TNPSC Current Affairs – June 23, 2022

0
21

C.A.23.06.2022 (Tamil Version)

 

 1. ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டா் ஃப்ளையிங் பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ சிங் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா். இதன்மூலம் இப்போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றார்.

 

 1. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது. ‘சூா்யா நுடன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பின் விலை ரூ. 18,000 முதல் ரூ. 30,000 வரை இருக்கும் என்றும், 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை ரூ. 10,000 முதல் ரூ.12,000 ஆயிரமாக குறையும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் ராம்குமாா் தெரிவித்தார்.

 

 1. ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி துறையில் ஒத்துழைப்பு வழங்க இந்தியா-ஆஸ்திரேலியா அமைச்சர்கள் இடையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

 1. மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக் காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். மாமன்னரின் திருவுருவச் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருணாநிதி திறந்து வைத்தார். ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை’ என்று பெயர் சூட்டினார்.

 

 1. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல உறைவிட உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

 

 1. ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலியாகினர்; 1,500 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில்1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதி கட்டடங்கள் தரைமட்டமாகின. கடந்த 2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்க உயிர்ச் சேதத்துக்கு இணையாக உள்ளது. எனினும், கடந்த 1998-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கத்தில் 4,500 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

 

 1. அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ஆர்த்தி பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 1. இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா புதன்கிழமை (22.6.2022) நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது.

 

 1. குவைத் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபா் புதன்கிழமை (22.6.2022) அறிவித்தாா்.

 

 1. மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது. அதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. சிங்கப்பூா் நாட்டின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் அதில் இடம்பெற்றுள்ளன. முழுக்க, முழுக்க வா்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டமாக இதனை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் இதுவாகும்.

 

C.A.23.06.2022 (English Version)

 

 1. Ronaldo Singh of India won silver in the 200m Flying at the Asian Track Cycling Championships, finishing 2nd. This made her the first Indian to win silver in the tournament.

 

 1. With the price of a household cooking gas cylinder selling for over a thousand, Indian Oil has developed a solar-powered stove. Named ‘Soya Nutan’, the stove is priced at Rs. 18,000 to Rs. 30,000 and if 3 lakh stoves are built it will cost Rs. Ramkumar, director of research and development at Indian Oil, said the rate would be reduced from Rs 10,000 to Rs 12,000.

 

 1. A consultative meeting was held between the Ministers of India and Australia to extend cooperation in the field of military logistics manufacturing.

 

 1. A memorial hall with a museum will be set up for King Rajagopala Thondaiman in Pudukottai. Stalin announced. Raja Rajagopala Thondaiman, the 9th King of the 300-year-old Pudukottai dynasty in Tamil Nadu, during his tenure provided various facilities including education, transport, agriculture and irrigation for the benefit of the people. The statue of the King was unveiled by Karunanidhi on March 14, 2000 at the Pudukottai District Collectorate premises. The Collector’s Office was named ‘King Rajagopala Thondaiman Palace’.

 

 1. Chennai Mylapore Ramakrishna Mission Student Home Boarding High School Centenary Celebration will be held.

 

 1. At least 1,000 people have been killed in a powerful earthquake in Afghanistan early Wednesday; 1,500 people were injured. Reported 6.1 units on the Richter scale. The epicenter was reported at 10 km. Experts said it was in depth. Buildings in the area were leveled by the quake. The previous earthquake in 2002 was similar to the previous one. However, another magnitude 6.1 earthquake in 1998 killed at least 4,500 people.

 

 1. Aarti Prabhakar, a scientist of Indian descent, has been appointed as the Principal Scientific Adviser to the President of the United States

 

 1. The bill to dissolve the Israeli parliament was passed on Wednesday (22.6.2022). Following this, the move to run the 5th public garden in the country in three years has gone to the next level.

 

 1. On Wednesday (22.6.2022), Crown Prince Sheikh Marshal Al Ahmed Al Jab announced the dissolution of the Kuwaiti parliament.

 

 1. The PSLV C-53 rocket with three satellites will be launched on the 30th. The rocket will be launched from the second launch pad of the Satish Thawan Research Center in Sriharikota at 6 pm on the same day. The 25-hour countdown is set to begin on June 29. It features Singapore’s Earth observation satellites. ISRO has launched this as a plan for full, wholesale trading activities. This is the second PSLV rocket project to be launched after Somnath took over as ISRO chief.

Click here to download PDF: CA 23.06.2022