TNPSC Current Affairs – Oct 01, 2022

0
41

CA 01.10.2022(Tamil Version)

மாநில அரசு

1. சீனாவுக்கு இணையாக தமிழகத்தில் கைபேசி உற்பத்தி

  • செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டியில் ரூபாய் 1200 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆலையை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:
  • தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் நிறுவனம் தமிழகத்தில் கைபேசி உற்பத்தியை தொடங்குவதை வரவேற்கிறேன்.
  • உலகப் புகழ் பெற்ற நிறுவனம் இங்கு உற்பத்தியை தொடங்கி இருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.
  • அகில இந்திய அளவில் வணிகம் புரிதலை எளிதாக்கும் தரவரிசையில் சாதனையாளர் மாநிலம் என்று அங்கீகாரம் பெற்ற முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
  • நான்காம் தொழில் புரட்சியின் மின்னணுவியல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மின்னணுவியல் துறையை தமிழக அரசு வளர்ந்து வரும் துறையாக வகைப்படுத்தியுள்ளது.
  • இதை கருத்தில் கொண்டு தமிழகம் மின்னணு மென்பொருள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. 

2. ரத்தக்கொடையாளர்கள் விவரம் பதிவிட தனிச் செயலி

  • ரத்தக்கொடையாளர்களின் விவரங்களை பதிவிட ரூபாய் 10 லட்சத்தில் தனி கைப்பேசி செயலியும் கணினி மயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் ஒற்றுமையுடன் ரத்ததானம் செய்வோம்.
  • ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம் என்பதாகும்.
  • 20 நிமிடங்கள் போதும்:
  • ரத்த தானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.
  • இதற்கு 20 நிமிடங்களே ஆகும்.
  • இந்த தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்தக்கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க e-RaktKosh என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது.
  • இந்த தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்தக்கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய செய்திகள்

1. 5ஜி சேவை இன்று தொடக்கம்

  • டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் ஆறாவது இந்திய கைபேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.
  • அப்போது தொலைத்தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் பயிற்சி சேவையையும் அறிமுகப்படுத்துகிறார்.
  • இதற்கான அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • ஏர்டெல் ஐடியாவோடோ, ஜியோ போன்ற நிறுவனங்களோடு, அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.
  • 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.
  • பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

2. சிறந்த தூய்மை நகரம்

  • மத்திய வீட்டு வசதி நகரப்புற வசதி அமைச்சகத்தின் சார்பில் 50,000க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சிக்கு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
  • குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகர்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னேற்ற இந்த நிகழ்வு நடைபெற்றது.
  • இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
  • பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
  • சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌசல் கிஷோர் வழங்கினார்.

3. நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை

  • குஜராத் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
  • நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
  • முக்கியமாக வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஜிசிஎஃப்இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • நாட்டின் ஏற்கனவே புதுத் தில்லிவாரணாசி, புதுடில்லி ஸ்ரீமாதமா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இருவழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
  • நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
  • 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் ஆனது மணிக்கு 160 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாகும்.
  • அகமதாபாத் நகரின் தட்லெஜ் முதல் வஸ்தால் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
  • இதன் மூலமாக 21 கிலோமீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

4. வங்கி வட்டி விகிதங்களை 0.5% உயர்த்தியது

  • ஆர்பிஐ நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ள நிலையில் அதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட் இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது.
  • அதன் காரணமாக வீட்டுக் கடன், வாகனக்கடன், மாதாந்திர தவணை தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்த உள்ளன.
  • தற்போது 5.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
  • பணவீக்கம்:
  • பணவீக்கமானது நடப்பு 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பியை கணித்துள்ளது.
  • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் ஆர்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்புநிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ முன்பு கணித்திருந்த நிலையில் அந்த கணிப்பை ஏழு சதவீதம் என தற்போது குறைத்துள்ளது.

5. இந்தியாவில் 2023 மோட்டோ ஜிபி பந்தயம்

  • உலக அளவில் பிரதான மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸ் இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அந்த ஆண்டு செப்டம்பர் 22-24 காலகட்டத்தில் அதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் சர்வதேச அளவிலான மோட்டார் பந்தயம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்புகிறது.
  • கடைசியாக உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதியில் இருக்கும் புத் சர்வதேச சர்க்யூட்டில் 2011-2013 காலகட்டத்தில் எஃப் 1 கார் பந்தயம் நடைபெற்றது நிறைவு கூறத்தக்கது.
  • தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31 வது களமாக இணைகிறது.
  • மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும். அடுத்த காலண்டரில், இந்தியாவில் 2023 செப்டம்பரில் 14வது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.
  • முன்னதாக, மோட்டோ ஜிபி பந்தயத்தை இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. சர்வதேச புத்தாக்க குறியீடு

  • நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் புத்தாக்கம் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.
  • புத்தாக்கத்தில் நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதற்கான ஆய்வை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (டபுள்யுஐபிஓ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
  • நடப்பாண்டுக்கான ஆய்வின் அடிப்படையில் சர்வதேச புத்தாக்க குறியீட்டை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி முன்னேற்றம் கண்டுள்ளது.
  • தற்போது 40ஆவது இடத்தில் உள்ள இந்தியா இந்த குறியீட்டில் தலைசிறந்த 40 நாடுகள் பட்டியலுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். 
  • அதுவும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டில் சர்வதேச புத்தாக்க குறியீட்டில் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது.
  • பிராந்திய அடிப்படையில் முதல் மூன்று நாடுகள்
  • தென் அமெரிக்கா
  • சிலி
  • பிரேசில்
  • மெக்சிகோ
  • ஆப்பிரிக்கா
  • தென்னாப்பிரிக்கா
  • போட்ஸ்சைனா
  • கென்யா
  • மேற்கு ஆசியா
  • இஸ்ரேல்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • துருக்கி
  • தென்கிழக்கு ஆசியா
  • தென்கொரியா
  • சிங்கப்பூர்
  • சீனா
  • வட அமெரிக்கா
  • அமெரிக்கா
  • கனடா
  • ஐரோப்பா
  • சுவிட்சர்லாந்து
  • ஸ்வீடன்
  • பிரிட்டன்
  • மத்திய தெற்கு ஆசியா
  • இந்தியா
  • ஈரான்
  • உஸ்பெகிஸ்தான்
  • வருமானம் அடிப்படையில் முதல் மூன்று நாடுகள் அதிக வருமானம்
  • சுவிட்சர்லாந்து
  • அமெரிக்கா
  • ஸ்வீடன்
  • அதிக நடுத்தர வருமானம்
  • சீனா
  • பல்கேரியா
  • பயேரியா
  • குறைந்த நடுத்தர வருமானம்
  • இந்தியா
  • வியட்நாம்
  • ஈரான்
  • குறைந்த வருமானம்
  • குவாண்டா
  • மடகாஸ்கர்
  • எத்தியோப்பியா

7. 68வது தேசிய திரைப்பட விருதுகள்

  • 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
  • அப்போது 2020-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை ஆஷா பரேக்குக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
  • நடிகர்,நடிகைகளுக்கு விருது:
  • 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகர்,நடிகைகளுக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார்.
  • சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று திரைப்படத்துக்காக நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.
  • தானாஜி:தி அன்சங் வாரியர் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை அஜய் தேவ்கன் பெற்றுக்கொண்டார்.
  • சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் திரைப்படத்துக்கான விருதை சூரரை போற்று தயாரிப்பாளரான ஜோதிகாவும் பெற்றுக்கொண்டனர்.
  • சிறந்த திரைக்கதைக்கான விருதை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவும், இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் குமாரும் பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பழங்குடியினத்தை சேர்ந்த நஞ்சமா பெற்றுக்கொண்டார்.

CA 01.10.2022(English Version)

State Govt

1. Mobile phone production in Tamil Nadu on par with China

  • Pegatron factory has been set up at Mahendra City, Chengalpattu District with an investment of Rs.1200 crores.
  • CM Stalin inaugurated this plant and said:
  • I welcome one of the largest companies in Taiwan, Pegatron, to start manufacturing mobile phones in Tamil Nadu.
  • It is the pride of Tamil Nadu that a world famous company has started production here.
  • Tamil Nadu is one of the top three states to be recognized as a state achiever in ease of doing business rankings across India.
  • Electronics sector plays a very important role in the fourth industrial revolution.
  • Government of Tamil Nadu has classified the electronics sector as a growing sector.
  • Taking this into consideration Tamil Nadu Electronic Software Policy is going to be released.

2. A separate app to post details of blood donors

  • Chief Minister M.K.Stalin announced that a separate mobile application and computerized register will be developed at a cost of Rs 10 lakh to record the details of blood donors.
  • Every year 1st October is observed as National Voluntary Blood Donation Day.
  • The theme of this year’s National Voluntary Blood Donation Day is Let’s donate blood in unity.
  • It means saving lives with a concerted effort.
  • 20 minutes is enough:
  • Only 350 ml of blood is taken during blood donation.
  • It takes only 20 minutes.
  • You can register blood donation camp and blood donors on this site.
  • Facilities have been made to know the presence of blood types.
  • A website called e-RaktKosh is operational to monitor the activities of Blood Centres.
  • You can register blood donation camp and blood donors on this site.
  • Facilities have been made to know the presence of blood types.

Central News

1. 5G service starts today

  • Prime Minister Modi will inaugurate the 6th India Mobile Conference at Pragati Maidan, Delhi.
  • Then he also introduces training service which is a turning point in telecommunication.
  • Government has got revenue of Rs 1.50 lakh crore through airwave auction for this.
  • Along with companies like Airtel Idea-Vodo, Jio, Adani’s company has bid for 5G spectrum in around 26 GHz band.
  • 5G service will be introduced first in major cities of the country.
  • It will then be gradually expanded over the next few years.

2. Great Cleanliness City

  • Rameswaram Municipality was awarded as cleanest city among cities with population less than 50,000 by Union Ministry of Housing and Urban Development at a function held in Delhi.
  • The event was held to promote the first anniversary of the Clean India Urban Movement 2.0 Edition launched by the Prime Minister with the aim of creating garbage-free cities.
  • In this clean small and big cities were selected.
  • President Draupadi Murmu felicitated the awards for major cities.
  • Union Minister of State for Housing and Urban Affairs Kausal Kishore presented 70 cleanliness awards for small towns.

3. The third Vande Bharat train service in the country

  • Prime Minister Narendra Modi inaugurated the country’s third Vande Bharat train service between Gujarat capital Gandhinagar and Maharashtra capital Mumbai.
  • Vande Bharat train with modern facilities is manufactured domestically in India.
  • Mainly coaches of Vande Bharat train are manufactured at GCF in Chennai.
  •  Vande Bharat trains are already running in the country on two routes New Delhi-Varanasi and New Delhi Srimadama Vaishnava Devi Gatra.
  • Central government has announced that 75 Vande Bharat trains will be run by August next year to celebrate the country’s 75 years of independence.
  • In this context, Prime Minister Modi inaugurated the third Vande Bharat train service.
  • The 16-coach Vande Bharat train has a speed of 160 km per hour.
  • Prime Minister Modi inaugurated the first phase of metro rail service from Tatlej to Vasthal in Ahmedabad city.
  • Through this metro rail service for a distance of 21 km has been started.

4. Bank hiked interest rates by 0.5%

  • Repo Rate The Reserve Bank of India (RBI) has raised the interest rate on short-term loans to banks by 0.5 percent to bring inflation under control in the country.
  • Because of that, banks are going to increase the interest for home loan, car loan, monthly installment amount etc.
  • Presently fixed at 5.90 percent.
  • This is highest in last three years.
  • Inflation:
  • RBI has projected inflation to be 6.7 percent in the current fiscal year 2022-2023.
  • RBI also expressed confidence that inflation will come under control from January next year.
  • The RBI had earlier projected the country’s Gross Domestic Product (GDP) to grow at 7.2 percent in the current fiscal, but has now lowered that forecast to 7 percent.

5. 2023 MotoGP race in India

  • World’s premier motorcycle race MotoGP Race is confirmed to be held in India for the first time next year.
  • It is scheduled to be held during September 22-24 that year.
  • This brings international level motor racing back to India after nine years.
  • The last F1 car race was held at Budh International Circuit in Noida, Uttar Pradesh during 2011-2013.
  • India now joins the 31st country in the list of hosts of the MotoGP race.
  • A total of 21 races will be held. In the next calendar, India is slated to host the 14th round in September 2023.
  • Earlier, an MoU has been signed to host the Moto GP race in India for 7 years.

6. International Code of Innovation

  • Innovation is gaining importance as modern technologies continue to evolve.
  • The World Intellectual Property Organization (WIPO) conducts an annual survey of how countries are performing in innovation.
  • Based on the survey for the current year, the organization has published the International Innovation Index.
  • India has improved by 6 places compared to last year.
  • This is the first time that India, currently ranked 40th, has made it to the top 40 list of the index.
  • Especially since India was ranked 81st in the International Innovation Index in 2015.
  • Top three countries by region
  • South America
  • Chile
  • Brazil
  • Mexico
  • Africa
  • South Africa
  • Potchina
  • Kenya
  • West Asia
  • Israel
  • United Arab Emirates
  • Turkey
  • Southeast Asia
  • South Korea
  • Singapore
  • China
  • North America
  • America
  • Canada
  • Europe
  • Switzerland
  • Sweden
  • Britain
  • Central South Asia
  • India
  • Iran
  • Uzbekistan
  • In terms of income, the top three countries are the highest income
  • Switzerland
  • America
  • Sweden
  • Higher middle income
  • China
  • Bulgaria
  • Pyeria
  • Lower middle income
  • India
  • Vietnam
  • Iran
  • Low income
  • Quanta
  • Madagascar
  • Ethiopia

7. 68th National Film Awards

  • The 68th National Film Awards ceremony was held at Vigyan Bhavan in Delhi.
  • Then President Draupadi Murmu presented the ‘Dada Saheb Phalke’ award for the year 2020 to Asha Parekh.
  • Awards for Actors and Actresses:
  • The President also presented the awards to the actors and actresses who were announced for the year 2020 National Award.
  • Actor Surya won the best actor award for the film Potot Surar.
  • Ajay Devgan bagged the Best Actor Award for ‘Thanaji: The Unsung Warrior’.
  • Aparna Balamurali won the best actress award and producer Jyothika won the film award in honor of Surari Potru.
  • Director Sudha Kongara won the best screenplay award for Surarai Pottru and GV Prakash Kumar won the music director award.
  • Best playback singer award went to Nanjama from Tribal.