TNPSC Current Affairs – July 01, 2022

1
37

C.A.01.07.2022 (Tamil Version)

 

 1. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே; துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்பு. மகாராஷ்டிராவில் 20-வது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார்.

 

 1. சிங்கப்பூரின் டிஎஸ்-இஓ உள்பட 3 வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 53 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தவிர சிந்தடிக் அப்ரேச்சா் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சிங்கப்பூரின் நியூசா் செயற்கைக்கோளும் நிலைநிறுத்தப்பட்டது. இது அனைத்துப் பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியது. இதனுடன் கல்விசாா் பணிக்காக சிங்கப்பூா் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவா்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  நான்காம் நிலை: பிஎஸ்எல்வி வரலாற்றில் முதல்முறையாக செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு பயன்பாடற்று இருக்கும் ராக்கெட்டின் நான்காம் நிலையையும் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்த இம்முறை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டின் இறுதிபாகமான பிஎஸ் 4 பகுதியில் ஆறு ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

 1. இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகா் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

 

 1. ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் புதன்கிழமை(ஜூன் 29) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.79.03-ஆகக் குறைந்தது. இருப்பினும் வியாழக்கிழமை காலை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் அதிகரித்து ரூ.78.90-ஆக ஆனது.

 

 1. 24 வயதான நீரஜ் சோப்ரா94 மீட்டர் தூரம் எறிந்து, 90 மீட்டர் தூரத்தில் வெறும் 6 சென்டிமீட்டர் தூரம் எறிந்து, ஈட்டி எறிதல் உலகில் தங்கத் தரத்தை எட்டியதோடு, அந்த முயற்சியே இறுதியில் அவரது சிறந்த முயற்சியாக மாறியது. அவரது மற்ற எறிதல்கள் 84.37 மீ, 87.46 மீ, 84.77 மீ, 86.67 மற்றும் 86.84 மீ. ஜூன் 14 அன்று ஃபின்லாந்தின் துர்குவில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது அவரது ஈட்டி 89.30 மீ என்ற தேசிய சாதனையை அவர் சிறப்பாகச் செய்தார்.

 

 1. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில்9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378 ஆகும். குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 176. நாடு முழுவதும் ஒரு எம்.பிக்கு ஒட்டு மதிப்பு 700 ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆகும். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378.

 

C.A.01.07.2022 (English Version)

 

 1. Maharashtra Chief Minister Eknath Shinde; Deputy Chief Minister Devendra Patnavis sworn in. Eknath Shinde, the 20th Chief Minister of Maharashtra, was an auto driver before joining politics.

 

 1. The PSLV-C53 rocket carrying 3 commercial satellites including Singapore’s DS-EO was successfully launched from the second launch pad of Satish Dhawan Space Research Centre, Sriharikota, and Andhra Pradesh. Apart from this, Singapore’s Newsar satellite, which operates on synthetic approach radar technology, has also been deployed. It can take and send clear photos in all weather conditions. Along with this, a satellite named Scoop-1 designed by the students of Singapore Nanyang Technological University for academic work was also successfully launched. Fourth stage: For the first time in the history of PSLV, an attempt has been made to use the fourth stage of the rocket, which is inactive after releasing the satellites, for research work. Accordingly, six probes have been launched in the PS4 region, the final segment of the PSLV C-53 rocket

 

 1. Virudhunagar district has been ranked first among the developing districts in India for its good performance in small, small and medium enterprises.

 

 1. On Wednesday (June 29), the Indian rupee fell to a June low of Rs 79.03 against the US dollar. However, the Indian rupee gained 13 paise to Rs 78.90 against the dollar in morning trading on Thursday.

 

 1. The 24-year-old Neeraj Chopra opened with a stunning throw of 89.94m, just 6cm shy of the 90m mark, the gold standard in the world of javelin throw and that effort eventually turned out to be his best. His other throws measured 84.37m, 87.46m, 84.77m, 86.67 and 86.84m. He bettered his earlier national record of 89.30m, which his spear had travelled while finishing second in the Paavo Nurmi Games in Turku, Finland, on June 14

 

 1. The Election Commission of India has announced that the Presidential election will be held on July 18. The BJP alliance secured 48.9 percent votes of all MLAs and MPs to elect the President. The total vote value of MLAs and MPs in Tamil Nadu voting in this presidential election is 76,378. In the election to elect the President of the Republic, the vote value of a legislator in Tamil Nadu is 176. The vote value of an MP across the country is 700. The vote value of all MLAs in Tamil Nadu is 41,184. The total number of votes of MLAs and MPs in Tamil Nadu voting in this presidential election is 76,378

Click here to download PDF: CA 01.07.2022

1 COMMENT

Comments are closed.