TNPSC Current Affairs – Aug 09, 2022

0
31

CA 09.08.2022(Tamil Version) 

முக்கிய தினங்கள் 

1. 09.08.2022 

  • உலக பழங்குடியினர் சர்வதேச தினம். 
  • சர்வதேச பழங்குடிகள் தினம் 1982 ஆம் ஆண்டு முதல் 39 ஆம் ஆண்டாக ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கொண்டாடப்படுகிறது. 

மாநில செய்திகள்  

1. கைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு விருது 

  • பட்டு பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  
  • இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  
  • 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான  
  • முதல் பரிசு திரிபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உறுப்பினருக்கும்,  
  • இரண்டாவது பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க த்தினருக்கும்,  
  • மூன்றாவது பரிசு ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும் அறிவிக்கப்பட்டது.  
  • பருத்தி ரகத்துக்கான  
  • முதல் பரிசு மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும்,  
  • இரண்டாவது பரிசு சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும்,  
  • மூன்றாம் பரிசு மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கும் அறிவிக்கப்பட்டது. 
  • பாராட்டு சான்றிதழ்கள் அடங்கிய சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளருக்கான முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே  
  • சென்னை அம்பாடி எண்டர்பிரைசஸ் 
  • கோ-ஆப்டெக்ஸ் 
  • ஈரோடு சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது. 

2. கொந்தகை அகழாய்வில் 74 சூது பவளமணிகள் கண்டெடுப்பு 

  • அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவளமணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  
  • கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் இதுவரை 55 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன.  
  • அவற்றில் ஒரு தாழியினுள் அடர் சிவப்பு நிறமுடைய 74 சூது பவள மணிகள் உள்ளன.  
  • பழங்காலத்தில் இந்த இறந்த நபர்களை தாழியினுள் வைத்து புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து புதைப்பது வழக்கம்.  
  • அந்த வகையில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள சூது பவளம் மணிகளும் வைக்கப்பட்டு இருக்கலாம். இவை அனைத்தும் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள பவளமணிகள்.  
  • இதனை இறந்தவர் மாலையாக அணிந்திருக்கலாம் என தொல்லியலாளர்கள் தெரிவித்தனர். 

3. நெல் சாகுபடியில் தோய்வு 

  • நாட்டின் நடப்பு கரீஃப் பருவத்தில் நெல் சாகுபடி நிலப்பரப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  
  • ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு 274.30 லட்சம் ஹெக்டேராக இருந்தது.  
  • இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 314.14 லட்சம் ஹெக்டேராக இருந்தது. நெல் பயிரிடப்படும் நிலப்பரப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது.  
  • குறைந்த அளவு நெல் பயிரிடப்படுவது  
  • மேற்கு வங்கம் (12.28 லட்சம் ஹெக்டேர்),  

மத்திய செய்திகள் 

1. மாநிலங்களவை செயல் திறன் 70% அதிகரிப்பு  

  • குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் திறன்மிக்க தலைமையின் காரணமாக மாநிலங்களவையின் செயல் திறன் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  
  • வெங்கையா நாயுடு அவை தலைவராக திகழ்ந்த ஐந்தாண்டு காலத்தில் மாநிலங்களவையில் 177 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டோ அல்லது ஒப்புதல் பெறப்பட்டோ உள்ளது. 

2. தர மதிப்பிலும் அதிகம்  

  • இந்தியாவைப் பொறுத்தவரை அதிக கிரேண்ட் மாஸ்டர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.  
  • அதுவே கிராண்ட் மாஸ்டர்களின் சராசரி தரமதிப்பு அடிப்படையில் கணக்கில் கொண்டால் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைக்கும். 
  • டாப் 10 நாடுகள்: 
சம்மேளனம் ஜிஎம்களின் எண்ணிக்கை  ஜிஎம்களின் சராசரி தர மதிப்பு 
ரஷ்யா 211 2,734 
அமெரிக்கா 103 2,731 
ஜெர்மனி 94 2,635 
உக்ரைன் 89 2,671 
இந்தியா 73 2,682 

விளையாட்டு செய்திகள் 

1. 2026 செஸ் ஒலிம்பியாட் 

  • 2026 இல் ஒலிம்பியாட் போட்டிகள் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முழுமையான போட்டிகள் 2024 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற உள்ளது.  
  • 2026 செஸ் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் அல்லது சாமர்க்கண்ட் நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2. சிந்து, சென்னுக்கு முதல் தங்கம்  

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாட்மின்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். 
  • இரட்டையரிலும் தங்கம்: பாட்மின்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்/சிரக் க்ஷெஷ்டி கூட்டணி தங்கத்தை வென்றனர்.  
  • வெண்கல பதக்கத்துக்கான ஆட்டங்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.  
  • டேபிள் டென்னிஸ்: 
  • மூத்தவீரரான சரத் கமல் தங்கம் வென்றார்.  
  • சத்தியனுக்கு வெண்கலம்: 
  • ஆடவர் ஒற்றையரில் வெண்கல பதக்கம் வென்றார்.  
  • ஹாக்கி:  
  • இந்தியாவுக்கு வெள்ளி.  
  • கிரிக்கெட் மகளிர்க்கு இரண்டாம் இடம். 
  •  குத்துச்சண்டை 
  • சாகருக்கு வெள்ளி. 

3. இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் 

  • போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் நான்காம் இடம் பிடித்து நிறைவு செய்தது.  
  • ஆஸ்திரேலியா (67/57/54-178),  
  • இங்கிலாந்து (57/66/53-176),  
  • கனடா (26/32/34-92) ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. 

CA 09.08.2022(English Version) 

Important days 

1. 09.08.2022 

  • International Day of the World’s Indigenous Peoples. 
  • International Indigenous Peoples Day is celebrated on August 9th for the 39th year since 1982. 

State news 

1. Award to handloom weavers, exporters 

  • CM Stalin presented awards to the best handloom weavers and exporters for silk and cotton varieties. 
  • The event was held at Chennai Headquarters. 
  • For State Level Best Handloom Weaver Award for Silk category for the year 2021-2022 
  • First Prize to Tribhuvanam Silk Handloom Weavers Cooperative Member, 
  • Second Prize to Kanchipuram Scholar Anna Pattu Handloom Weavers Cooperative Society, 
  • The third prize was also announced to Arani Pattu Handloom Weavers Cooperative Society. 
  • For cotton variety 
  • First Prize to Mahakavi Bharatiyar Handloom Weavers Cooperative Society, 
  • The second prize goes to Shivashakti Handloom Weavers Cooperative Society, 
  • The third prize was also announced to Motilal Nehru Handloom Weavers Co-operative Society. 
  • The first, second and third prizes for Best Handloom Exporter with Certificates of Appreciation were awarded to  
  • Chennai Ambadi Enterprises,  
  • Co-Optex and  
  • Erode Chennimalai Weavers Co-operative Society respectively. 

2. Discovery of 74 Sutu Coral Beads in Kontakhai Excavation 

  • In the excavation, 74 coral beads were found in the old man’s chest. 
  • The eighth phase of excavation work is going on in the areas of Keezadi, Akaram, Kontakhai and Manalur near Tiruppuvanam in Sivagangai district. 
  • In the ongoing excavation work at Kontakhai, 55 elderly people’s talismans have been recovered so far. 
  • They contain 74 dark red coral beads in a thali. 
  • In ancient times, it was customary to bury these dead persons in a sack with the things they used to bury them. 
  • The Sutu coral beads which have been found in that way may also have been kept. These are all 3 cm long coral beads. 
  • Archaeologists said that the deceased may have worn it as a garland. 

3. Dip in rice cultivation  

  • According to reports, the paddy cultivation area of ​​the country has decreased by 13 percent during the current kharif season. 
  • As on August 5, the area under paddy cultivation in the country was 274.30 lakh hectares. 
  • It was 314.14 lakh hectares during the same period last year. 
  • The area under paddy cultivation has decreased by 13 percent. 
  • Less paddy cultivation 
  • West Bengal (12.28 lakh hectares), 

Central News 

1. 70% increase in efficiency of Rajya Sabha 

  • Prime Minister Narendra Modi hailed the efficiency of the Rajya Sabha by 70 percent due to the able leadership of Vice President Venkaiah Naidu. 
  • During the five years of Venkaiah Naidu’s presidency, 177 bills were debated or approved in the Rajya Sabha. 

2. High in quality value 

  • India ranks fifth in the list of countries with the most Grand Masters. 
  • If the same is calculated on the basis of average rank of Grand Masters, India gets third position. 
  • Top 10 Countries: 
Federation  Number of GMs  Average grade value of GMs  
RUSSIA 211 2,734 
U.K 103 2,731 
GERMANY 94 2,635 
UKRINE 89 2,671 
INDIA 73 2,682 

Sports news 

1. 2026 Chess Olympiad 

  • It was decided in the International Chess Federation (FIDE) General Council meeting that the Olympiad will be held in Uzbekistan in 2026. 
  • The 2024 Biennial Olympics will be held in Budapest, Hungary. 
  • It is reported that the 2026 Chess Olympiad will be held in Tashkent or Samarkand, Uzbekistan. 

2. Sindhu, the first gold for Chen 

  • PV Sindhu won women’s singles title and Lakshaya Sen won men’s singles title in Badminton at the Commonwealth Games. 
  • Doubles gold too:  
  • India’s Shathvik Sairaj/Chirak Ksheshti win gold in men’s doubles final in Badminton. 
  • Kidambi Srikanth won the men’s singles bronze medal match. 
  • Table Tennis: 
  • Veteran Sarath Kamal won gold. 
  • Bronze for Satyan: 
  • Won bronze medal in men’s singles. 
  • Hockey: 
  • Silver for India. 
  • 2nd position for cricket women. 
  • Boxing: 
  • Silver for Sagar. 

3. 61 medals for India 

  • India finished fourth in the tournament with 61 medals including 22 gold, 16 silver and 23 bronze. 
  • Australia (67/57/54-178),  
  • England (57/66/53-176) and  
  • Canada (26/32/34-92) occupied the top three positions respectively.