Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 22, 2022

TNPSC Current Affairs – May 22, 2022

0

C.A.22.05.2022 (Tamil Version)

 

  1. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அணைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 7-ம் குறைந்துள்ளது.

 

  1. பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் பயன் பெரும் 9 கோடி பேருக்கு இந்த ஆண்டில் சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் (12 சிலிண்டருக்கு) வழங்கப்படும் எண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

  1. தமிழகத்தில் பிஏ-4 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 

  1. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கோடை காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு முன்பாக 1942, 1943, 1944 மாறும் 1945-ம் ஆண்டுகளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது

 

  1. எழும்பூர் ரயில் நிலையம் முழுமையாக உலக தரம் வாய்ந்த நிலையமாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக ரூபாய் 760 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

 

  1. மாதிரி ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், நாட்டில் 590 ரயில் நிலையங்கள் மேம்பட்டு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, ஓசூர் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் ரூபாய் 1000 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளது.

 

  1. பிரான்சில் அண்மையில் நடைபெற்ற காது கேளாதவறுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய போட்டியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார். இந்த போட்டியில் இந்திய 8 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலம் உள்ளிட்ட 17 பதக்கங்களை வென்றது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா டாப் 10 இடங்களுக்கு வந்துள்ளது.

 

  1. தமிழகத்தில் தற்போது உள்ள 20.27% வன பரப்பை 33% என்ற அளவில் அதிகரிக்க அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

  1. தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள “ஊட்டச்சத்தை உறுதிசெய்” என்ற பெயரிலான குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் திட்டத்தை உதகையில் காலை 7 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

  1. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள லால் மஹாலில் “லாவணி” நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்த பெண் நடனக்கலைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295 (குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் விதமாக வழிபட்டு தளத்தை அசுத்தப்படுத்துதல்) மற்றும் பிரிவு 186 (அரசு ஊழியரை பனி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

  1. தென்கொரியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தை (2-ம் நிலை) போட்டியில் காம்பவுண்ட் ஆடவர் அணி பிரிவில் இந்திய தங்கம் வென்றது. இந்த பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுஹான் கூட்டணி பிரிட்டன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது

 

  1. வெளிநாடுகளில் பரவும் குரங்கு அம்மை தொற்று

 

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜொ்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது.

 

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை வைரஸால் குரங்கு அம்மைத் தொற்று ஏற்படுகிறது. பெரியம்மை போன்ற வகையைச் சோ்ந்தது. பொதுவாக இது தீவிரத்தன்மை இல்லாதது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் இந்த வைரஸ், முதன்முதலில் 1958-இல் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-இல் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது. இப்போது குரங்கு அம்மைத் தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது.

 

எப்படி பரவுகிறது?

வைரஸால் பாதிக்கப்பட்டவா் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடா்பு கொள்ளும்போது இந்தக் குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது. எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக நம்பப்படுகிறது. மனிதா்களுக்கு மனிதா்கள் பரவுவது என்பது எச்சில், சளி மூலமாக இருக்கலாம். விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு என்பது கடித்தலின் மூலம் இருக்கலாம். உடல் திரவங்கள், சுவாச நீா்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம்

 

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் ஆரம்பகட்ட அறிகுறிகள். காய்ச்சல் தொடங்கி ஒன்றிலிருந்து மூன்று நாள்களுக்குள் அரிப்பு ஏற்படுகிறது. முகத்தில் தோன்றும் இந்த அரிப்பு பின்னா் கைகள், உள்ளங்கால்களுக்குப் பரவுகிறது. இந்த நோய்த்தொற்று பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும். பின்னா், தானாகவே மறைந்துவிடும்.

 

சிகிச்சை என்ன?

குரங்கு அம்மைக்கு என இப்போது தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுதொடா்பாக கண்காணிக்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

  1. கடந்த 2021-22-ம் ஆண்டில் டெல்லி மற்றும் மும்பையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

 

  1. ஆஸ்திரேலியவில் நடைபெற்ற பொது தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களை பெறாத காரணத்தால் எதிர்க்கட்சியான லேபர் கட்சி தலைவர் ஆண்டனி ஆல்பானேசி நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  1. இந்தியாவில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 8.357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த 2003-04-ம் நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடானது 430 டாலராக காணப்பட்டது. அத்துடன் ஒப்பிடும்போது இதன் வளர்ச்சி 20 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 

  1. இந்திய கனிமங்கள் உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 4% அதிகரித்துள்ளது.

 

C.A.22.05.2022 (English Version)

 

  1. The central government has reduced the excise duty on petrol by Rs 8 and the excise duty on diesel by Rs 6. As a result, petrol price has come down by Rs 9.50 per liter and diesel by Rs 7 per liter.

 

  1. Eight Finance Minister Nirmala Sitharaman has said that under the Prime Minister’s Free Cooking Gas Scheme, 9 crore people will be given a subsidy of Rs 200 per cylinder (12 cylinders) this year.

 

  1. Health Minister Subramanian has said that PA-4 corona infection has been detected in Tamil Nadu

 

  1. The Mettur Dam will be opened on May 24 for the cultivation of curry. For the first time since the independence of the country, water has been released from the Mettur Dam in the summer. Prior to this, water was released from the Mettur Dam in 1942, 1943, 1944 and 1945.

 

  1. Egmore Railway Station will be completely refurbished to a world class station. For this, Prime Minister Modi will launch projects worth Rs 760 crore on the 26th.

 

  1. Under the Model Railway Station project, 590 railway stations in the country have been upgraded and selected for operation. 27 railway stations including Arakkonam, Chengalpattu, Chennai Central, Egmore, Chennai Beach, Coimbatore, Madurai, Tiruchirappalli, Rameswaram, Kanyakumari and Hosur are to be upgraded. In the first phase, 5 railway stations at Chennai Egmore, Madurai, Katpadi, Rameswaram and Kanyakumari will be upgraded to world class value at a cost of Rs. 1000 crore.

 

  1. Prime Minister Narendra Modi hosted a dinner for Indian medalists at the recent Olympics for the Deaf in France. India won 17 medals including 8 gold, 1 silver and 8 bronze in this competition. And for the first time in history, India has reached the top 10 places.

 

  1. Chief Minister Stalin has said that the government is working to increase the existing forest cover in Tamil Nadu from 20.27% to 33%.

 

  1. Chief Minister Stalin inaugurated the program at 7 am in Udagai to launch a special medical camp for the detection of child development called “Ensure Nutrition” to be implemented throughout Tamil Nadu.

 

  1. Four persons, including a female dancer who videotaped “Lavani” dancing at the Lal Mahal in Pune, Maharashtra, have been charged under sections 295 of the Indian Penal Code (desecration of a site for insulting a particular religion) and section 186 (preventing civil servants from snowing).

 

  1. India wins gold in the compound men’s team event at the World Cup Archery (Level 2) in South Korea. In the final round of the division Abhishek Verma, Aman Saini, Rajat Chauhan defeated Britain to win the title.

 

  1. Overseas monkeypox infection

 

The monkeypox virus is endemic in many European countries, including the United States, Canada, and Australia. The infection was newly confirmed last Friday in Belgium, France and Jomney. So far it has spread to 80 people in 12 countries.

 

What is Monkey Measles?

Monkeypox infection is caused by the monkeypox virus. Belongs to the category of greatness. Usually it is mild. The virus, commonly found in central and western Africa, was first identified in 1958 in monkeys. The virus was first identified in humans in 1970 in the Democratic Republic of the Congo. The virus has been spreading again in Nigeria and Congo since 2017. Now monkeypox has been diagnosed for the first time in the UK.

 

How is it spread?

Monkeypox is spread when a person is infected with the virus or comes in close contact with animals. It is believed to be transmitted by rodents such as rats and squirrels. Human-to-human transmission can be through saliva and mucus. From animals to humans it can be through bites. The virus can enter the body through body fluids, respiratory droplets, or contaminated objects, as well as through the eyes, nose, and mouth.

 

What are the symptoms?

Early symptoms of monkeypox include fever, headache, body aches, swelling, and back pain. Itching occurs within one to three days of the onset of fever. This itch appears on the face and then spreads to the hands and soles of the feet. The infection usually lasts for two to four weeks. Then, it will disappear automatically.

 

What is the treatment?

There is currently no single treatment for monkeypox. However, smallpox vaccines have been shown to be highly effective in preventing the spread of the virus. The Ministry of Health has also instructed health officials to monitor airports and ports in this regard.

 

  1. Bangalore has created a large number of jobs in 2021-22, overtaking Delhi and Mumbai.

 

  1. Opposition Labor leader Anthony Albanese has been elected Prime Minister of Australia, as the ruling Liberal Alliance did not win enough seats in the Australian general election.

 

  1. India has received an unprecedented $ 8.357 billion in foreign direct investment in FY2021-22. This is up from $ 430 billion in FDI in fiscal year 2003-04. It is noteworthy that its growth is 20 times compared to that.

 

  1. Indian mineral production increased by 4% in March.

Click here to download PDF material: CA 22.05.2022

Exit mobile version