Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – June 12, 2022

TNPSC Current Affairs – June 12, 2022

0

C.A.12.06.2022 (Tamil Version)

 

  1. ஒயிஸ் மென் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

 

  1. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், “என் குப்பை, என் பொறுப்பு” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மறைமலை நகர் நகராட்சியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

 

  1. உத்திர பிரதேசத்தில் ரூபாய் 1500 கோடியில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் அமைய உள்ளது. கான்பூரில் உள்ள ராணுவ தொழில்பேட்டை திட்ட உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகம் அமைய உள்ளது. இந்த வளாகத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தில் ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது.

 

  1. நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை செயல்படுவது வழக்கம். சில நாட்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரவு வரை செயல்படுவதும் உண்டு. ஆனால் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே கடந்த 9-ம் தேதி 190 வழக்குகளையும் 10-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரித்துள்ளார். இந்த 2 நாட்களிலும் அவர் காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பணிபுரிந்துள்ளார்.

 

  1. கோவை-ஷிரடிக்கு முதல் தனியார் ரயில் இயக்கம். ஜூன் 12ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது.

 

  1. யூனிஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்

 

  1. இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான ஆய்வு மற்றும் ஆவண மையம் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.

 

  1. நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலுக்கு பிறகு மாநிலங்களவையில் பாஜக-வின் பலம் 95-ல் இருந்து 92-ஆக சரிந்துள்ளது. அதே சமயம் காங்கிரசின் பலம் 29-ல் இருந்து 31- ஆக அதிகரித்துள்ளது.

 

  1. இந்தியாவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக ஆப்பிரிக்க ஒன்றியம் திகழ்கிறது என்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை செயல் அதிகாரி சியாம் பிரசாத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகத்தை தொடா்ந்து இந்தியாவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக ஆப்பிரிக்க ஒன்றியம் திகழ்கிறது. அதேவேளையில், ஆப்பிரிக்கா உடனான வா்த்தகத்தில் இந்தியாவுக்கு வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம்) நிலவுகிறது. கடந்த 2019-20-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா உடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 9.1 பில்லியன் டாலராக (ரூ.71,110 கோடி) இருந்தது. இது சரக்கு வா்த்தகத்தில் இந்தியாவின் மொத்த வா்த்தகப் பற்றாக்குறையில் சுமார் 6 சதவீதம் ஆகும் என்றார் அவா்.

 

  1. தொழில்நுட்ப விவகாரங்களில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டோரஸின் தூதராக இந்திய தூதரக மூத்த அதிகாரி அமன்தீப் சிங் கில் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  1. பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

  1. வடகொரியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டுள்ளார்

 

C.A.12.06.2022 (English Version)

  1. Scientist Sivathanu Pillai received the Lifetime Achievement Award on behalf of the Voice Men International.
  1. On the eve of former Chief Minister Karunanidhi’s birthday, Chief Minister MK Stalin launched the “My Garbage, My Responsibility” program on June 3. Under this project, cleaning work was carried out in Maraimalai Nagar Municipality.
  1. Uttar Pradesh has the largest military logistics complex in South Asia at a cost of Rs 1,500 crore. The campus is part of the Army Industrial Estate project in Kanpur. The complex is equipped with state-of-the-art technology such as rockets and missiles. The agreement has been signed by the Adani Group.
  1. The High Courts in the country usually function from 10.30 am to 4.30 pm. Some even have night shifts to investigate emergencies on certain days. But Mumbai High Court judge SS Shinde has heard 190 cases on the 9th and more than 200 on the 10th. During these 2 days he worked from 10.30 am to 8 pm.
  1. First private train service to Coimbatore-Shirdi. The first private train from North Coimbatore to Siradi will run on June 12 at 6 pm. It will be run by MNC Property Developers, a Coimbatore-based company.
  1. Thanjavur Tamil University Vice Chancellor Vander said that the resolutions of the Thirukkural Conference will be implemented at the UNESCO arena
  1. For the first time in India, a Transgender Research and Documentation Center has been opened in Madurai
  2. The strength of the BJP in the state assembly has dropped from 95 to 92 after the state elections. At the same time, the strength of the Congress has increased from 29 to 31.
  3. Siam Prasad, CEO of State Bank of India in South Africa has said that the African Union is India’s 4th largest trading partner. The African Union is India’s 4th largest trading partner, followed by the United States, China and the United Arab Emirates. At the same time, India has a trade deficit (more imports than exports) in trade with Africa. India’s trade deficit with Africa in 2019-20 was $ 9.1 billion (Rs 71,110 crore). This is about 6 per cent of India’s total trade deficit in freight.
  4. UN Security Council Senior Ambassador to India Amandeep Singh Gill appointed Ambassador General Antonio Guterres
  5. Rwanda’s court approves plan to send refugees to Britain illegally
  6. Cho Chan Hui has been appointed North Korea’s first female foreign minister

Click here to download PDF Material : CA 12.06.2022

Exit mobile version