TNPSC Current Affairs – Aug 11, 2022

0
37

CA 11.08.2022(Tamil Version)

மாநில செய்திகள் 

1. மத்திய வரி பகிர்வில் மாநிலங்களுக்கு ரூபாய் 1.16  லட்சம் கோடி விடுவிப்பு   

  • மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப்பகிர்வில் நிகழ் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தவணை நிதியாக ரூபாய் 1,16,22,75 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.  
  • இதில் தமிழகத்துக்கு  ரூபாய் 4758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  
  • மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வழக்கமான மாதாந்திர தவணை ரூபாய் 5832.86 கோடியாகும்.  
  • இந்த மாதம் மற்றொரு தவணையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.  
  • கடந்த நவம்பரிலும் இதுபோன்று வழங்கப்பட்டது.  
  • 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 

மத்திய அரசின் செய்தி 

1. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி  

  • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டார்.  
  • உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.  
  • பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக அடுத்த தலைமை நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.  
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 124 துணை பிரிவு (2) அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசு தலைவர் நியமத்துள்ளார்.  
  • நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி 
  • தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டதன் மூலமாக வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.  
  • பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.  
  • இவருக்கு முன்பாக நீதிபதி எஸ்.எம்.சிக்ரி வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13 வது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார். 

2. கோர்பிவேக்ஸ்  

  • கோவாக்ஸின், கோவிட்ஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணையாக (பூஸ்டர்) பயாலஜிக்கல் நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.  
  • முன்னெச்சரிக்கை தவணையில் மாறுபட்ட தடுப்பூசியை செலுத்த அனுமதிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.  
  • கோர்பிவாக்ஸ் தடுப்பூசி தற்போது கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது வரை உடைய சிறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

3. சீனாவில் புதிய வைரஸ்’  

  • கொரோனாவை போலவே மிருகங்களிடமிருந்து மனிதர்களின் உடல்களில்  உருமாறித் தாவிய லாங்யா ஹெனிபா வைரஸ் என்ற புதிய தீநுண்மி சீனாவில் பரவி வருவதாக தைவான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.  
  • அந்த நாட்டில் இதுவரை 35 பேருக்கு அந்த தீநுண்மி பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

4. இந்தியா ஆஸ்திரேலியா திரைப்பட ஒப்பந்தம்  

  • இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே ஒரு ஆடியோ காட்சி இணை தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  
  • இது இரு நாடுகளுக்கும் இடையே திரைப்படங்களின் கூட்டு தயாரிப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

விளையாட்டு செய்திகள் 

1. தங்கம் வென்றார் பவானி தேவி  

  • இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். 

2. சர்வதேச வுஷு: இந்தியாவுக்கு தங்கம்  

  • ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச வுஷு போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கெவாட் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.  
  • சீன தற்காப்பு கலை வடிவமான வுஷு விளையாட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றில் இடம்பெறுகிறது. 

CA 11.08.2022(English Version)

State news 

1. Relief of Rs 1.16 Lakh Crore to States in Central Tax Distribution 

  • The Union Finance Ministry has released Rs 1,16,225,75 crore to 28 states in two installments in the month of August in the monthly tax distribution to the states. 
  • Of this, 4758.78 crore has been allocated to Tamil Nadu. 
  • The regular monthly installment to the states is Rs.5832.86 crores. 
  • Another installment has been added this month. 
  • This was also given last November. 
  • As per 15th Finance Commission recommendations, 41 percent of the total tax revenue of the Central Government is shared with the States. 

Central News 

1. New Chief Justice of Supreme Court 

  • U.U.Lalit was appointed as the 49th Chief Justice of the Supreme Court. 
  • The post of Chief Justice of the Supreme Court is given on the basis of seniority. 
  • It is customary for the incumbent Chief Justice to nominate and announce the next Chief Justice before his retirement. 
  • The President has appointed U.U.Lalith as the new Chief Justice of the Supreme Court based on the authority conferred by Article 124 sub-section (2) of the Constitution. 
  • Directly appointed Second Chief Justice: 
  • With the appointment of Chief Justice U.U.Lalit has become the second person to become a Supreme Court judge directly from a lawyer and later become the Chief Justice. 
  • U.U.Lalit, who was a famous senior advocate, was directly appointed as Supreme Court judge on 13th August 2014. 
  • Before him, Justice S.M.Sikri was a lawyer and directly became a judge of the Supreme Court and then became the 13th Chief Justice of the country in January 1971. 

2. Corbivax 

  • The central government has approved the administration of the ‘Biological E’ company’s CorbiVax vaccine as a booster dose (booster) to those who have received Covacsin, CovidShield Corona vaccine. 
  • This is the first time in India to allow administration of a variant vaccine in the precautionary phase. 
  • CorbiVax vaccine is currently being administered to minors aged 12 to 14 years under the Corona vaccination programme. 

3. New ‘virus’ in China 

  • The Taiwan Center for Disease Control has reported that a new pest called ‘Langya henipa virus’, which has metamorphosed from animals to humans like Corona, is spreading in China. 
  • So far 35 people have been confirmed infected with the virus in the country. 

4. India Australia Film Treaty 

  • The Union Cabinet has approved the signing of an Audio Visual Co-Production Agreement between India and Australia. 
  • It aims to facilitate joint production of films between the two countries. 

Sports news 

1. Bhavani Devi won gold 

  • Indian athlete Bhavani Devi won the gold medal in the Commonwealth Fencing Championship held in England. 

2. International Wushu: Gold for India 

  • India’s Priyanka Kewat has won the gold medal in girls’ under-18 category at the 
  • International Wushu Tournament held in Georgia. 
  • Wushu, a Chinese martial art form, is featured in Asian Games, South Asian Games, etc.