Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 21, 2022

TNPSC Current Affairs – June 21, 2022

0

C.A.21.06.2022 (Tamil Version)

 

  1. 2014ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி இன்று (21.6.2022) கர்நாடகாவில் உள்ள மைசூரு அரண்மனை மைதானத்தில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த மைதானத்தில் கூடியிருந்த 15,000 பேருடன் இணைந்து யோகாசனம் செய்தார். பிரதமர் மோடியுடன் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய பிரமுகர்கள் யோகாசனம் செய்தனர்.
  2. தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று, அரசு மருத்துவமனையில் பணியாற்றி, புற்றுநோயியல் துறையில் கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவை மற்றும் விழிப்புணர்வு ஆற்றிய மருத்துவர் பாலமுருகனுக்கு, டில்லியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்க விருது வழங்கப்பட்டது.
  3. சென்னையில் நேற்று (20.6.2022) எஸ்.கிருஷ்ணசாமியின் சுயசரிதை நூலான “வானகம் இங்கு தென்பட வேண்டும்” வெளியீட்டு விழா நடந்தது.
  4. ஆவடி அருகே ரூபாய் 279-கோடியில் கட்டப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஓராண்டுக்குள் திறக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
  5. தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 80,000 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
  6. பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான மத்திய இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை பலத்தை இழந்தது.
  7. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்க அடுத்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்
  8. இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் ஏ.எல்.ஹச் எனும் அதி நவீன ஹெலிகாப்டர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

 

C.A.21.06.2022 (English Version)

 

  1. In 2014, the United Nations declared June 21 as International Yoga Day and adopted a resolution. Prime Minister Modi today (21.6.2022) attended an international yoga program at the Mysore Palace Grounds in Karnataka. He practiced yoga with 15,000 people gathered at the venue. Prime Minister Modi was accompanied by Union Minister Sarpanch Sono, Chief Minister Basavaraj bommai and key figures.
  2. Balamurugan, who studied at the Government Medical College, Chennai for the first time in Tamil Nadu, worked at the Government Hospital and rendered outstanding service and awareness to the rural people in the field of oncology, was awarded the Gold Medal at the Graduation Ceremony in Delhi.
  3. The launch ceremony of S. Krishnasamy’s autobiographical book “Vanakam Inku Tenpada Vendu” was held in Chennai yesterday (20.6.2022).
  4. Industry Minister Thangam Tennarasu has said that the Rs 279 crore IT park near Avadi will be opened within a year.
  5. Minister of Public Welfare Ma Subramanian says that 80,000 people have so far benefited under the Innuyir Kappom scheme in Tamil Nadu.
  6. The center-left coalition led by President Emmanuel Macron lost a majority in the French parliamentary elections.
  7. Prime Minister Naphtali Bennett has said a bill to dissolve the Israeli parliament will be tabled next week
  8. The state-of-the-art helicopter ALH has been newly deployed in the eastern region of the Indian Coast Guard.

Click here to download PDF material: CA 21.06.2022

Exit mobile version