Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 7, 2022

TNPSC Current Affairs – June 7, 2022

0

C.A.07.06.2022 (Tamil Version)

 

  1. குஜராத்தின் சூரத்தில் நடைபெற்று வரும் அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 6) ஆய்வு மேற்கொண்டார். இந்த ரயில் குஜராத்தின் அகமதாபாத் – மகாராஷ்டிராவின் மும்பை இடையே மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் 508 கி.மீ., தூரம் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை தற்போது உள்ள ஆறு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ரூ.1.1 லட்சம் கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

  1. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) இடம்பெற்றுள்ள 6 நாடுகளுடனான இந்திய வா்த்தகம் வேகமாக அதிகரித்து வருவது மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. கடந்த 1981-ஆம் ஆண்டு ஜிசிசி உருவாக்கப்பட்டது. அந்தக் கவுன்சிலில் சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளன. அந்த நாடுகளுடனான இந்திய வா்த்தகம் கடந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஜிசிசி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதன் பங்கு 2020-21-ஆம் நிதியாண்டில் 15.5 சதவீதமாக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 18 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜிசிசி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் பங்கு 2020-21-ஆம் நிதியாண்டில் 9.51 சதவீதமாக இருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 10.4 சதவீதமாக அதிகரித்தது. ஜிசிசி நாடுகளிடம் இருந்து அந்நிய நேரடி முதலீடுகளையும் (எஃப்டிஐ) இந்தியா ஈா்த்து வருகிறது.

 

  1. மாற்றுத் திறனாளிகளுக்கு நலம் பயக்கும் வகையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார். சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

 

  1. நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் ஒரு பகுதியாக மத்திய நிதித் துறை, வா்த்தகத் துறை அமைச்சகங்களுக்கான ‘சிறப்பு வார’ கொண்டாட்டங்களை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘நிதி சாா்ந்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஜன் சமா்த்’ வலைதளம்: மத்திய அரசு செயல்படுத்தி வரும் 13 கடனுதவித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஜன் சமா்த்’ வலைதளத்தை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். அந்த வலைதளம் குறித்து அவா் கூறுகையில், ‘இந்த வலைதளத்தின் வாயிலாக மக்கள் கடன் பெறும் வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசை மையமாகக் கொண்டே நிா்வாகம் இருந்தது. ஆனால், தற்போது மக்களை மையப்படுத்தி அரசின் நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. முன்பெல்லாம், அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அரசை நோக்கி மக்கள் சென்றனா். தற்போது அரசின் சேவைகள் மக்களைத் தேடி வருகின்றன. புது தில்லி, ஜூன் 6: புதிய 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டார்.

 

  1. ஐ ஆர் சி டி சி வலைத்தளத்தில் மாதம் 12 பயண சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆதார் இணைத்தால் 24 சீட்டுகள் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்ட அக்னீ-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

 

  1. உள்நாட்டு தயாரிப்பு நிறுவங்களிடம் இருந்து 76,390 கோடிக்கு ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

C.A.07.06.2022 (English Version)

  1. Railway Minister Aswini Vaishnav today (June 6) inspected the Ahmedabad-Mumbai bullet train project in Surat, Gujarat. This train will run between Ahmedabad in Gujarat and Mumbai in Maharashtra at a speed of 320 kmph and 508 kmph. The train is expected to reduce travel time between the two cities from the current six hours to three hours. The project is being implemented at a cost of Rs 1.1 lakh crore with financial assistance from Japan.

 

  1. According to the Federal Ministry of Commerce, India’s trade with the six member states of the Gulf Cooperation Council (GCC) is growing rapidly. The GCC was created in 1981. The council includes Saudi Arabia, Bahrain, Kuwait, Oman, Qatar and the United Arab Emirates. Indian trade with those countries has seen significant progress in the last financial year. The share of imports from GCC countries in India’s total imports was 15.5 per cent in FY20-21. It increased to 18 percent in fiscal 2021-22. Exports to the GCC countries accounted for 9.51 per cent of India’s total exports in FY20-21. It increased to 10.4 percent in fiscal 2021-22. India is also attracting foreign direct investment (FDI) from GCC countries.

 

  1. MK Stalin on Monday inaugurated the Rs 1 crore museum set up to cater to the needs of the disabled. The museum is located at the office of the Commission for the Welfare of the Handicapped, located at Kamaraja Road, Chennai.

 

  1. Prime Minister Narendra Modi on Monday inaugurated the ‘Special Week’ celebrations for the Union Finance and Commerce Ministries as part of the 75th anniversary of the country’s independence. At the time, Aw said, ‘The federal government is implementing various financial projects. Steps are also being taken to make banking services available to all. ‘Jan Samath’ website: Prime Minister Modi has launched the ‘Jan Samath’ website, which has been created to integrate the 13 loan schemes being implemented by the central government. Commenting on the website, Aw said, ‘This website has made it easier for people to get credit. In previous regimes, the administration was state-centric. However, at present the administration of the state is centered on the people. As before, people went to the government to get government services. Currently government services are looking for people. New Delhi, June 6: Prime Minister Narendra Modi on Monday unveiled new 1, 2, 5, 10 and 20 rupee coins for public use.

 

  1. You can book up to 12 tickets per month on the IRCTC website. It has been announced that 24 tickets can be booked if Aadhar joins.

 

  1. The Agni-4 missile, capable of carrying nuclear weapons, was successfully tested.

 

  1. The defense ministry has approved the purchase of military equipment worth Rs 76,390 crore from domestic manufacturing companies.

Click here to download : CA 07.06.2022

Exit mobile version