார்  

2. முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்  

  • ஜம்மு காஷ்மீரின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் (ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் திரைகள் இருப்பது) அடுத்த மாதம் தொடங்கி வைக்கப்படுகிறது.  
  • ஸ்ரீ நகரில் உள்ள சோனாவார் பகுதியில் இந்த திரையரங்கம் அமைக்கப்படுகிறது.  
  • ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இங்கு மூன்று திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

CA 15.08.2022(English Version)

Important days 

1. 15.08.2022 

  • Indian Independence Day 
  • India is going to celebrate 75th year of independence. 
  • In the name of ‘Azadi Ka Amrut Mahotsav’, this Independence Day has been celebrated for the last one year and various programs have been announced. 

State news 

1. World Conference on Public Health 

  • Director of Public Health Selvavinayagam said that the Global Public Health Conference will be held in Mamallapuram next to Chennai on December 6. 
  • Tamil Nadu Public Health Department has about one lakh employees.  
  • It provides various services. 
  • Centenary celebration is going to be held to highlight this journey, improve services and make people aware of our services. 
  • As part of that, they are planning to hold a global public health conference from 6th to 8th December at a private star hotel in Mamallapuram near Chennai. 
  • The theme of this conference is Excellence in Public Health. 

2. President’s Award to 27 officers in Tamil Nadu Police 

  • President’s Awards are given twice a year on the occasion of Republic Day and Independence Day to police officers who have served with distinction at the national level. 
  • These awards are given on the basis of police performance, achievements and merit. 
  • On the occasion of this year’s Independence Day, 27 people from the Tamil Nadu Police were given the President’s Meritorious Service Awards to three and the President’s Meritorious Service Awards to 24 people. 

3. Listed panchayat president who has not hoisted the flag for two years 

  • Aathuppakkam panchayat chairman Amritham, who has not hoisted the national flag for the last two years, hoisted the national flag under the leadership of chief secretary V.Irayanbu. 
  • Thiruvallur district Kummidipoondi next to Athuppakkam panchayat was flagged off by the leader of the list Amritham. 

Central news 

1. Death of Rakesh Jhunjhunwala 

  • Rakesh Jhunjhunwala, one of the best stock market investors and 36th richest man in the country, passed away due to a heart attack. 
  • He is known as India’s Warren Buffett and the biggest bull of the Indian stock market. 
  • He was ranked 36th in the list of India’s richest people in 2021 by Forbes magazine 

2. First multiplex theatre 

  • Jammu and Kashmir’s first multiplex theater (having a large number of screens in one place) is being inaugurated next month. 
  • This theater is set up in Sonavar area of ​​Sri Nagar. 
  • This theater has been developed in collaboration with Inox. 
  • Three theaters are set up here.