TNPSC Current Affairs – Sep 07, 2022

0
32

CA 07.09.2022(Tamil Version)

மத்திய செய்திகள்

1. வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின்   வாரிசுகளுக்கு உதவித்தொகை

  • வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வங்கபந்து முஜிபுர் ரஹ்மான் பெயரில் உதவி தொகை வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
  • கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பிராந்தியம், மேற்கு பாகிஸ்தான் உடனான 1971-ஆம் ஆண்டு போருக்கு பிறகு வங்கதேசம் என்ற தனி நாடானது வங்கதேசத்தின் விடுதலைக்கு இந்தியா முக்கிய பங்காற்றியது.
  • அந்த போரில் 1984 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
  • வங்கதேசத்தின் முதல் பிரதமரும் ஷேக் ஹஸினாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயரில் அந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

2. மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

  • பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குனராகம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது.
  • சுவாச பாதையின் மேற்பரப்பில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை கரோனா தடுப்பூசி தடுப்பதில்லை எனக் கூறிய பாரத் பயோடெக் நிறுவனம் அதற்கு தீர்வு காணும் நோக்கில் பிபிவி 154 என்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரித்து அந்த மருந்தை சுமார் 4000 தன்னார்வலர்களிடம் பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதனை செய்தது.
  • அதில் எவருக்கும் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. மீண்டும் சிவிங்கி புலி திட்டம்

  • இந்திய காடுகளில் மீண்டும் சிவிங்கி புலியை (சீட்டா) அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 இல் தொடக்கி வைக்க உள்ளதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
  • திட்டத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகள் அன்றைய தினம் தேசிய பூங்காவில் விடப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.
  • செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் ஆகும்.
  • உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய உயிரினமான சிவிங்கி புலிகள் ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.
  • நாட்டில் கடைசியாக காணப்பட்ட சிவிங்கிப்புலி இன்றைய சத்தீஸ்கர் பகுதியில் கடந்த 1947 இல் கண்டறியப்பட்டது.
  • இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952 இல் அறிவிக்கப்பட்டது தற்போது உலகம் முழுவதும் சுமார் 7000 சிவிங்கிப் புள்ளிகளை காணப்படுகின்றன.
  • அவற்றில் பெரும்பாலானவை ஆப்ரிக்க காடுகளில் உள்ளன.

4. வாஸ்டாக்

  • கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ரஷ்யாவில் வாஸ்டாக் என்ற பெயரிலான ராணுவ கூட்டு பயிற்சி தொடங்கியது.
  • ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
  • இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன.
  • ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

5. யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியல்

  • பலதரப்பட்ட மக்களிடையே கல்வியை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரளத்தின் திருச்சூர், நீலம்பூர் ஆகிய நகரங்களும் தெலுங்கானாவின், வாரங்கல் நகரமும் யுனெஸ்கோவின் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
  • சர்வதேச அளவில் மக்களுக்கு சிறப்பான கல்வி வசதிகளை அளித்து வரும் நகரங்களை யுனெஸ்கோ கௌவுரவித்து வருகிறது.
  • அந்த பட்டியலில் 44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • வாரங்கலில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக  யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது.
  • தற்போது வாரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 76 நாடுகளைச் சேர்ந்த 294 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

6. சூவெல்லா பிரேவர்மன் பிரிட்டன் உள்துறை அமைச்சர்

  • புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வழக்குரைஞராகும் இவர் பிரிட்டனின் அட்டர்னி ஜெனரலாக உள்ளார்.
  • போரிஸ் ஜான்சன் பதவி விலகியதும் பிரதமர் பதவிக்கான போட்டியில் சூவெல்லாவும் களமிறங்கினார்.
  • எனினும், கட்சியினர் இடையே போதிய ஆதரவு பெறாததால், முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து விலகினார்.

7. பிரதமர் மோடி ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தை 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.
  • 7 ஒப்பந்தங்கள்
  • பின்னர் இரு தலைவர்களின் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • அவற்றில் இரு நாடுகளின் முதன்மையான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி அமைப்புகள் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.
  • மற்றொரு ஒப்பந்தம் வங்காளதேச ரயில்வேயில் தகவல் தொழில்நுட்ப செயலிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும்.
  • எல்லையில் உள்ள பொதுவான ஆறான குசியாராவில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது தொடர்பான ஒரு ஒப்பந்தமும் உள்ளது.
  • இதன் மூலம் தெற்கு அசாமும் வங்காளதேசத்தில் சைல்கட் பகுதியும் பலன் அடையும்.
  • வங்காளதேச ரயில்வே ஊழியர்களுக்கு,
  • இந்திய ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி அளிப்பது,
  • வங்காளதேசம் நீதித்துறை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது,
  • இந்தியாவின் பிரசார் பாரதிக்கும் வங்காளதேச டெலிவிஷனுக்கும் இடையே ஒத்துழைப்பு,
  • விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்களும் அடங்கும்.

விளையாட்டு செய்திகள்

1. தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதை தமிழக அரசு     

   அறிவித்துள்ளது

  • தமிழக அரசு 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதல்வரின் மாநில விளையாட்டு விருதை அறிவித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான டென்னிஸ் வீரர்கள் எஸ்.பிருத்வி சேகர் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக (ஆண்கள்) பெயரிடப்பட்டுள்ளனர்.
  • ஸ்ரீ நிவேதா (படப்பிடிப்பு) மற்றும்
  • சுனயா சாரா குருவில்லா (ஸ்க்வாஷ்) ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக (பெண்கள்) பெயரிடப்பட்டுள்ளனர்.
  • சத்குர்தாஸ் (துப்பாக்கி சுடுதல்) மற்றும்
  •  ஜி.கோகிலா (தடகளம்) சிறந்த பயிற்சியாளர்களாக சி.ராஜேஷ் கண்ணா (கால் பந்து) மற்றும்
  • எம்.பி. முரளி (பீச் வாலி பால்/ கைப்பந்து) சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
  • அதே சமயம் வி.பி. தனபால் (கூடைப்பந்து) சிறந்த நடுவராகவும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சிறந்த அமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான புல்வெளி டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் மற்றும்
  • தடகள வீரர் ஆர்.மோகன் குமார் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக (ஆண்கள்) பெயரிடப்பட்டுள்ளனர்.
  • மேலும் பி.அனுஷியா பிரியதர்ஷினி (டேக்வாண்டோ) மற்றும்
  • எஸ்.செலினா தீப்தி (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் சிறந்து விளங்குகின்றனர்.
  • சிறந்த பயிற்சியாளர்களாக கே.எஸ்.முகமது நிஜாமுதீன் (தடகளம்),
  • எஸ்.கோகிலா (உணவு பந்து) ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  
  • ஆர்.ராமசுப்ரமணியன் (பால் பேட்மிண்டன்) மற்றும்
  • சிறந்த உடற்கல்வி ஆசிரியர்களாக .ஆரோக்கியா மெர்சி (வாலிபால்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • சிறந்த நடுவராக டி.சுந்தரராஜ் (கபடி) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

CA 07.09.2022(English Version)

Central News

1. Scholarship to the heirs of Indian soldiers who died in the Bangladesh Liberation War

  • Prime Minister Sheikh Hasina said that the aid will be given in the name of ‘Vanga bandu’ Mujibur Rahman to the injured Indian soldiers who died in the Bangladesh Liberation War.
  • India played an important role in the liberation of Bangladesh, a separate country called ‘Bangladesh’ after the 1971 war with West Pakistan, a region that used to be East Pakistan.
  • 1984 Indian soldiers died in that war.
  • The grant is to be given in the name of Sheikh Mujibur Rahman, the first Prime Minister of Bangladesh and Sheikh Hasina’s father.

2. Approval of nasal anti-coronavirus

  • The Medicinal Products Regulatory Authority of India (DCGI) has approved emergency use of a nasal anti-coronavirus drug manufactured by Bharat Biotech.
  • Bharat Biotech Company has developed a nasal vaccine called PPV 154 and tested the drug on about 4000 volunteers in order to solve the problem that the Corona vaccine does not prevent corona infection on the surface of the respiratory tract.
  • The company said that no one was seriously affected.

3. Chivingi Tiger Project again

  • Prime Minister Narendra Modi will launch a plan to reintroduce chives (cheetahs) into Indian forests at Kuno National Park in Madhya Pradesh on September 17, state Chief Minister Shivraj Singh Chouhan said.
  • Chivingi tigers brought from South Africa for the project are to be released in the national park on that day, he said.
  • 17th September is Prime Minister Modi’s birthday.
  • The world’s fastest running animal, chives, were once found in large numbers in India.
  • The last spotted tiger in the country was discovered in present-day Chhattisgarh in 1947.
  • This species was declared completely extinct in India in 1952. At present there are about 7000 chivingi spots around the world.
  • Most of them are in African forests.

4. Vastok

  • Last September 1st joint military exercise named VASTOC started in Russia.
  • The exercise is taking place in the Far East of Russia and the Sea of ​​Japan.
  • 13 countries including India, China, Laos, Mongolia have participated in this.
  • More than fifty thousand soldiers are engaged in training.

5. List of UNESCO Education Cities

  • Kerala’s Thrissur and Neelumpur cities and Telangana’s Warangal city have been included in UNESCO’s list of educational cities for their efforts in bringing education to the diverse population.
  • UNESCO honors cities that provide excellent educational facilities to people internationally.
  • 77 cities from 44 countries have been added to the list.
  • Three cities from India are included in the list.
  • Ramappa Temple in Warangal was declared as one of the World Heritage Sites by UNESCO last year.
  • Currently Warangal city is included in the list of educational cities.
  • Presently 294 cities from 76 countries are included.

6. Suvella Braverman Britain Home Minister

  • Suvella Braverman of Indian origin has been appointed as Britain Home Minister in the new cabinet.
  • He is a lawyer and is the Attorney General of Britain.
  • Suvella also entered the race for the post of Prime Minister when Boris Johnson stepped down.
  • However, he withdrew from the contest in the first round due to insufficient support among the party members.

7. Prime Minister Modi Sheikh Hasina talks and signs 7 agreements

  • Bangladesh Prime Minister Sheikh Hasina arrived in Delhi yesterday on a four-day visit.
  • 7 contracts
  • Later 7 agreements were signed in the presence of the two leaders.
  • They include an agreement for scientific and technological cooperation between premier scientific and industrial research institutions of the two countries.
  • Another agreement is related to cooperation in IT applications and IT services in Bangladesh Railways.
  • There is also an agreement regarding the release of water from the Kusiara, a common river along the border.
  • This will benefit South Assam and Sylcut region in Bangladesh.
  • For Bangladesh Railway Employees,
  • Providing training in Indian Railways,
  • Training Bangladesh Judicial Officers in India,
  • Collaboration between India’s Prasar Bharati and Bangladesh Television,
  • Includes agreements on cooperation in space technology.

Sports news

1. Tamil Nadu Government has announced the Tamil Nadu Chief Minister’s State Sports Award

  • Government of Tamil Nadu has announced Chief Minister’s State Sports Award for 8 outstanding sportspersons for the year 2018-19 and 2019-20.
  • Tennis players S. Prithvi Shekhar and
  • Jeevan Nedunchezhiyan named Sportsperson of the Year (Male) for 2018-19.
  • Sri Nivetha (Shooting) and
  • Sunaya Sara Guruvilla (Squash) have been named Sportsperson of the Year (Women).
  • Satgurdas (Shooting) and
  • G.Kokila (Athletics) as best coaches
  • C.Rajesh Khanna (Football) and
  • M.P. Murali (Beach Volley Ball/ Volleyball) named as Best Physical Education Directors/Physical Education Teachers.
  • At the same time V.P. Dhanapal (Basketball) has been selected as the Best Referee and Tamil Nadu Basketball Association as the Best Organiser.
  • Lawn tennis player Prajnesh Guneswaran and
  • athlete R. Mohan Kumar have been named Sportsperson of the Year (Male) for 2019-20.
  • Also P. Anushiya Priyadarshini (Taekwondo) and
  • S. Selina Deepti (Table Tennis) stand out.
  • K.S Mohammad Nizamuddin (Athletics),
  • S. Kokila (Football),
  • R.Ramasubramanian (Ball Badminton) and
  • A. Arokia Mercy (Volleyball) were selected as the best coaches.
  • D. Sundararaj (Kabaddi) has been selected as the best referee