TNPSC Current Affairs -June 25, 2022

0
38

C.A.25.06.2022 (Tamil Version)

  1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக தி லான்சென்ட் மருத்துவ இதழ் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. கொரோனா இறப்புகள் தொடர்பாக, தி லான்செட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: அதிகப்படியான கொரோனா இறப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் உலகளவில் நிகழ வேண்டிய சாத்தியமான14 கோடி கொரோனா மரணங்களில் 1.98 கோடி இறப்புகள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டுள்ளன.
  2. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இருந்து புதிதாக தேர்வாகியுள்ள 5 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தலைவர் வேங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
  3. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமிதாப் கந்த். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலின் படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அமிதாப் காந்த்தின் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவு பெறுவதையொட்டி புதிய அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பதவியேற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் பிஃபா யு-17 மகளிர் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
  5. கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணையான விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம், ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  6. 2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு (வி.நாராயணன்) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலானது சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர் எனும் ஆங்கில நாவலை மொழிபெயர்த்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  7. தொழில்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஸ்ரீபெரும்புதூர், ஒசூரில் ரூ.33.46 கோடியிலான 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களையும் திறந்து வைத்தார்.

 

C.A.25.06.2022 (English Version)

  1. The Coronavirus vaccine will prevent more than 42 million deaths in India by 2021, according to a study by The Lancent Medical Journal. A study by The Lancet Medical Journal concludes that coronavirus deaths are estimated to be 1.98 million out of a possible 3.14 million coronary deaths worldwide in 2021 alone.
  2. Andhra Pradesh, Telangana and Odisha state assembly president Venkaiah Naidu administered the oath of office to the five newly elected state assembly MPs.
  3. Amitabh Khand is the Chief Executive Officer of the Finance Commission. He was appointed as the Executive Officer of the Finance Commission in February 2016. His term has been extended to June 2022 with the approval of the Cabinet Appointments Committee. Parameswaran Iyer has been appointed as the new officer following the end of Amitabh Kant’s tenure on June 30. It has been announced that he will continue in this post for two years from the date of his appointment or until further notice.
  4. India have been placed in Group A of the FIFA U-17 Women’s Football World Cup to be held in October.
  5. The VL-SRSAM, an anti-ship missile, was successfully tested from Chandipur, Orissa.
  6. Writer Malone has been awarded the Sahitya Akademi Award for Translation in 2021. In that announcement, it has been announced that the Sahitya Akademi Award for Tamil Translation will be given to the author Malan (V. Narayanan) for his book Historical Notes on a Funeral Home. It is noteworthy that the book The Historical Notes of a Funeral Home is a translation of the English novel Chronicle of Corpus Barrier by Cyrus Mystery.
  7. Chief Minister MK Stalin participated in the Tamil Nadu Advanced Production Conference held on behalf of the industry. At the conference, Chief Minister MK Stalin laid the foundation stone for the Rs 77 crore mini tidal parks in Tirupur and Villupuram districts. Chief Minister MK Stalin also inaugurated the Rs 212 crore Tamil Nadu Advanced Manufacturing Center at the Taramani Tidal Park in Chennai. He also opened 2 Chipkot Industrial Innovation Centers worth Rs. 33.46 crore in Hosur, Sriperumbudur.

Click here to download PDF: CA 25.06.2022