TNPSC Current Affairs – June 26, 2022

0
25

C.A.26.06.2022 (Tamil Version)

 

  1. அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நிய செலவாணி மதிப்பு தொடர்ந்து குறைத்து வருகிறது. இந்நிலையில் டீ குடிப்பதற்கு பதிலாக ‘லஸ்ஸி’ மற்றும் ‘சட்டு சர்பத்’ குடியுங்கள் என்று அந்நாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 

  1. தமிழ்நாடு என்று பெயர் சூட்ட காரணமாய் இருந்த “சிலம்பு செல்வர்”ம.பொ.சி.யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவருக்கு மரியாதையை செலுத்தப்பட்டது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்று முழக்கமிட்ட ம.பொ.சி. தீவிர எல்லை போராட்டம் நடத்தி திருத்தணி ஆந்திர மாநிலத்தோடு இணைவதை தடுத்தார். இவர் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்ற நூலுக்கு 1966-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

 

  1. இங்கிலாந்தில் வசிக்கும் குஷி படேல் இந்த ஆண்டுக்கான வெளிநாட்டு வாழ் இந்திய அழகிக்கான பட்டத்தை வென்றுள்ளார்.

 

  1. ஜெர்மெனி நாட்டில், ஸ்குவாஷ் எல்மோவ் என்ற இடத்தில் கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஜி 7’ உச்சி மாநாடு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடியை, ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

  1. புதுச்சரி ஜிப்மர் வளாகத்தில்60 கோடியில் பொது சுகாதார சர்வதேச மையம் அமைக்கப்பட்டது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

 

  1. ஆக்சிஸ் வங்கியின் துணை நிர்வாக இயக்குனரின் மறுநியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

 

  1. வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே சுமார் 2,700 கோடியில் கட்டப்பட்ட15 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்.

 

  1. ஹங்கேரியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கியின் தங்க வேட்டை தொடர்கிறது. இப்போட்டியில் மகளிருக்கான 800 மீட்டர் பிரிவில் லெடக்கி 8 நிமிடம்04 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

 

  1. பிரான்சில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை 3-ம் நிலை போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா/ஜோதி இணை தங்கப்பதக்கம் வென்றது.

 

  1. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களது கல்வி, வேலை செய்யும் நேரம், குறைந்தபட்ச வயது உள்ளிட்டவை குறித்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து, 27 நாட்களுக்கு மேல் பணியாற்றக் கூடாது. அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.பள்ளியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வந்தாலும், அவர்களுக்கு தேவையான கல்வி கிடைப்பதை, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தத் துறையில் ஈடுபடும் குழந்தைகளுக்கான வருவாயில், 20 சதவீதத்தை நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற்றே, குழந்தைகளைப் பயன்படுத்த வேண்டும். புகைப்பிடிப்பது உள்ளிட்ட சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் வகையில், இந்தக் குழந்தைகளுக்கு காட்சிகள் அமைக்கக் கூடாது. அவர்களுடைய வயது மற்றும் மனமுதிர்ச்சிக்கு ஏற்ற காட்சிகளில் பயன்படுத்தலாம். உடல் மற்றும் மன ரீதியில் பாதிப்பு ஏற்படும் காட்சியில் பயன்படுத்தக் கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை, தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், மூன்று வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய்15 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

 

  1. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – 25, ஜூன் 2022

 

 

C.A.26.06.2022 (English Version)

 

  1. The value of foreign exchange continues to fall due to the severe economic crisis in neighboring Pakistan. In this case, the Commission has advised to drink ‘Lassi’ and ‘Chattu Sarpad’ instead of tea.

 

  1. On behalf of the Government of Tamil Nadu, he was honored on the occasion of the birthday of “Silambu Selvar” M.P.C. “We will give our heads and save the capital,” shouted the BJP. He led an intense border struggle and prevented the Rev. from joining Andhra Pradesh. His book “Vallalar Kanda Orumaipadu” won the Sahitya Akademi Award in 1966.

 

  1. Kushi Patel, who lives in the UK, has won this year’s Overseas Living Indian Beauty title.

 

  1. The G7 summit, co-created by Canada, France, Germany, Italy, Japan, the United Kingdom and the United States, is being held in Squash Elmov, Germany. German Chancellor Olaf Scholes has invited Prime Minister Narendra Modi to attend.

 

  1. The 66.60 crore Public Health International Center was set up at the Puducherry Zimmer campus. It was started by Union Health Minister Mansouk Mandavia.

 

  1. The Reserve Bank of India has approved the reappointment of the Deputy Managing Director of Axis Bank.

 

  1. Prime Minister Sheikh Hasina has inaugurated the 6.15 km long bridge across the Padma River in Bangladesh at a cost of about Rs 2,700 crore.

 

  1. Katie Ledecky’s gold medal haul continues at the World Swimming Championships in Hungary. In the women’s 800 meters, Ledaki won the gold medal in 8 minutes 8.04 seconds.

 

  1. India’s Abhishek Verma / Jothi won the gold medal in the 3rd round of the World Cup Archery in France.

 

  1. In order to protect the rights of children, the National Commission for the Protection of the Rights of the Child has issued draft guidelines on their education, working hours and minimum age. According to the new protocol, child stars should not work continuously for more than 27 days. They should be given adequate rest. Producers and directors should ensure that they get the education they need, even if they have special permission from the school. 20 per cent of the income of children engaged in this sector should be invested in fixed deposits. Children must be used with prior permission from the District Collector in the area where the shooting will take place. Scenes should not be set for these children to engage in anti-social activities, including smoking. Can be used in scenes suitable for their age and maturity. Not to be used on the scene causing physical and mental harm. Manufacturing companies must ensure that these guidelines are properly followed. In addition, producers must obtain permission from the district attorney to cast children under the age of three. ”

 

  1. Magazines have been published on behalf of the Department of Education to promote the reading ability of students. 7.15 crore has been set aside for this.

 

  1. International Day for the Elimination of Drug Abuse – 25, June 2022

Click here to download PDF :CA 26.06.2022