TNPSC Current Affairs – Sep 09, 2022

0
36

CA 09.09.2022(Tamil Version)

மத்திய செய்திகள்

1. பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவு

  • பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல் நலக்குறைவால் காலமானார்.
  • தனது தந்தை ஆறாம் சார்ஜ் மறைவைத் தொடர்ந்து 1952 இல் அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத் சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார்.
  • அவரது ஆட்சி காலத்தில் 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் நிர்வகித்துள்ளார்.
  • புதிய அரசர் சார்லஸ்:
  • எலிசபெத்தின் மறைவை அடுத்து பட்டத்து இளவரசர் ஆன சார்லஸ் பிரிட்டனின் அடுத்த அரசர் ஆனார்.
  • பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் உடனடியாக அடுத்த அரசர் ஆனார்.
  • அவர் மூன்றாவது சார்லஸ் என அழைக்கப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார்.

2. வானிலக்கை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

  • தரையில் இருந்து செலுத்தி அதிவேகத்தில் வானிலக்கை தாக்கி அழிக்கும் க்யூஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்தது.
  • இலக்கை அதிவேகத்தில் தேடிச்சென்று துல்லியமாக தாக்கி அழிப்பது இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சம்.
  • ராணுவத்தின் மூலமாக ஆறு முறை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த ஏவுகணை தற்போது ராணுவத்தில் சேர்க்கப்பட தயாராக உள்ளது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

3. நியூசிலாந்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம்

  • நியூசிலாந்து நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வெளியுரவு பணி மூத்த அதிகாரி நீத்தாபூஷன் நியமிக்கப்பட்டார்.
  • நியூசிலாந்துக்கான இந்திய தூதராக இருந்த முக்தேஷ் பர்தேசிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு ஜி 20 கூட்டமைப்புக்கான இந்திய செயலகத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

4. ராணுவ கூட்டு பயிற்சி அதிகரிக்க ஒப்புதல்

  • இந்தியா ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ராணுவக் கூட்டு பயிற்சியை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனது.
  • நடப்பு ஆண்டானது இந்தியா ஜப்பான் இடையிலான தூதரக நல்லுறவின் 70ஆவது ஆண்டை குறிக்கிறது.
  • இந்திய கடற்படையின் மிலன் கூட்டு பயிற்சியில் ஜப்பான் இணைந்ததற்கும் பரஸ்பர விநியோகம் மற்றும் சேவைகள் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டதற்கும் இக்கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

5. கடமை பாதை (கர்த்தவ்ய பாதை)

  • குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜ பாதை முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட கடமை பாதையை (கர்த்தவ்ய பாதை) பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
  • மேலும் இந்தியா கேட் பகுதியில் இந்தியா கேட் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 28 அடி உயரம் கொண்ட சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

விளையாட்டு செய்திகள்

1. யுஎஸ் ஓபன்

  • 5.15 புதிய சாதனை:
  • அல்கராஸ் சின்னர் மோதிய ஆட்டம் ஏறத்தாழ இறுதி சுற்று போல் பரபரப்புடன் 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.
  • இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 9 மணி 35 நிமிடத்துக்கு தொடங்கிய ஆட்டம் வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணி 50 நிமிடத்துக்கு நிறைவடைந்தது.
  • ஆட்டம் நிறைவடைந்த நேரம் அடிப்படையில் யூ எஸ் ஓபன் வரலாற்றிலேயே மிகத் தாமதமாக நிறைவடைந்த ஆட்டம் இதற்கு முன் நள்ளிரவு 2 மணி 26 நிமிடங்களுக்கு நிறைவடைந்ததே அதிகபட்சமாக இருந்தது.
  • அந்த நேரத்தை மூன்று ஆட்டங்கள் இதுவரை எட்டி உள்ளன.

CA 09.09.2022(English Version)

Central News

1. Death of Queen Elizabeth of Britain

  • Britain’s long-time queen Elizabeth dies of ill health.
  • Elizabeth II, who ascended the throne in 1952 death of her father’s accession to the Sixth Charge, has reigned for a record 70 years.
  • He managed 15 British Prime Ministers during his reign.
  • The new King Charles:
  • After Elizabeth’s death, Crown Prince Charles became the next King of Britain.
  • Prince Charles, the eldest son, immediately became the next king according to the British royal dynasty law.
  • It has been officially announced that he will be known as Charles the Third.
  • Charles is the oldest monarch in British history.

2. A new air-to-air missile test success

  • Defense Research and Development Organization (TRDO) announced that the ground-launched high-speed surface-to-air missile QURSAM has been successfully test-fired.
  • The special feature of this missile technology is to search for the target at high speed and destroy it accurately.
  • DRDO informed that the missile is now ready to be inducted into the Army after six successful trials by the Army.

3. Appointment of new Indian Ambassador to New Zealand

  • Senior External Affairs Officer Neethabhushan appointed as the new Indian Ambassador to New Zealand.
  • Former Indian Ambassador to New Zealand, Muktesh Bardesi was promoted and appointed to head the Indian Secretariat for the G20.

4. Approval to increase military joint training

  • Both countries agreed to further strengthen defense cooperation between India and Japan and increase joint military exercises.
  • The current year marks the 70th year of diplomatic relations between India and Japan.
  • Japan’s participation in the Indian Navy’s Milan Joint Exercise and the implementation of the Mutual Supply and Services Agreement were welcomed in the meeting.

5. Duty Path (Khattavya Patha)

  • Prime Minister Modi inaugurated the redesigned and renamed Duty Path (Kathavya Patha) along the Raj Path from the President’s House to India Gate.
  • The Prime Minister also inaugurated a 28 feet tall statue of freedom struggle leader Netaji Subhash Chandra Bose at the India Gate area.

Sports news

1. US Open

  • 5.15 New Achievement:
  • The match between Algaras and Sinner lasted 5 hours and 15 minutes with excitement almost like the final round.
  • The match started at 9:35 PM IST on Wednesday and ended at 2:50 AM on Thursday.
  • In terms of completion time, the longest finish in US Open history was 2:26 a.m., the previous record.
  • Three games have reached that time so far.