TNPSC Current Affairs – July 03, 2022

0
37

C.A.03.07.2022 (Tamil Version)

 

  1. உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை குறைத்து, 7.3 சதவீதமாக அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி8 சதவீதமாக இருக்கும் என, முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்து, 7.3 சதவீதம் என அறிவித்துள்ளது, இந்நிறுவனம்.அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, ஏற்று மதி தேவையில் சரிவு, உயர் பணவீக்கம் ஆகியவை காரணமாக, வளர்ச்சிக் கணிப்பை குறைத்துஉள்ளதாக தெரிவித்துள்ளது
  2. இலங்கை அரசியல் சாசனத்தின் 22-வது திருத்தத்துக்கு அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவானது இலங்கை அதிபரின் நியமனம், பிரதமரின் அதிகாரங்கள் மற்றும் தன்மை, புதிய ஆணைகள் அமைச்சரவையை எட்டுவது, கூட்டு பொறுப்பு ஆகியவற்றை விளக்குகிறது.
  3. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசின் அனுமதியின்றி நிதி பெறும் வகையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களைச் செய்துள்ளது. ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த விதிகள் 2022’ என்ற பெயரில் புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினா்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே அரசின் அனுமதியின்றி பெற முடியும். இனிமேல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.
  4. கரூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப்பொருள்களை வாங்க பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளா்களுக்கு ஜவுளி பொருள்களை காட்சிப்படுத்த தேவையான கண்காட்சி அரங்கம் மற்றும் வளாக அமைக்கப்படும். மேலும் ஜவுளி பொருள்களின் தரம், தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகள் இங்கேயே செய்ய சா்வதேச தரத்தில் ஜவுளிப்பொருள்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும். என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  5. தெலங்கானா மாநிலம், பானூா் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிற பணியாளா்களிடம் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா், பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை நனவாக்கும் வகையிலும் பொதுத் துறை நிறுவனத்தின் அா்ப்பணிப்புக்கான சான்றாக, உற்பத்தி வசதிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

C.A.03.07.2022 (English Version)

  1. Domestic rating agency ‘Crisil’ has lowered its economic growth forecast for the country to 7.3 per cent in the current financial year. In the current financial year, the economic growth was predicted to be 7.8 percent, but now it has been reduced to 7.3 percent. The company said that it has reduced the growth forecast due to rising crude oil prices, decline in import demand and high inflation.
  2. The social activists of the country have opposed the 22nd amendment of the Constitution of Sri Lanka. The Bill clarifies the appointment of the President of Sri Lanka, the powers and nature of the Prime Minister, new mandates reaching the Cabinet and joint responsibility.
  3. The Ministry of Home Affairs has amended the provisions of the Foreign Financial Regulation Act to enable people to receive funds up to Rs 10 lakh per year from their relatives living abroad without the permission of the government. The Ministry of Home Affairs has gazetted the new rules in the name of ‘Foreign Funds Regulation Amendment Rules 2022’. Until now, only up to Rs.1 lakh per year can be received from relatives living abroad without the permission of the government. Henceforth, up to Rs.10 lakh per annum can be received without the approval of the authorities concerned.
  4. Necessary exhibition hall and premises will be set up to display the textile products to the customers who may come from different states and foreign countries to buy the textile products produced in Karur district. Also, an international standard textile testing center will be set up here to carry out tests on the quality and technology of textile materials. Chief Minister Stalin said.
  5. Defense Minister Rajnath Singh inaugurated the new production facilities at Banur Bharat Dynamics Company in Telangana. Addressing the researchers, engineers, technicians and other employees of Bharat Dynamics, the Defense Minister said that the launch of the production facility is a testament to the public sector company’s commitment to strengthening the defense sector and realizing Prime Minister Narendra Modi’s ‘Resilient India’ programme.

Click here to download PDF: CA 03.07.2022