TNPSC Current Affairs – June 13, 2022

0
50

C.A.13.06.2022 (Tamil Version)

 

  1. உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பிரிட்டன் அரசி எலிசபெத் பெற்றுள்ளார். பிரான்சில் கடந்த 1643-முதல் 1715-வரை ஆட்சி செய்த 14-ம் லூயிஸுக்கு அடுத்தபடியாக அரசி எலிசபெத் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  2. மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் கனிமொழி தங்கம் வென்றுள்ளார்.
  3. மத்திய அரசின் தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகச் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழக அரசின் சேவை வலைதளங்கள் அனைத்து அம்சங்களிலும் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தரநிலையைப் பூா்த்தி செய்துள்ளன. அந்த வரிசையில் பஞ்சாப், ராஜஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, ஆந்திரம், கேரளம், பஞ்சாப், கோவா, ஒடிஸா அரசுகளின் சேவை வலைதளங்கள் 100 சதவீதம் தரநிலையை மேம்படுத்தியுள்ளன. இந்த மதிப்பீட்டில் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் ஜம்மு-காஷ்மீா் முதலிடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வரிசையில் மேகாலயம், நாகாலாந்து முன்னணியில் உள்ளன.
  4. மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து பயணிகளுக்கு வழக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றை குடிநீராக மாற்றும் வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள அனைத்து 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பயணிகளுக்கு குடிநீர் விநியோகிக்க ரிவர்ஸ் சவ்வூடுபரவல் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் திறக்கப்பட்ட விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள மூன்று வசதிகளில் காற்றை குடிநீராக மாற்றும் வசதியும் ஒன்றாகும்..

 

C.A.13.06.2022 (English Version)

 

  1. Britain’s Queen Elizabeth has become the second longest serving monarch in the world. It is noteworthy that Queen Elizabeth II succeeded Louis XIV, who ruled France from 1643 to 1715.
  2. Kanimozhi of Tamil Nadu has won gold in the 100m hurdles at the National Inter-State Athletics Championships.
  3. Tamil Nadu has made progress in the Central Government’s National Government Internet Service Assessment. Tamil Nadu has made significant progress in 2021 compared to 2019 in the National Government Internet Service Rating. Tamil Nadu Government Service Websites meet more than 75% standards in all aspects. Punjab and Rajasthan are also in the list. In addition, service websites of Andhra Pradesh, Kerala, Punjab, Goa and Odisha have upgraded their standards to 100 per cent. Jammu and Kashmir tops the list of Union Territories. Meghalaya and Nagaland are leading in the list of North Eastern States.
  4. A project to produce drinking water from the air at metro stations has been introduced. Atmospheric water generators have been installed at the airport, Alandur and Coimbatore metro stations to convert air into drinking water. Reverse osmosis technology has been installed at all 41 metro stations in the city to supply drinking water to passengers. The air-conditioning facility is one of three facilities at the airport metro station that opened this week.

Click here to download PDF : CA 13.06.2022