TNPSC Current Affairs – Oct 26, 2022

0
47

CA 26.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1.மாணவர் மனசு பெட்டிதிட்டம்

  • கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட் நீதிபதி சில கருத்துக்களை முன் வைத்தார்.
  • அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
  • அதனை செயல்படுத்தும் விதமாகவும் சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்தது தான் இந்த ‘மாணவர் மனசு பெட்டி’.
  • அது மட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள் கல்வி பாதையில் மாணவ மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த குழு ‘மாணவர் மனசு பெட்டியில்’ விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்துப் பார்த்து அதில் மாணவ மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காண்கின்றனர்.
  • சிறிய புகாரை கூட தட்டிக் கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.

2. 1913 என்ற உதவி எண்

  • மழை நீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. காற்று மாசு நகர பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை

  • அக்டோபர் 24ஆம் தேதி காலை 8:30 மணி நிலவரப்படி உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தில்லியை பின்னுக்குக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.
  • நல்ல ஆரோக்கியமான காற்று என்றால் காற்றின் தர குறியீட்டில் 50 அளவுகோல் இருக்க வேண்டும்.
  • பொதுவாக தென் சென்னையில் இந்த அளவு 50 முதல் 60 வரை இருக்கும். ஆனால் தீபாவளி அன்று இரவு சென்னையில் காற்றின் தரம் 786 அளவு வரை பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய செய்திகள்

1. கழிவு பொருட்கள் விற்பனை மூலம் ரூபாய் 254 கோடி வருவாய்

  • மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கடந்த 2ஆம் தேதி முதல் வருகிற 31ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது.
  • இதில் முக்கியமாக, கழிவுப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. அத்துடன் கழிவு பொருட்கள் விற்பனை மூலம் ரூபாய் 254.21 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.
  • மேலும் 588 விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதைப்போல 3,20,152 மக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
  • இந்த தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2. ஓய்வூதிய நிதி ஆணைய உறுப்பினர் நியமனம்

  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணைய (பிஎஃப்ஆர்டிஏ) உறுப்பினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை கூடுதல் செயலர் நாராயண ராவ் பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 23ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஎஃப்ஆர்டிஏவை மத்திய அரசு நிறுவியது. ஓய்வூதிய நிதியை உருவாக்குதல் நிதியை மேம்படுத்துதல், ஒழுங்காற்றுதல் மூலம் முதியோருக்கான வருவாய் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்த ஆணையம் நிறுவப்பட்டது.
  • இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் ஆறு பேருக்கும் மிகாமல் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உறுப்பினர்களில் மூவர் முழுநேர உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
  • இந்நிலையில் அந்த ஆணையத்தின் முழு நேர சட்ட உறுப்பினராக நாராயண ராவ் பட்டுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • அவர் 62 வயதை எட்டும் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஆணைய உறுப்பினராக இருப்பார்.

3. எதிர்ப்பின்றி பிரிட்டன் பிரதமர் ஆனார்

  • பிரிட்டனின் பிரதமராகியுள்ளதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.
  • அந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்பதுடன் வெள்ளை இனத்தைச் சேராத முதல் பிரதமர், முதல் இந்து பிரதமர் என்ற பெருமைகளையும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
  • அதுமட்டுமின்றி பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் பிரதமராக பொறுப்பேற்பவர் என்ற சாதனையையும் ரிஷி சுனக் பதிவு செய்துள்ளார்.
  • கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய ஆதரவு இல்லாத போரிஸ் ஜான்சன் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார்.
  • போட்டியில் எஞ்சி இருந்த பென்னி மார்டன்டுக்கும் 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்ற நிலையில் போட்டியாளர் இல்லாததால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அதன் தொடர்ச்சியாக பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக்கை மன்னர் சார்லஸ் நியமித்தார். பிரதமராக தேர்வானதை தொடர்ந்து புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
  • இதில் எதிர்பார்த்த படியே ஜெரிமி ஹண்ட் நிதி அமைச்சராக தொடர்வார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூவெல்லா பிரேவர்மன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

CA 26.10.2022(English Version)

State news

1. ‘Student Mind Box’ Scheme

  • In 2019, the Mahila Court judge gave a verdict in a case of sexual harassment of a girl child.
  • He said that there should be a complaint box in schools for students to report their complaints regarding sexual offences.
  • This ‘Student Mind Box’ was brought by the School Education Department as a way of implementing it and to prevent sexual harassment of schoolgirls recently.
  • Not only that, but it was established to meet the needs of the students in the minds of the students in the educational path.
  • This committee looks into the complaints falling in the ‘Student Mind Box’ once every 15 days or once in a week and resolves the grievances expressed by the students at the school level immediately.
  • They fix everything without ignoring even the smallest complaint.

2. 1913 in Aid No

  • It has been informed that the public can report on the helpline number 1913 of the Metropolitan Chennai Corporation about the places where there are no barriers in the areas where works are being carried out on roads and streets on behalf of rain water drainage and other service departments.

3. Chennai topped the list of air pollution cities

  • As of 8:30 AM on October 24th, Chennai has overtaken Delhi as the top most air polluted city in the world.
  • Good healthy air should have a score of 50 on the Air Quality Index.
  • Generally in South Chennai this amount is between 50 and 60. But on Diwali night, the air quality in Chennai was recorded as high as 786, according to the Pollution Control Board.

Central News

1. Revenue of Rs 254 crore from sale of waste products

  • The second phase of cleanliness drive is being conducted in all departments of the central government from 2nd to 31st.
  • Mainly in this, sale of waste products is going on. Also, through the sale of waste products, a revenue of Rs 254.21 crore has been received.
  • 588 more norms have been simplified. Similarly, the grievances of 3,20,152 people have been redressed.
  • This information was disclosed by the Union Minister of Personnel Welfare Jitendra Singh to the press.

2. Appointment of Pension Fund Commission Member

  • Additional Secretary, Department of Law and Justice, Narayana Rao Pattu has been appointed as a member of the Pension Fund Regulatory and Development Authority (PFRDA).
  • The central government established PFRDA in August 23 last year. The commission was established to ensure income security for the elderly by developing and regulating the pension fund.
  • This commission should have a chairman and not more than six members. Three of the members shall be full-time members.
  • In this case, the central government has appointed Narayana Rao Pattu as a full-time legal member of the commission.
  • He shall remain a member of the Commission till he attains the age of 62 years or until further orders.

3. Became Prime Minister of Britain unopposed

  • Indian-origin former finance minister Rishi Sunak has created many historical achievements by becoming the Prime Minister of Britain.
  • Rishi Sunak holds the distinction of being the first Indian-origin Prime Minister of that country, the first non-white Prime Minister and the first Hindu Prime Minister.
  • Apart from that, Rishi Sunak also holds the record of becoming the youngest Prime Minister in British history after 210 years.
  • Boris Johnson has announced that he will not be contesting the party election, which lacks the support of at least 100 MPs.
  • Rishi Sunak was elected unopposed as leader of the Conservative Party due to the absence of a challenger as Benny Morton, who remained in the race, did not get the support of 100 MPs.
  • Subsequently, King Charles appointed Rishi Sunak as the new Prime Minister of Britain.He announced a new cabinet after being elected as Prime Minister.
  • As expected, Jeremy Hunt will continue as Finance Minister.Suvella Braverman of Indian origin was appointed as Home Minister.