Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 14, 2022

TNPSC Current Affairs – June 14, 2022

0

C.A.14.06.2022 (Tamil Version)

 

 1. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள தேடுபொறியான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சேவை ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏறக்குறைய 27 ஆண்டுகள் இந்த தேடுபொறி பயன்பாட்டில் இருந்துள்ளது.

 

 1. தமிழகத்தில் இந்திய வணப்பணி அதிகாரிகள் 7 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக எம்.ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 1. தமிழகத்தில் 18-வயதை கடந்த 94.31% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

 1. ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் ஆலத்தியூர் ஆலைக்கு “ஆற்றல் திறன் மிக்க அலகு” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 1. கண்புரை னாய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

 1. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி எழுதிய “அச்சமற்ற ஆட்சி” என்ற நூல் நேற்று (13.6.2022) வெளியிடப்பட்டது.

 

 1. மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பேனர்ஜியை நியமிக்க வகை செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 

 1. சென்னை ஐஐடி வேதியியல் துறை பேராசிரியர் டி.பிரதீப் மற்றும் அவரது குழுவினருக்கு “இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜீஸ் சர்வதேச தண்ணீர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஆண்டுக்கு இரு முறை சவூதி அரேபியாவால் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் 2 கோடி ருபாய் பரிசுத்தொகை, தங்க பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

 1. கடந்த 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நடந்த‘ ரீடிங் மாரத்தான்’ என்ற தொடர் வாசிப்பு போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு கூகுள் நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கூகுள் ‘ரீடிங் அலாங்க்’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் இயங்கும் செல்போன் செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை  தமிழ்நாட்டு மாணவர்கள் வாசித்துள்ளனர். வாசிப்பு பழக்கத்தை தூண்டும் இந்த நிகழ்வில் 18 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாட்டு  மாணவர்கள் கடந்த 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை  சரியாக வாசித்து  சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த குழந்தைகள் 9 லட்சத்து 82 ஆயிரம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்துள்ளனர். மேலும் 413 வட்டாரங்களுக்கு இடையே  நடந்த போட்டியில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62 லட்சத்து 82 ஆயிரம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49 லட்சத்து 19 ஆயிரம் சொற்களையும், மேலூர் வட்டாரம் 41 லட்சத்து 72 ஆயிரம் சொற்களையும் சரியாக வாசித்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.

 

C.A.14.06.2022 (English Version)

 

 1. Microsoft has announced that it will be discontinuing its Internet Explorer service from June 15, 2022. This search engine has been in use for almost 27 years.
 2. 7 Indian Wildlife Officers have been transferred in Tamil Nadu. M. Jayanthi has been appointed as the Chairman of the Pollution Control Board.
 3. According to the Health Department, 94.31% of 18-year-olds in Tamil Nadu have been vaccinated for the first time.
 4. Ramco Cement’s Alathiyoor plant has been awarded the title of ‘Energy Efficient Unit’.
 5. Health Minister Ma Subramanian has informed that steps have been taken to create a cataract frees Tamil Nadu.
 6. Former Governor of Pondicherry Kiranpedi’s book “Fearless Rule” was published yesterday (13.6.2022).
 7. A bill to appoint Chief Minister Mamata Banerjee as the Chancellor of Universities in West Bengal has been passed in the state assembly.
 8. Chennai IIT Department of Chemistry Professor D. Pradeep and his team have been awarded the “Prince Sultan Bin Abdul Aziz International Water Award”. The award is presented twice a year by Saudi Arabia. The award carries a cash prize of Rs 2 crore, a gold medal, a trophy and certificates.
 9. Tamil Nadu students have set a world record in the ‘Reading Marathon’ series of reading competitions held at home search centers from the 1st to the 12th of last month. According to a memorandum of understanding signed by the Government of Tamil Nadu with Google, Tamil Nadu students read children’s stories through a cell phone processor powered by Google’s ‘Reading Along’ artificial intelligence technology. 18 lakh 36 thousand students enthusiastically participated in this event which stimulates reading habits. Tamil Nadu students have achieved a record reading of 263.17 crore words correctly in the last 12 days. 9 lakh 82 thousand children from Tamil Nadu have read hundreds of stories in this event. In the competition held between 413 circles, Lalgudi area of ​​Trichy district has won the first place by reading 62 lakh 82 thousand words correctly. Alankanallur area of ​​Madurai district has got 49 lakh 19 thousand words and Melur area has got 41 lakh 72 thousand words correctly and is in the second and third places.

 

Click here to download PDF: CA 14.06.2022

Exit mobile version