Home GOVERNMENT EXAMS Current Affairs – March 12, 2022

Current Affairs – March 12, 2022

0

C.A.12.03.2022 (Tamil Version) 

 

  1. விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா என்.ஜி நவீன பயிற்சி விமானத்தில் கடல்மட்ட சோதனைகள் வெற்றியடைந்துள்ளது
  2. NLC இந்தியா நிறுவனத்துக்கு விருது: விபத்தில்லாமல் இயங்கியது மற்றும் அதிக தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கான NLC இந்தியா நிறுவனத்துக்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-க்கான தேசிய பாதுகாப்பு விருதை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் வழங்க NLC இந்தியா சார்பில் சுரங்கதுரை செயல் இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
  3. கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2022-23-ம் நிதி ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
  4. சார்தாம் திட்ட உயராதிகார குழுத் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி .கே.சிக்ரி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர்காண்டில் யமுனோத்திரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 புனித தலங்களை (சார்தாம்) இணைக்க ரூபாய் 12,000 கோடி செலவில் 900 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. சீனா எல்லைவரை செல்லும்விதமாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
  5. சிறை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அமிதவா ராய் தலைமையிலான குழுவை நீதிமன்றம் நியமித்துள்ளது.
  6. ஆட்சிமொழி பயிலரங்க நிறைவு விழாவில் ஆட்சி மொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கேடயத்தை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

 

C.A.12.03.2022 (English Version)

 

  1. The Hansa NG state-of-the-art training aircraft developed in India for training pilots has been successfully tested at sea level
  2. Award to NLC India: NLC India has been awarded 4 National Awards for operations that have run accident-free and exhibit high technological capability. NLC India’s Executive Director Suresh Chandra Suman and Defense Officer Bharathi Dasan received the National Security Award for 2020 from Union Labor and Employment Minister Bhupender Yadav on behalf of NLC India.
  3. The government led by Kerala Chief Minister Pinarayi Vijayan on Friday tabled a paperless budget for the financial year 2022-23 in the Assembly on Friday.
  4. Former Supreme Court judge AK Sikri has been appointed as the chairman of the Sardam Project High Authority Committee. In Uttarakhand, a 900 km long highway will be constructed at a cost of Rs 12,000 crore to connect the four holy sites (Sardam) at Yamunotri, Gangotri, Kedarnath and Badrinath. The highway will be built to reach the Chinese border.
  5. The court has appointed a panel headed by retired judge Amitava Roy to study and make recommendations on reforms to be made in prison administration.
  6. The Chennai District Revenue Officer presented the shield to the Chennai District Collector’s Office for the excellent implementation of the Rule Language Project at the closing ceremony of the Rule Language Workshop.

Click here to download PDF material: CA 12.03.2022

Exit mobile version