TNPSC Current Affairs – Aug 05, 2022

0
44

CA 05.08.2022(Tamil Version) 

முக்கிய தினங்கள் 

1. 05.08.22  

  • இன்று நிலாவில் முதன்முதலில் கால்தடம் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (1930). ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். 
  • 1969, ஜூலை20 இல் அமெரிக்காவின் அப்போலோ11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். 

மாநில செய்திகள் 

1. ஜெயில் பஜார் 

  • கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் ஜெயில் பஜார் என்ற பெயரில் விற்பனையாகின்றன. இதில் கிடைக்கும் லாபத் தொகை தயாரிப்பு ஊதியமாக தரப்படுகிறது.  
  • நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறைகைதிகளுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது.  

2. காசியில் மகாகவி வாழ்ந்த இல்லம் நிதி ஒதுக்கீடு  

  • காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்தல் அதில் மார்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  
  • மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் 14 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  
  • அதில் 11ஆவது அறிவிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.  

3. ராம்சார் தளம் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஈரநில தளமாகும் 

  • தமிழ்நாட்டில் இருந்து மேலும் ஆறு ஈரநிலங்கள் (கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம், வேம்பன்னூர் ஈரநில வளாகம், வெள்ளோடு, வேடந்தாங்கல் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயங்கள்) சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
  • ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட மூன்று சதுப்பு நிலங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. 

மத்திய செய்திகள் 

1. அடுத்த தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு என்.வி.ரமணா பரிந்துரை   

  • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மூத்த நீதிபதியான யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு வியாழக்கிழமை பரிந்துரை செய்தார்.  
  • உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பதவியேற்றார்.  
  • நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி 
  • தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டால், வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர் என்ற பெருமையை அடைவார்.  
  • இவருக்கு முன்பாக நீதிபதி எஸ்.எம்.சிக்ரி வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அதன் பிறகு நாட்டின் 13 வது தலைமை நீதிபதியாகவும், கடந்த 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார்.  

விளையாட்டு செய்திகள் 

1. சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள்  

  • சர்வதேச தடகளப் போட்டி நெதர்லாந்து நாட்டின் ரோட்டர் டேம் நகரில் ஜூலை 22-ல் தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது.  
  • இந்த போட்டியில் காவல் துறையைச் சேர்ந்த எஸ்.பி..மயில்வாகனன் தலைமையில் 13 பேர் குழுவினர் பங்கேற்றனர்.  
  • போட்டியில் காவல்துறையினர் 16 தங்கம்,14 வெள்ளி,3 வெண்கலம் என 33 பதக்கங்களை வென்றனர்.  

2. வரலாறு படைத்த தேஜஸ்வின் சவுரவ் இங்கிலாந்தில் நடைபெறும் 

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் ஸ்குவாஷ் வீரர் சௌவுரவ் கோஷல் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.  
  • இதன் மூலம் காமன்வெல்த் போட்டியின் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேஜஸ்வினும், ஸ்குவாஷ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெயரை சௌவுரவும் பெற்று வரலாறு படைத்துள்ளனர். 

CA05.08.2022 (English Version) 

Important days 

1. 05.08.22 

  • Astronaut Neil Alden Armstrong (1930) was the first to set foot on the moon today. An American astronaut and the first man to land on the moon. 
  • On July 20, 1969, Armstrong was the first to set foot on the moon, traveling with Edwin Aldrin and Michael Collins aboard the US Apollo 11 spacecraft. 

State news 

1. Jail Bazaar 

  • The goods made by the prisoners are sold in the name of Jail Bazaar. The profit amount is paid as production wages. 
  • Prisoners are paid the highest wages in the country only in Tamil Nadu. 

2. Allocation of funds for the house where Mahakavi lived in Kashi 

  • The government of Tamil Nadu has allocated funds for the reconstruction of the house where Mahakavi Bharathiar lived in Kashi and for erecting a bust in it. 
  • Chief Minister M.K.Stalin issued 14 proclamations in the Legislative Assembly in honor of Mahakavi Bharatiyar’s death centenary. 
  • As the 11th announcement, he had announced that the government would provide financial assistance to maintain the house where Bharatiyar lived in Kashi, Uttar Pradesh. 

3. A Ramsar site is a wetland site of international importance 

  • Six more wetlands from Tamil Nadu (Koontangulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex, Vellodu, Vedanthangal and Udayamarthandapuram Bird Sanctuaries) have been recognized as Wetlands of International Importance. 
  • A week ago, three wetlands including Pallikaranai wetlands in Chennai, Karikli Bird Sanctuary in Chengalpattu district and Pichavaram wetlands in Cuddalore district were recognized as Wetlands of International Importance. 

Sports news 

1. Medals in International Athletics Competitions 

  • The International Athletics Championship was held in Rotterdam, Netherlands from July 22nd to July 31st. 
  • A team of 13 people participated in this competition under the leadership of S.B.A.Mailvaganan from the police department. 
  • Police won 33 medals including 16 gold, 14 silver, and 3 bronze in the competition. 

2. History maker Tejaswin Sourav will be held in England 

  • India’s athlete Tejaswin Shankar and squash player Souvurav Ghoshal won bronze medals at the Commonwealth Games. 
  • With this, Tejaswin became the first Indian to win a medal in the high jump of the Commonwealth Games and Sauvura became the first Indian to win a medal in the singles category in squash. 

Telegram Link – https://t.me/gkrsInstitute