Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 30, 2022

TNPSC Current Affairs – May 30, 2022

0
18

C.A.30.05.2022 (Tamil Version)

 

 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிவைத்த தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

 

 1. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்வேம்பு அண்மையில் பத்ம விருது பெற்றார். அவரும் ஒரு வெற்றி பெற்ற தொழில்முனைவோர் ஆவார். மேலும் பல தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஸ்ரீதர், கிராமத்தில்தான் தனது பணியை தொடங்கினார். தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தபடியே சாதிக்க முடியும் என கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.

 

 1. ஆந்திர மாநிலம் மர்க்காபுரத்தைச் சேர்ந்த ராம் புபால் ரெட்டி, தனது ஓய்வுக்கு பிந்தைய வருவாய் முழுவதையும் பெண் கல்விக்கு வழங்கி உள்ளார். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 100 பெண் குழந்தைகள் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 1. நேபாளத்தில் முஸ்டாங் மாவட்டம் கோவங் கிராமத்தில் உள்ள லாம்சே ஆற்றில், தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 9 என்ஏஇடி விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 1. ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி ரத்து செய்த அண்ணா கேன்டீனை, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பாலகிருஷ்ணா திறந்து வைத்தார்.

 

 1. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 

 1. கே-பாப் இசை உலகில் முதல்முறையாக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரேயா லங்கா இடம் பிடித்துள்ளார்

 

 1. நாட்டிலேயே முதல்முறையாக ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் மருந்துப்பொருட்களை இந்திய அஞ்சல் துறை விநியோகித்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நேர் கிராமத்துக்கு இந்த சேவை மேற்கொள்ளப்பட்டது.

 

 1. மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளர்ப்பதற்காக, “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்ற புதிய திட்டம் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 1. சென்னை மயிலாப்பூரில் 114 அடி, 78 அடி மற்றும் 55 அடி ஆழத்தில் என்று, 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 1. போலந்தில் நடைபெற்ற பாரா கேனோ உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் பிராச்சி யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான விஎல்2 200 மீட்டர் பிரிவில் இந்த பதக்கத்தை அவர் பெற்றுள்ளார். இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

 

C.A.30.05.2022 (English Version)

 

 1. On the occasion of the ‘Voice of the Mind’ program, Prime Minister Modi lauded the Thanjavur Taragai Women Self-Help Group for sending the Thanjavur Interlocutor Toy.

 

 1. Sridharvembu from Tamil Nadu recently received the Padma Award. He is also a successful entrepreneur. He is also involved in the effort to create many more entrepreneurs. Sridhar started his work in the village. He is encouraging rural youth to achieve as much as they can in the area where they live. The Prime Minister has praised.

 

 1. Ram Bhupal Reddy, from Markapuram, Andhra Pradesh, has donated all his post-retirement income to girls’ education. The Prime Minister said that he has opened a bank account in the name of about 100 girls under the Sukanya Samriti Yojana and invested Rs 25 lakh in it.

 

 1. At least 22 people, including four Indians, have been killed after a 9NAED plane belonging to Tara Air crashed into the Lamsey River in the village of Kovang in Nepal’s Mustang district.

 

 1. Actor Balakrishna on behalf of the Telugu Desam Party inaugurated the Anna Canteen, which was canceled by the ruling party in Andhra Pradesh.

 

 1. Prime Minister Modi inaugurated a welfare program for children who have lost their parents due to corona through a video.

 

 1. Shreya Lanka from Odisha has made her debut in the world of K pop music

 

 1. For the first time in the country, the Indian Postal Service has distributed medicines by drone. The service was extended to Ner village, 46 km from Kutch district in Gujarat.

 

 1. In order to develop a scientific mindset and mathematical knowledge in students, a new program called “Science Everywhere, Mathematics Everywhere” has been introduced to teachers.

 

 1. Chennai Mylapore is 114 feet, 78 feet and 55 feet deep, with a three-story metro station.

 

 1. India’s Prachi Yadav wins bronze at the Para Cano World Cup in Poland. She won the medal in the women’s VL2 200m. She is the first Indian to win a medal in this competition.

Click here to download PDF material: CA 30.05.2022