TNPSC Current Affairs – June 08, 2022

0
39

C.A.08.06.2022 (Tamil Version)

 

  1. அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்றைய தினம் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசுகையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடா்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின்படி, அப்பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது. நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை
    • டென்மார்க்
    • பிரிட்டன்
    • ஃபின்லாந்து
    • மால்டா
    • ஸ்வீடன்
    • லக்ஸம்பா்க்
    • ஸ்லோவேனியா
    • ஆஸ்திரியா
    • ஸ்விட்சா்லாந்து
    • ஐஸ்லாந்து

ஆய்வின் பல்வேறு பிரிவுகள் இந்தியாவின் தரவரிசை

  • பல்லுயிர்ப் பெருக்கம் பாதுகாத்தல் – 179
  • உயிரினங்கள் பாதுகாப்பு குறியீடு – 175
  • உயிரினங்கள் வாழ்விட குறியீடு – 80
  • காடுகள் இழப்பு – 75
  • புல்வெளிப் பகுதிகள் இழப்பு – 116
  • சதுப்புநிலப் பகுதிகள் இழப்பு – 60
  • காற்றின் தரம் – 179
  • கடலில் பிளாஸ்டிக் கலப்பு – 135
  • பருவநிலை மாற்றம் – 165
  • கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பு – 136
  • வேளாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு – 47

 

  1. பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவு இறுதிச்சுற்றில் 250.6 புள்ளிகளுடன் அவா் முதலிடம் பிடித்தாா். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா (247.6) வெள்ளியும், ஸ்வீடனின் அனா நோா்மன் (225.6) வெண்கலமும் வென்றனா். ஏற்கெனவே அவனி லெகாரா எட்டியிருந்த 249.6 புள்ளிகள் தான் உலக சாதனை அளவாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறாா். அத்துடன், 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கும் அவா் தகுதிபெற்றாா். டோக்கியோ பாராலிம்பிக்கில் 1 தங்கம், 1 வெண்கலம் வென்ற அவனி லெகாரா, பாராலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
  2. செஸ் ஒலிம்பியாட்டிலும் இனி ‘ஜோதி ஓட்டம்’ நடத்தப்பட போவதாக சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது
  3. முப்படை தலைமை தளபதி நியமன விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாக பயன்படுத்தும் வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமை தளபதி பதவியை ஒன்றிய அரசு உருவாக்கியது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு, முப்படை தலைமை தளபதி காலியாக இருந்தது. இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பதவிக்கான நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், வைஸ் அட்மிரல் ஆகியோர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்படும் நபரின் வயது 62-க்கு குறைவாக இருக்கவேண்டும் எனவும், அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் பதவிகாலம் 3 ஆண்டுகளாக உள்ள நிலையில், தேவைப்பட்டால் பதவிக்காலத்தை 65 வயது வரை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  4. அரசு பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் பொதுவான முகப்பு வரைபடங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
  5. கடந்த 2018-முதல் ஜூன் 7-ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், பெரிய மாநி லங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத், 3-ஆவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலங்கள் வந்துள்ளன. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் வநதுள்ளன.
  6. தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1000 இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  7. ரயில்வே திட்டங்களுக்காக 2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூபாய் 3865 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

C.A.08.06.2022 (English Version)

 

  1. India ranks last in the Environmental Performance Index for 180 countries, according to a study by US educational institutions. Last June 5th was observed as the International Environment Day. Speaking at an event in Delhi that day, Prime Minister Modi said India was working hard to protect the environment. In this context, the Yale Environmental Law and Policy Center under the auspices of Yale University in the United States and the International Geosciences Information Center under Columbia University conducted studies on environmental performance in 180 countries. The results of that study were recently released. According to the results, India is at the bottom of the list. Countries Environmental Performance Ranking
    • Denmark
    • Britain
    • Finland
    • Malta
    • Sweden
    • Luxembourg
    • Slovenia
    • Austria
    • Switzerland
    • Iceland

Ranking of India by various sections of the study

  • Conservation of biodiversity – 179
  • Creatures Protection Code – 175
  • Habitat code for creatures – 80
  • Loss of forests – 75
  • Loss of grasslands – 116
  • Loss of wetlands – 60
  • Air quality – 179
  • Plastic composite in the sea – 135
  • Climate change – 165
  • Increase in carbon dioxide emissions – 136
  • Pesticide application in agriculture – 47

 

  1. India’s Avani Legra wins gold with a new world record at the Para World Cup in France. She topped the women’s 10m Rifle Standing SH1 Division finals with 250.6 points. Emilia Popska of Poland (247.6) won silver and Ana Norman of Sweden (225.6) won bronze. Avani Legra already holds the world record of 249.6 points, which he has now surpassed. She also qualified for the 2024 Paris Paralympics. Avani Legra won 1 gold and 1 bronze at the Tokyo Paralympics, becoming the first Indian athlete to win more than one medal at the Paralympics.
  2. The International Chess Federation has announced that the ‘Torch Run’ will no longer be held at the Chess Olympiad
  3. The Central Government has made amendments in the rules for the appointment of the Commander-in-Chief of the 3rd Battalion. The U.S. government created the post of Commander-in-Chief of the Tri-Forces to facilitate coordination between the Armed Forces, the Air Force and the Navy, and to devise mechanisms for the proper use of resources. Army chief General Pipin Rawat, who was appointed as the country’s first troop commander, was killed in a helicopter crash in Coonoor in December last year. After that, the Commander-in-Chief of the 3rd Battalion was vacant. In this situation, the United States government has made amendments to the appointment rules for the post of Commander-in-Chief of the 3rd Battalion. Accordingly, the Lieutenant General, Air Marshal and Vice Admiral have been declared eligible for appointment as Commander-in-Chief of the 3rd Battalion. It has been stated that the person appointed as the Commander-in-Chief of the 3rd Brigade should be below the age of 62 and the term of office of the person so appointed is 3 years and if necessary the Central Government may extend the term up to 65 years.
  4. Chief minister Stalin released general maps of government schools and government primary health care facilities.
  5. June 7, 2018 has been observed as World Food Security Day. The Food Safety Code is published annually on behalf of the Food Safety and Standards Commission in ensuring safe food for the public. In that regard, Tamil Nadu has topped the list of big money launderers in the Food Security Index for 2021-2022. Gujarat is in second place and Maharashtra is in third place. Also, Goa tops the list of smaller states, followed by Manipur and Sikkim.
  6. Chief Minister Stalin launched a program to provide life saving and rescue training to 1000 youth from 14 coastal districts in Tamil Nadu
  7. 3865 crore has been allocated to Tamil Nadu for railway projects in the financial year 2022-23.

Click here to download CA 08.06.2022