TNPSC Current Affairs – May 17, 2022

0
40

C.A.17.05.2022 (Tamil Version)

 

  1. உலகம் முழுவதும் 2566-வது புத்த ஜெயந்தி விழா நேற்று (16.5.2022) கொண்டாடப்பட்டது. முக்கியமாக புத்தர் பிறந்த இடமான நேபாளத்தில் உள்ள லும்பினியில் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இந்தியாவில் பௌத்த தலங்களான சாரநாத், புத்த கயை, குஷி நகரம் ஆகியவையும் லும்பினியும் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர கலாச்சார தொடர்பை வலுப்படுத்துகிறது. நேபாளத்தில் லும்பினி அருங்காட்சியகத்தை இரு நாடுகளும் இணைந்து அமைத்து வருவது வலுவான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது.

 

  1. 75 ஆண்டு கால தூதரக உறவு: நேபாள பிரதமர் தேவுபா கூறுகையில், “நேபாளத்தின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பிரதமர் மோடியுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நிறைவடைந்தது. கட்டமைப்பு மேம்பாடு, தொடர்பு, நீர்மின் உற்பத்தி, வேளாண்மை, மனித வளங்கள், உள்ளிட்ட துறைகளில் இந்தியா நேபாளத்துடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

 

  1. சர்வதேச மையத்துக்கு அடிக்கல்: புத்த மத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்தியா சர்வதேச மையத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் தூபாவுடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார். புதுதில்லியைத் தளமாகக் கொண்ட சர்வதேச புத்த சமய கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில் 2021 நவம்பரில் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையால் இந்த இடம் ஐபிசி ஒதுக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின் பிரதமர்கள் இருவரும் புத்த சமய மையத்தின் மாதிரி வடிவத்தைத் திறந்து வைத்தனர். பிரார்த்தனைக் கூடங்கள், தியான மையம்,நூலகம், கண்காட்சி அரங்கு, உணவகம் மற்றும் பல வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக இந்த மையம் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து வருகின்ற புத்த சமய யாத்திரிகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது திறந்திருக்கும்.

 

  1. நேபாளத்தில் உள்ள லும்பினிக்குப் பிரதமர் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட / பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்கள் பட்டியல்

 

  • புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் ( முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக)
  • அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்

 

  1. பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீரர் கென்டன் கூல் 16 முறை எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் எவெரெஸ்ட் சிகரத்தில் 16 முறை ஏறிய, நேபாளத்தை சேராத முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்

 

  1. சென்னை பேருந்துகளில் பயணிகளை குறிவைத்து திருடும் கும்பலை காயும் களவுமாக பிடிக்க தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் மாறுவேடத்தில் பயணிக்கிறார்கள். இவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் “கும்கி” போலீஸ் என்று அழைக்கிறார்கள்

 

  1. சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையில் இரண்டு அடுக்கு உயர் நிலை சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையழுத்தானது.தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புகழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

  1. தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

 

  1. சர்வதேச கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் தலைவராக டாக்டர் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியாவை சேர்ந்த ஒருவர் இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.

 

  1. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 2,485 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். “எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டர்வியதற்கான பரிசோதனை மையங்கள் 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  1. பிரெஞ்சு லீக் கால்பந்து போட்டியின் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் கிலியான் எம்பாபே வென்றார். இந்த விருதும் 3 வது முறையாக இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2019, 2021 ஆண்டுகளில் இவர் இந்த விருதை பெற்று இருக்கிறார்.

 

  1. பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் அஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்திய பெண்ணும் பொருளாதார நிபுணருமான ஸ்வாதி திங்க்ரா இடம்பெற்றுள்ளார்

 

  1. வடகொரியாவின் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த 8 பேர் நேற்று (16.5.2022) உயிரிழந்தனர். மேலும் 3.92 லட்சம் பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

  1. நேட்டோ அமைப்பில் இனைய இணைய விண்ணப்பிக்க போவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது. ரஷ்யா ஊடுருவல் அச்சத்துக்கு எதிராக பாதுகாப்பு தேடிக்கொள்ளும் வகையில் பின்லாந்தை தொடர்ந்து ஸ்விடன் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

  1. பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் நேற்று (16.5.2022) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் 2-வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

C.A.17.05.2022 (English Version)

 

  1. The 2566th Buddhist Jayanti festival around the world was celebrated yesterday (16.5.2022). Celebrations erupted mainly in Lumbini, the birthplace of the Buddha in Nepal. Buddhist sites in India such as Sarnath, Buddhist Gaya, Kushi Nagar and Lumbini strengthen the mutual cultural ties between the two countries. The joint efforts of the two countries to set up the Lumbini Museum in Nepal show strong cooperation.

 

  1. 75 years of diplomatic relations: The Prime Minister of Nepal Deoba said, “India is a close ally of Nepal. Bilateral talks with Prime Minister Modi have concluded constructively. India has been working with Nepal in areas including infrastructure development, communication, hydropower generation, agriculture, human resources.

 

  1. Laying the foundation stone for the International Center: Prime Minister Modi also attended the groundbreaking ceremony for the India International Center for Buddhist Culture and Heritage. The site, owned by the New Delhi-based International Federation of Buddhists, was allotted to the IPC in November 2021 by the Lumbini Development Foundation. After the groundbreaking ceremony, the two Prime Ministers unveiled the prototype of the Buddhist Center. The center will be world class with facilities such as prayer halls, meditation center, library, exhibition hall, restaurant and many more. It is open to Buddhist pilgrims and tourists from all over the world.

 

  1. List of MoUs / Agreements signed / exchanged during the Prime Minister’s visit to Lumbini, Nepal

 

  • Memorandum of Understanding between Lumbini Buddhist University and the Council for Cultural Relations of India on the establishment of the Dr. Ambedkar Chair for Buddhist Studies
  • Memorandum of Understanding between CNAS Tribhuvan University and the Council for Cultural Relations of India on the creation of the ICCR Seat for Indian Studies
  • Memorandum of Understanding between the University of Kathmandu and the Council for Cultural Relations of India on the creation of the ICCR Seat for Indian Studies
  • Memorandum of Understanding between India Institute of Technology, Chennai, University of Kathmandu, Nepal for Cooperation
  • Optional Letter for Agreement between Indian Institute of Technology, Chennai, University of Kathmandu, Nepal, Nepal (for Postgraduate Joint Graduation Program)
  • Agreement between SJVN Limited and the Electricity Authority of Nepal for the implementation and development of the Arun 4 Project

 

  1. British mountaineer Kenton Cool has climbed Mount Everest 16 times. He also became the first non-Nepalese athlete to climb Mount Everest 16 times.

 

  1. Martial arts-trained guards travel in disguise to catch a gang of thieves targeting passengers on Chennai buses. Top police officials call them the “Kumki” police

 

  1. A Memorandum of Understanding (MoU) was signed between the Government of Tamil Nadu, the National Highways Authority of India, the Chennai Port Authority and the Indian Navy in the presence of Chief Minister Stalin at the General Secretariat.

 

  1. One in five people in Tamil Nadu suffers from kidney failure, according to a public health study.

 

  1. Mohammad Rela has been appointed President of the International Liver Transplant Surgery Organization. This is the first time someone from Asia has taken over as head of the organization.

 

  1. Health Minister Subramanian has said that 2,485 people have been affected by dengue fever in Tamil Nadu this year. It is noteworthy that the number of testing centers for the detection of dengue fever in the “ELISA” system has been increased to 125.

 

  1. Paris Saint-Germain (PSG)’s Gillian Mbabane has won the French League Football Player of the Year award 2022. This is the 3rd time he has won this award. He has already received this award in 2019 and 2021.

 

  1. Swati Thingra, an Indian woman and economist, is a member of the Finance Committee of the Bank of England, the central bank of the United Kingdom.

 

  1. Eight people who were infected with the flu died yesterday (16.5.2022) as North Korea’s corona infection spreads rapidly. A further 3.92 lakh people have been diagnosed with the flu.

 

  1. Sweden has announced that it will apply to join the NATO Internet. Sweden has taken this decision following Finland in seeking protection against fears of Russian infiltration.

 

  1. Elizabeth Bourne was appointed the new Prime Minister of France yesterday (16.5.2022). It is noteworthy that she is the 2nd woman to be appointed to this post.

Click here to download PDf material: CA 17.05.2022