TNPSC Current Affairs – June 03, 2022

0
46

C.A.03.06.2022 (Tamil Version)

 

  1. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட் 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார். சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 

குறிப்பாக, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

 

குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரிடம் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை, முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ஆரூர்தாஸுக்கு கலைத் துறை வித்தகர் விருது: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

 

கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரைப்படி, 2021-ம் ஆண்டுக்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்(87) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் பிறந்த சண்முகநாதன், கடந்த 1953-ல் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பொறுப்பேற்று, இதுநாள் வரை 70 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் நீண்டநாள் செய்தி ஆசிரியராக பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டை தீர்மானித்தவர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 3-ம் தேதி (இன்று) வழங்குகிறார்.

 

கலைத் துறை வித்தகர் விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமையில் நடிகர் சங்கதலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் கொண்ட குழுஅமைக்கப்பட்டு, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவாரூரில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த ஆயிரம் திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம்தேதி (இன்று) ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது, பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை முதல்வர் வழங்குகிறார்.

 

  1. ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்த் டெக்னாலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் பெங்களூருவில் நாட்டிலே மிகப்பெரிய தனியார் விண்கல தயாரிப்பு மையத்தை பெங்களூருவில் புதன்கிழமை திறந்தது. கர்நாடக தொழில் மேம்பாட்டு துறையின் விண்வெளி பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது

 

  1. தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கு தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 13 வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடா்ந்து எதிர்த்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும். அதற்காக குழு அமைப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 போ் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 

  1. இன்று (3.6.2022) சர்வதேச மிதிவண்டி தினம். இந்தியாவில் இந்தியாவில் சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

 

  1. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிப் பொருள்களின் விநியோகத்தை மேற்பாா்வையிடுவதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கான வெளியுறவு அமைச்சக பிரதிநிதி ஜெ.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. அவா்கள், மூத்த தலிபான் அமைப்பினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவா். மேலும், மனிதாபிமான உதவிப் பொருள்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அந்தக் குழுவினா் சந்திப்பா். இந்தியா இதுவரை மனிதாபிமான உதவி அடிப்படையில் 20,000 மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5,00,000 தவணை கரோனா தடுப்பூசிகள், குளிா்கால ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை ஆப்கனுக்கு அனுப்பியுள்ளது. இந்தப் பொருள்கள் அனைத்தும் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மற்றும் உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர, மேலும் பல மருந்துகள் மற்றும் உணவு தானியங்களை ஆப்கனுக்கு வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது

 

  1. இந்தியா-செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. தூதரக மற்றும் பணி தொடா்பான கடவுச்சீட்டு வைத்திருப்பவா்களுக்கு விசா இல்லாத நடைமுறையை கொண்டு வருவது தொடா்பான ஒப்பந்தம், 2022-26 ஆண்டுகாலத்தில் இரு நாடுகளிடையேயான கலாசார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் இருநாடுகளிடையே இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பான ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவா்களும் கையெழுத்திட்டனா்.

 

  1. சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் உஜ்வலா திட்டத்தில் இணைப்பு பெற்றவா்களுக்கு மட்டுமே கிடைக்கும் என பெட்ரோலியத் துறை செயலா் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்

 

  1. அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் துணைப்பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் கான்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேல் நிறுவனங்கள், இந்தியாவுடன் இணைந்து உற்பததி செய்ய முன்வரவேண்டும். இஸ்ரேலுடனான 30ஆண்டுகால ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டு ஆராய்ச்சிகளும், உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

 

  1. புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பரிசோதனை முயற்சியாக, நாடு முழுதும், ‘பி.எம்., ஸ்ரீ’ எனப்படும் பிரதமர் மாதிரி பள்ளிகள் துவக்கப்படும். இவை, எதிர்காலத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் அமைப்பாக இருக்கும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்

 

 

C.A.03.06.2022 (English Version)

 

  1. Chief Minister Stalin personally urged Governor RN Ravi to expedite the approval of 21 bills to be passed in the Legislature. Chief Minister MK Stalin met Governor RN Ravi in ​​Chennai today. Ministers Thuraimurugan, Ponmudi and Thangam Tennarasu were present then. At the time, Chief Minister MK Stalin urged Governor RN Ravi to expedite the passage and passage of pending bills in the Legislature.

 

In particular, he urged the Tamil Nadu Siddha Medical University to expedite and approve the bill. In a press release issued by the Government of Tamil Nadu, he said, “Chief Minister MK Stalin met Governor RN Ravi in ​​person at the House of Governors and asked him to expedite the approval of the pending bills which have been passed in the Tamil Nadu Legislative Assembly and sent to the Governor for approval.

 

In particular, he urged the Governor to approve the Tamil Nadu Siddha Medical University Bill, 2022, with medical student admissions set to begin soon. At the beginning of the meeting, the Chief Minister thanked the Governor for sending the bill seeking exemption from NEET examination to the President for approval. In addition, the Tamil Nadu Co-operative Societies (Amendment) Bill, 1983, the Tamil Nadu Apartments Bill, 2022, and the Tamil Nadu University Bill, 2022, which have been passed in the Tamil Nadu Legislative Assembly and submitted to the Governor for approval, were expeditiously approved and upheld the spirit of the Constitution and the will of the people of Tamil Nadu. The Chief Minister has asked. ”

 

  1. On the occasion of Karunanidhi’s birthday, MK Stalin presents the Artist Writing Award to Shanmuganathan and the Artist Award to Arurdas.

 

Senior journalist I. Shanmuganathan (87) has been selected as the winner of the 2021 award by the selection committee for the Artist Writing Award. Born in the Trichy district, Shanmuganathan has been working as an assistant editor of the Daily Telegraph since 1953 and has been working in the field of journalism for over 70 years. He has long been a news editor in the editorial department of the magazine and has been one of the pioneers in determining the use of language in contemporary popular journalism. Chief Minister Stalin will present the Artist Writing Award to him on June 3 (today) at the Chennai General Secretariat.

 

Nasser, Chairman of the Actors’ Guild, has formed a committee headed by Director SB Muthuraman and Director Karu Palaniappan to select the recipient of the Artist of the Year Award. Born in Thiruvarur, Arurdas has been instrumental in the dialogue of thousands of films starring leading actors and actresses. On June 3 (today), the birthday of former Chief Minister Karunanidhi, the Chief Minister presents the Artist Memorial Art Department Award of Rs. 10 lakhs to Arurdas.

 

  1. Hyderabad-based Anand Technologies, a space technology company, on Wednesday opened its largest private spacecraft manufacturing facility in Bangalore. The center is located in the space park of the Karnataka Industrial Development Department and covers an area of 15 thousand square meters

 

  1. A 13-member panel headed by former Chief Justice of the Delhi High Court Murugesan has been set up to formulate the state education policy of the state of Tamil Nadu. As the Government of Tamil Nadu continues to meet the National Education Policy 2020 of the Central Government, an alternative state education policy of Tamil Nadu will be formulated as an alternative. A committee will be set up for this purpose. Stalin had announced. The government has set up a 13-member panel headed by retired Judge Murugesan to formulate state education policy accordingly.

 

  1. Today (3.6.2022) is International Bicycle Day. It is celebrated in India as the elixir of independence.

 

  1. For the first time since the Taliban seized control of Afghanistan, a senior official led by a senior official has visited India. A delegation led by Foreign Ministry Representative for Pakistan, Afghanistan and Iran JP Singh has visited Afghanistan to oversee the supply of humanitarian aid to India through the SAARC. They will meet and consult with senior Taliban operatives. The team will also meet with representatives of international organizations involved in the distribution of humanitarian aid. India has so far sent 20,000 metric tonnes of wheat, 13 tonnes of medicines, 500,000 installments of corona vaccines and winter clothing to Afghanistan on humanitarian aid. All of these items are donated to the Indira Gandhi Children’s Hospital in Kabul and to the UN, including the World Health Organization and the World Food Program. Handed over to organizations. Apart from these, India is taking steps to supply more medicines and food grains to Afghanistan

 

  1. Three agreements were signed between India and Senegal on cultural exchange, cooperation in youth affairs and visa-free practice for officials. The two leaders also signed agreements on the introduction of visa-free procedures for diplomatic and passport holders, the renewal of the two countries’ cultural exchange program in 2022-26 and the enhancement of cooperation in youth affairs between the two countries.

 

  1. Petroleum Secretary Pankaj Jain has said that the Rs 200 subsidy for cooking gas cylinders will be available only to those who join the Ujwala scheme.

 

  1. Israeli Deputy Prime Minister and Minister of Defense Benjamin Kans, who is on a state visit to Delhi, met Prime Minister Narendra Modi. During the meeting, Israeli companies producing security equipment should come forward to co-manufacture with India. The Prime Minister assured that joint research, production and development projects would be implemented with a view to strengthening 30 years of diplomatic relations with Israel.

 

  1. As a pilot initiative to implement the new national education policy, PM model schools, known as ‘PM, Sri’, will be launched across the country. These will be an organization that prepares students for the future, said Union Education Minister Dharmendra Pradhan

Click here to download PDF material: CA 03.06.2022