TNPSC Current Affairs – May 16, 2022

0
43

C.A.16.05.2022 (Tamil Version)

 

  1. தாமஸ் கோப்பை பேட்மிட்டன் போட்டியின் 73-ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக இந்திய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. தாய்லாந்தில் நடந்து வந்த இந்த போட்டியில் நேற்று (15.5.2022) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வென்று சாதனை படைத்துள்ளது.

 

  1. புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெற்று வந்த கம்பன் விழா நேற்று (15.5.2022) நிறைவடைந்தது.

 

  1. இந்தியாவின் 75-வது தலைமை தேர்தல் ஆணையராக முன்னாள் நீதித்துறை செயலர் ராஜீவ் குமார் நேற்று (15.5.2022) பதவியேற்றார். குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இவரது தலைமையில் வரும் ஜூலை – ஆகஸ்ட் கால கட்டத்தில் நடைபெற இருக்கிறது.

 

  1. குற்றவாளிகளுக்கு முன்கூட்டியே விடுதலை அல்லது பொது மன்னிப்பு வழங்குவது என்பது குற்றம் நடைபெற்ற மாநில கொள்கைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டும் மாறாக விசாரணை மாற்றம் செய்யப்பட்ட அல்லது நிறைவு பெற்ற இடத்தில முடிவெடுக்கப்பட கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

  1. திரிபுரா மாநில முதல்வராக மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மணிலா தலைவருமான மாணிக் சாஹா நேற்று (15.5.2022) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

  1. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியா டேக் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்

 

  1. நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெர்மெனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்துக்கு பின்னர் பின்லாந்து அதிபரும், பிரதமரும் இதனை கூட்டாக அறிவித்தனர்.

 

  1. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சி மேட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (15.5.2022) நடைபெற்ற ஆய்வில் யானை தந்ததால் ஆன அழகிய அணிகலன்கள் மற்றும் சுடுமண்ணால் ஆன அழகிய காதணிகள் கண்டெடுக்கப்பட்டது.

 

C.A.16.05.2022 (English Version)

 

  1. India has won the Thomas Cup for the first time in the 73-year history of badminton. India beat 14-time defending champions Indonesia 3-0 in the final of the tournament in Thailand yesterday (15.5.2022).

 

  1. The 3 day Kamban Festival in Pondicherry ended yesterday (15.5.2022).

 

  1. Former Judicial Secretary Rajiv Kumar was sworn in as the 75th Chief Election Commissioner of India yesterday (15.5.2022). Elections for President and Vice President are scheduled for July-August.

 

  1. The Supreme Court has ruled that early release or a general amnesty for offenders should be decided on the basis of state policies in which the crime was committed rather than where the trial was altered or completed.

 

  1. Manik Saha, a member of the state assembly and BJP leader from Manila, was sworn in as Tripura Chief Minister yesterday (15.5.2022). Prime Minister Modi has congratulated him.
  2. Italian Open tennis: Novak Djokovic of Serbia wins the men’s title and Iga Svia Tag of Poland wins the women’s title

 

  1. Finland officially announces NATO Internet presence The announcement was made jointly by the President and Prime Minister of Finland after a NATO meeting in Berlin, Germany.

 

  1. The first excavation work has been going on since March 16 on a 25 acre land at Uchi Matt on the northern bank of the deposit of Vijayakarisalkulam panchayat next to Vembakkottai near Sattur in Virudhunagar district. During the inspection conducted yesterday (15.5.2022), beautiful ornaments made of elephant tusks and beautiful earrings made of clay were found.

Click here to download PDF material: CA 16.05.2022