நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் (Current Affairs 15.10.2021)

0
72

நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

அக்டோபர் 11- 2021

1.நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எத்தனை சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது? – 8.3 சதவீதம்

2.இந்தியர்கள் எத்தனை பேருக்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) 2020-21 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கிடைத்துள்ளது? – எட்டு

3. தற்போது நாட்டில் உள்ள கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பாட்னா உயர்நீதிமன்றங்களுக்கு எத்தனை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்? – 9 நீதிபதிகள்

4.இந்த ஆண்டின் (2021) வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவுள்ளது? – பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன்

5. மொராக்கோவில் சஹhரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டியின் 3 ஆம் சுற்றில் முதலிடம் பிடித்தவர் யார்? – மொஹமத் எல் மொரபிட்டி

6.இந்தியாவில் எத்தனை இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? – 7 இடங்கள்

7.மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரம் கிராமங்களுக்குட்பட்ட 1.7 லட்சம் குடும்பங்களுக்கு, இ-சொத்து அட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார்? – நரேந்திர மோடி

8.தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 400 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? – ரோஹித் ஷர்மா

9. தற்போது எந்த மாநிலத்தில் பணம் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ள பந்தயம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது? – கர்நாடகா

10.தற்போது ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த பந்து வீச்சாளர் யார்? – உம்ரான் மாலிக்

 

அக்டோபர் 12- 2021

1. ஜிமெக்ஸ் – 5 (JIMEX) என்ற பெயரில் இந்தியா மற்றும் ——– நாட்டு கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி, அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது. – ஜப்பான்

2. 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? – அப்துல்ரஸாக் கர்னா

3. மகாராட்டிரா மாநிலம் தாராபூரிலிருந்து குஜராத் மாநில வாசத் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச் சாலையை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தவர் யார்? – பூபேந்திர படேல்

4. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இன்றி ———- சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. – 4 சதவீதம்

5. உலக பருத்தி தினம் (WCD) எப்போது அனுசரிக்கப்படுகிறது? – அக்டோபர் 7

6. தற்போது நாடு முழுவதும் பி.எம். கேர் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்தவர் யார்? – நரேந்திர மோடி

7. தற்போது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ———— கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. – ரூ.40,000 கோடி

8. தற்போது போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து  4 ஆவது முறையாக முதலிடம் பிடித்தது யார்? – ஜெப் பெசோஸ்

9.தற்போது ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 ஆவது தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்? – மானு பாக்கர்

10. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை யார்? – அன்ஷு மாலிக்

11.———- மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ‘ஸ்வேச்சா” (Sweccha) திட்டத்தை தொடங்கி வைத்தார். – ஆந்திரா

அக்டோபர் 13- 2021

1.ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க சேர்க்கைக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்ற வங்கி எது? – கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி

2.ஏர் இந்தியா நிறுவனத்தை ———– கோடிக்கு டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. – 18 ஆயிரம் கோடி

3. நட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? – 7

4. கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு ———– என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. – கன்னியாகுமரி கிராம்பு

5. மத்திய அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ‘திஷா கமிட்டி” யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது? – மு.க.ஸ்டாலின்

6.சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை ———- ஆக உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. – 60 வயது

7. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் யார்? – ஐசரி கணேஷ்

8. இந்திய விமானப்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? – அக்டோபர் 8

9. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22 ஆம் நிதியாண்டில் ———- சதவீதமாக இருக்கும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – 8.3 சதவீதம்

10. 2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நோபல் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார்? – மரியா ரெசா, டிமிட்ரி முரடோவ்

அக்டோபர் 14- 2021

1.தற்போது ஒடிசா மாநில பாராதீப் துறைமுகக் கழகத்தின் (பிபிடி) தலைவராக பொறுப்பேற்றவர் யார்? – பி.எல்.ஹரநாத்

2.ஐஎம்பிஎஸ் முறையில் இனி எத்தனை லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்யலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது? – ரூ.5 லட்சம்

3. தற்போது மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தவர் யார்? – கே.வி.சுப்பிரமணியன்

4. 8 உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்தவர் யார்? – ராம்நாத் கோவிந்த்

5. உலக அஞ்சல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? – அக்டோபர் 9

6. கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி கழகத்தில், படிக்கும் மாணவிகளுக்கு விடுதி மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தவர் யார்? – சர்பானந்தா சோனோவால்

7. இந்தியா மற்றும் ———- நாட்டுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. – டென்மார்க்

8. புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? – ஆர்.என். ரவி

9. தற்போது எந்த மாநிலத்தில் விளையும் இனிப்பு வெள்ளரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது? – நாகாலாந்து

10. ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 40 பதக்கங்களுடன் முதலிடம் பெற்ற அணி எது? – இந்தியா

 

Hope you found useful,

 

FOLLOW US ON:

FACEBOOK , INSTAGRAM , YOUTUBE.