TNPSC Current Affairs – Aug 06, 2022

0
20

CA 06.08.2022(Tamil Version) 

முக்கிய தினங்கள் 

1. 06.08.2022 

 • ஹிரோஷிமா தினம். 
 • இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஒரு சம்பவத்தை நினைவு கூறும் விதத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 

மாநில செய்திகள் 

1. ஒப்பியாய்டு மையம் 

 • சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போதை மாத்திரை பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
 • கடந்த 1794-ஆம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

மத்திய செய்திகள் 

1. ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியது ஆர்பிஐ 

 • வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட் இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ 0.5% உயர்த்தி உள்ளது. 
 • இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தவுள்ளன. 
 • ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ். 
 • பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு 5.4 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 
 • பணவீக்கம் 
 • பணவீக்கம் ஆனது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. 
 • நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • பொருளாதார வளர்ச்சி 
 • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 
 • நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 16.2% ஆகவும், இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

2. இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்  

 • குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜகதீப் தன்கரும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவும் களத்தில் உள்ளனர். 
 • குடியரசு தலைவர் தேர்தலை போல் அல்லாமல் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். 
 • நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

3. தேஜஸ் 4 விமானங்களை வாங்க ஆறு நாடுகள் ஆர்வம் 

 • இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் ஒற்றை எஞ்சினை கொண்டவை. 
 • இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் போர் விமானங்களை ரூபாய் 48,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு மேற்கொண்டது. 
 • ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். 

4. கரோனாவுக்கு நடுவிலும் இந்தியாவுக்கு வந்த 32.79 லட்சம் வெளிநாட்டவர்  

 • இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த 2020, ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை 32,79,315 வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 • இந்தியாவில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் (61,190) அதிக எண்ணிக்கையில் நமது நாட்டுக்கு வந்துள்ளனர். 
 • இதற்கு அடுத்து வங்கதேசத்தை சேர்ந்த 37,774 பேரும், பிரிட்டனைச் சேர்ந்த 33,323 பேரும், கனடாவை சேர்ந்த 13,707 பேரும், போர்ச்சுகலைச் சேர்ந்த 11,668 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 11,212 பேரும் இந்தியாவுக்கு வந்துள்ளனர். 

5. முதல்முறையாக நிலவுக்கு விண்கலம் 

 • நிலவுக்கு தென்கொரியா முதல்முறையாக விண்கலம் அனுப்பி உள்ளது. 
 • இந்த விண்கலத்தின் பெயர் டானுரி என்பதற்குசந்திரனை அனுபவிஎன்று பொருள்படும். 
 • அமெரிக்காவின் உள்ள புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது. 

6. குரங்கு அம்மை: தேசிய அளவில் அவசர நிலை  

 • அமெரிக்காவில் குரங்கு அம்மை அவசர நிலை தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது 

விளையாட்டு செய்திகள் 

1. பாரா போட்டிகளிலும் பதக்கம் 

 • சுதிருக்கு தங்கம்  
 • ஆடவருக்கான வலு தூக்குதல் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சுதிர் தங்கப்பதக்கம் வென்றார். 

2. வெள்ளி வென்றார் முரளி ஸ்ரீ சங்கர் 

 • காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீ சங்கர் வெளிப்பதக்கம் வென்றார். 
 • முரளி ஸ்ரீ சங்கர் காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 
 • 1978 எட்மான்டன் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சுரேஷ் பாபு வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

3. மல்யுத்தம் 

 • மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்க்ஷி மாலிக் தங்கப் பதக்கமும், அன்ஷீ மாலிக் வெள்ளி பதக்கமும் வென்றனர். 

CA06.08.2022 (English Version) 

Important days 

1. 06.08.2022 

 • Hiroshima Day. 
 • This day is observed to commemorate the atomic bombings of two Japanese cities, Hiroshima and Nagasaki, during World War II. 

State news 

1. Opioid Center 

 • Minister of Public Health and Welfare M. Subramanian on Friday inaugurated the Opioid Substitution Treatment Center for the rehabilitation of drug addicts at Kilipakkam Government Psychiatric Hospital, Chennai. 
 • The Kilpakkam Government Mental Asylum was started in the year 1794 as an asylum for the mentally ill and has been functioning for 228 years. 

Central News 

1. RBI hikes repo rate by 0.5% 

 • Repo Rate Reserve Bank of India RBI has increased the interest rate on short term loans to banks by 0.5%. 
 • Due to this, banks will increase the interest for home loans, car loans, monthly installments etc. 
 • RBI Governor Shaktikanta Das. 
 • He informed that the repo rate will be increased by 0.5 percent to 5.4 percent in order to control inflation. 
 • Inflation 
 • RBI has projected inflation to be 6.7 percent in the current financial year 2022-23. 
 • Inflation is expected to be 7.1 percent in the second quarter of the fiscal year and 6.4 percent in the third quarter. 
 • Economic Growth  
 • The country’s gross domestic product (GDP) will be 7.2 percent in the current financial year, according to RBI. 
 • GDP growth is projected at 16.2% in the first quarter of the current financial year and 6.2% in the second quarter. 

2. Today is the election of the Vice President of the Republic 

 • Former Governor of West Bengal Jagadeep Dhankar on behalf of the ruling National Democratic Alliance for the post of Vice President and former Governor of Rajasthan Margaret Alva as the general candidate of the opposition parties are in the field. 
 • Unlike the Presidential election, only Lok Sabha and Rajya Sabha MPs will vote in the election. 
 • Appropriate arrangements have been made in the Parliament to facilitate voting by MPs as nominated members are also eligible to vote. 

3. Six countries interested in buying Tejas 4 aircraft 

 • The Central Government has informed the Lok Sabha that six countries, including the US and Australia, are showing interest in buying Indian-made Tejas fighter jets. 
 • Tejas fighter jets manufactured by Hindustan Aeronautics are single engined
 • In February last year, the central government entered into an agreement with Hindustan to purchase 83 Tejas fighter jets for the Indian Air Force at a cost of Rs 48,000 crore. 
 • Argentina, Australia, Egypt, USA, Indonesia, Philippines have also expressed interest in purchasing Tejas fighter jets, he said. 

4. 32.79 lakh foreigners came to India even amid Corona 

 • The Ministry of Home Affairs has informed that 32,79,315 foreigners have come to India from April 1 to December 31, 2020, when the first wave of Corona in India was at its peak. 
 • When the first wave of Corona in India was at its peak, a large number of Americans (61,190) came to our country
 • After this, 37,774 people from Bangladesh, 33,323 people from Britain, 13,707 people from Canada, 11,668 people from Portugal and 11,212 people from Afghanistan have come to India. 

5. Spacecraft to the moon for the first time 

 • South Korea has sent a spacecraft to the moon for the first time. 
 • The spacecraft’s name Danuri means “moon experiencer“. 
 • Launched on SpaceX’s Falcon 9 rocket from Cape Canaveral, Florida, USA. 

6. Monkey measles: a national emergency status 

 • A national monkey measles emergency has been declared in the United States 

Sports news 

1. Medal in Para competitions as well 

 • Gold for Sudhir  
 • India’s Sudhir won gold in men’s powerlifting heavy weight category. 

2.Murali Sri Shankar won silver 

 • India’s Murali Sri Shankar won an outdoor medal in the long jump category at the Commonwealth Games. 
 • Murali Sri Shankar became the first Indian to win silver in Commonwealth long jump. 
 • India’s Suresh Babu won bronze medal in 1978 Edmonton Commonwealth Games. 

3. Wrestling 

 • India’s Bajrang Punia, Deepak Punia, Sakshi Malik won gold medal and Anshi Malik won silver medal in wrestling event. 

Telegram Link – https://t.me/gkrsInstitute