TNPSC Current Affairs – Sep 10, 2022

0
39

CA 10.09.2022(Tamil Version)

மத்திய செய்திகள்

1. கடத்தல், அந்நிய செலாவணி தீர்ப்பாயத்தின் தலைவர்

  • கடத்தல் அந்நிய செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனிஸ்வர்நாத் பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
  • இந்நிலையில் அவரை கடத்தல், அந்நிய செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி மும்மு உத்தரவிட்டுள்ளார்.
  • இவர் நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.

2. இங்கிலாந்து தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் மாறுகிறது

  • இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்து புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்ற இருப்பதால் அந்த நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாறுகின்றன.
  • கடந்த 1952 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் இரண்டாம் எலிசபெத் பதவி ஏற்றார்.
  • அப்போது முதல் அந்த நாட்டின் தேசிய கீதத்தில் காட் சேவ் தி குயின் என்ற வரிகள் பாடப்பட்டது.
  • தற்போது சார்லஸ் மன்னராக இருப்பதால் காட் சிவ் தி கிங் என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.
  • இங்கிலாந்தில் நாணயங்கள் கரன்சியில் பவுண்ட் தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் இடம் பெற்று இருக்கிறது.
  • இதே போல பாஸ்போர்ட், அஞ்சல் தலை, அஞ்சல் பெட்டிகள் ஆகியவற்றிலும் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

3. வேலைவாய்ப்பு திறன் தரவரிசை கிரசன்ட் 19 ஆவது இடம்

  • அகில இந்திய அளவில் வேலை வாய்ப்பு திறனுக்கான தரவரிசை பட்டியலில் கிரசன்ட் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு 19 ஆவது இடம் கிடைத்துள்ளது.
  • கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கற்பிக்கும் திறன், ஆய்வத்திறன் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு எண்ணிக்கை, வெளிநாட்டு பரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாணவர்கள் பரிமாற்றம், புத்தொழில் ஊக்குவிப்பு, பன்னாட்டு, உள்நாட்டு வேலைவாய்ப்பு பெரும் மாணவர்கள் எண்ணிக்கை, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பயன்படுத்தி டேட்டா கொஸ்ட் பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலை தயார் செய்தது.
  • ஹைதராபாத் ஐஐடி கல்லூரி முதல் இடத்தையும்,
  • சென்னை வண்டலூர் கிரஷன் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 19வது இடத்தையும் பெற்றுள்ளன.
  • தனியார் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய அளவில் கிரசன்ட் பன்னிரெண்டாவது இடத்தையும்,
  • தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.

4. ஆண்டுக்கு 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிப்பு

  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் வகையிலான ஆலையை நிறுவ முதல் முறையாக தனியார் நிறுவனங்களிடம் ரயில்வே ஒப்பந்த புள்ளி கூறியுள்ளது.
  • ரயில் சக்கரங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவை மாற்ற புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் சக்கரங்களில் பெரும்பாலானவை உக்ரைன், ஜெர்மனி, செக் குடியரசு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
  • அந்த வகையில் ஒரு சக்கரத்துக்கு ரூபாய் 70 ஆயிரம் செலவிடப்படும் நிலையில் உள்நாட்டிலேயே அவற்றை தயாரிப்பதால் ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க அளவில் தொகை மிச்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • முன்னதாக வந்தே பாரத் அதிவேக ரயில்களுக்காக ரூபாய் 170 கோடியில் 39,000 சக்கரங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கடந்த மே மாதம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
  • உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக இதர நாடுகளில் இருந்து சக்கரங்கள் விநியோகம் தடைபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க முயற்சி

  • காச நோயாளிகளுக்கு உதவுவதற்காக நிக்ஷய் 2.0’ என்ற இணையதளத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.
  • இதன் மூலம் காச நோயாளிகளை தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அமைப்புகள் தத்தெடுத்து அக்கறை செலுத்த முடியும்.
  • இந்நிலையில் காசநோய் ஒழிப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி மும்மு பேசியதாவது:
  • காசநோயை ஒழிப்பதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
  • நிச்சயம் பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
  • காச நோய்க்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு கூடுதல் நோய் குறி அறிதல், ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை வழங்கும் நிக்ஷய் மித்ரா திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

6. ஐநா மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய அதிகாரி நியமனம்

  • ஐநா மனித உரிமை ஆணையராக ஆஸ்திரேலிய சேர்ந்த தூதரக உயர் அதிகாரி வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதுவரை அந்த பொறுப்பை வகுத்து வந்த சிலியைச் சேர்ந்த மிஷெல் பாஷலேவின்  பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு வோல்கர் டர்க்கின் பெயரை ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியா குட்டேரஸ் பரிந்துரைத்தார்.
  • அதற்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுச் சபை ஒப்புதல் அளித்தது.
  • அதை அடுத்து ஐந்தாம் மனித உரிமை ஆணையராக அவர் பொறுப்பேற்கிறார்.

விளையாட்டு செய்திகள்

1. வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

  • ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் பைனல்ஸ் போட்டியில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்தார்.
  • இந்த போட்டிகள் சாம்பியன் ஆகிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

CA 10.09.2022(English Version)

Central News

1. Head of Trafficking and Foreign Exchange Tribunal

  • Chief Justice Muniswarnath Bhandari of the High Court has been appointed as the Chairman of the Appellate Tribunal in the smuggling and foreign exchange fraud cases.
  • Madras High Court Chief Justice Muniswarnath Bhandari is set to retire on the 12th.
  • In this case, President Draupadi Mummu has appointed him as the head of the Appellate Tribunal in cases of kidnapping and foreign exchange fraud.
  • He will hold this post for four years.

2. UK national anthem, currency, passport changes

  • As Queen Elizabeth II of England passed away and Charles was installed as the new king, the country’s national anthem, currency, passport, etc. changed in 1952, Elizabeth II became Queen of England.
  • Since then the national anthem of that country has sung the lines ‘God Save the Queen’.
  • The National Anthem is changed to ‘God Save the King’ now that Charles is King.
  • Coins in England currently have the image of Queen Elizabeth II on the pound.
  • Similarly, changes are being made in passports, postage stamps, post boxes in favor of Charles.

3. Crescent ranks 19th in employability ranking

  • Crescent Institute of Technology has been ranked 19th in the All India Employability Ranking List.
  • Structure of educational institutions, teaching capacity, number of research papers published, foreign exchange agreements, student exchange, promotion of innovation, international and domestic employment, large number of students, salary, etc.
  • IIT Hyderabad got the first position,
  • Chennai Vandalur Krishan Institute of Higher Technical Education has also secured 19th rank.
  • Crescent ranks twelfth in all India among private educational institutes.
  • Tamil Nadu has also got the third position.

4. Annual production of 80,000 railway wheels

  • For the first time, the railway contract point has asked private companies to set up a plant capable of manufacturing at least 80,000 railway wheels per year under the Make in India programme.
  • A new action plan has been formulated to make India an exporter of railway wheels.
  • Most of the railway wheels required by Indian Railways are imported from Ukraine, Germany and Czech Republic.
  • According to the officials, while the cost of Rs 70,000 per wheel is being spent locally, the railways will save a significant amount of money by manufacturing them locally.
  • Earlier last May, a contract for procurement of 39,000 wheels for ‘Vande Bharat’ high-speed trains at a cost of Rs 170 crore was awarded to a Chinese company.
  • It is noteworthy that this action was taken because the supply of wheels from other countries was interrupted due to the war between Ukraine and Russia.

5. Strive to eradicate tuberculosis by 2025

  • The central government is running a website called ‘Nikshai 2.0’ to help TB patients.
  • Through this TB patients can be adopted and cared for by individuals elected representatives or organizations.
  • Meanwhile, President Draupadi Mummu spoke at a program held in Delhi regarding the eradication of tuberculosis:
  • Government’s efforts to eradicate tuberculosis are commendable.
  • Surely everyone should work to make the campaign a people’s movement.
  • He launched the ‘Nikshai Mitra’ program to provide additional diagnosis and nutrition to TB patients.

6. Appointment of Australian official as UN Human Rights Commissioner

  • High Commissioner from Australia Volker Turk has been appointed as the UN Human Rights Commissioner.
  • UN Secretary-General Antonio Guterres nominated Volker Durk for the role following the completion of the tenure of Chile’s Michelle Bachelet, who held the role until now.
  • It was approved by the 193-member UN General Assembly.
  • After that he will take charge as the fifth Human Rights Commissioner.

Sports news

1. Neeraj Chopra made history

  • Indian javelin thrower Neeraj Chopra became the champion in the Diamond League Finals held in Switzerland.
  • He has the honor of being the first Indian to win these tournaments.