TNPSC Current Affairs – Aug 02, 2022

0
44

CA 02.07.2022(Tamil Version) 

முக்கிய தினங்கள் 

1. ஆகஸ்ட் 2  

 • இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. 

மாநில செய்திகள் 

1. சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் 

 • சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. 

மத்திய செய்திகள் 

1. வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம் 

 • இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  
 • ஜூலை மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1.49 லட்சம் கோடி தமிழகத்தில் ரூபாய் 8,449 கோடி வசூல். 
 • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை தொட்டது. 
 • ஏப்ரல் மாதம் ₹ 1,67,540 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆனது.  
 • இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ₹ 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆனது. 
 • இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வசூல் ஆன இரண்டாவது அதிகபட்ச வருவாயாகும். 
 • தமிழகத்தில் 34% அதிகரிப்பு: 
 • கடந்த ஜூலை மாதம் அதிக ஜிஎஸ்டி வசூலான மாநிலங்களில் மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத்தை தொடர்ந்து தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 

2. குரங்கு அம்மை பரவல்: உயர்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு 

 • நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவல் சூழலை கண்காணிக்கவும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 
 • நீதி ஆயோக் (சுகாதார) உறுப்பினர் வி.கே.பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

3. 5G அலைக்கற்றை 

 • ஒரு வார காலமாக நடைபெற்ற ஐந்தாம் தலைமுறை 5 ஜி அலைக்கற்றை ஏலம் திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது. அலைக்கற்றையானது ₹1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • ஏலத்தில் ரூபாய் 88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை எடுத்து ஜியோ முதலிடம் பெற்றுள்ளது. 
 • 5G அலை கற்றை ஏல விவரங்கள் 
நிறுவனம் அலைக்கற்றை அளவு ஏலத்தொகை 
ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகா ஹெர்ட்ஸ் ரூபாய் 88,078 கோடி 
பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் ரூபாய் 43,084 கோடி 
வோடஃபோன் ஐடியா 2,668 மெகா ஹெர்ட்ஸ் ரூபாய் 18,784 கோடி 
அதானி நிறுவனம் 400 மெகா ஹெர்ட்ஸ் ரூபாய் 212 கோடி 

4. பாதுகாப்புத்துறை ஏற்றுமதி ரூபாய் 12,815 கோடியாக உயர்வு 

 • பாதுகாப்புத்துறை தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களில் தன்னிறைவு பெற்று வரும் நிலையில் நாடு கடந்த 2021-22 நிதியாண்டில் ரூபாய் 13,000 கோடி அளவுக்கு பாதுகாப்பு தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். 
 • 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.  
 • மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்போடு இணைந்துள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதுயுக தொழில் முனைவோர், மேக் இன் இந்தியா தயாரிப்பு போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 
 • இந்தியா சுமார் 61 நாடுகளுக்கு பாதுகாப்புத்துறை தொடர்பான பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. 
 • இதில் ஸ்கோ மேட் என்கிற பட்டியலில் உள்ள சிறப்பு ரசாயனங்கள், உயிரினங்கள், பொருள்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் என ஆறு வகை பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

விளையாட்டு செய்தி 

1. பளுதூக்குதலில் இந்தியாவுக்கு தங்கம்  

 • காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ஆடுவருக்கான 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி தங்கப்பதக்கம் வென்றார். 
 • அவருக்கு இது முதல் காமன்வெல்த் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காமன்வெல் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது தங்கம் ஆகும். 

CA 02.08.2022(English Version) 

Important days 

1. August 2 

 • The birth anniversary of Bingali Venkaiah who designed the Indian National Flag is to be celebrated. 

State news 

1. Second airport near Chennai 

 • Kanchipuram to set up a second airport near Chennai the Tamil Nadu government has selected district Parathur. 

Central News 

1. Indian economy in strong position 

 • Union Finance Minister Nirmala Sitharaman announced that the Indian economy is in a strong state. 
 • GST revenue in July was Rs 1.49 lakh crore and Tamil Nadu collected Rs 8,449 crore. 
 • GST collection hit a new high in April this year. 
 • GST collection was ₹ 1,67,540 crore this month. 
 • In this case, last July, ₹ 1,48,995 crore GST was collected. 
 • This is the second highest revenue collected since the introduction of GST. 
 • 34% increase in Tamil Nadu: 
 • Tamil Nadu ranks 4th among the states with highest GST collection last July after Maharashtra, Karnataka and Gujarat. 

2. Monkey Measles Outbreak: High Level Committee constituted by Central Govt 

 • The central government has set up a special high-level committee to monitor the spread of monkey measles in the country and take measures to prevent it. 
 • Niti Aayog (Health) member VK Paul has been appointed as the Chairman. 

3. 5G spectrum 

 • The week-long fifth generation 5G spectrum auction concluded on Monday. According to the central government, the spectrum was auctioned for 1,50,173 crore. 
 • Jio tops the auction by bagging spectrum worth Rs 88,078 crore 
 • 5G spectrum auction details 
Company Wavelength Bid amount 
Reliance Jio 24,740 MHz Rs 88,078 crore 
Bharti Airtel 19,867 MHz Rs 43,084 crore 
Vodafone Idea 2,668 MHz Rs 18,784 crore 
Adani Company 400 MHz Rs 212 Crore 

4. Defense exports increase to Rs 12,815 crore 

 • Union Minister of State for Defense Ajay Bhatt said in the Rajya Sabha on Monday that the country has exported defense-related items to the tune of Rs 13,000 crore in the last financial year 2021-22 while the defense sector is becoming self-sufficient in logistics and weapons. 
 • 74 percent foreign direct investment is allowed. 
 • Also priority is being given to Micro, Small and Medium Enterprises, New Age Entrepreneurship, Make in India manufacturing etc. associated with Defense Research and Development Organisation. 
 • India exports defense related items to around 61 countries. 
 • In this, six types of goods are exported namely special chemicals, organisms, materials, tools and technologies in the list of ScoMet

Sports news 

1. Gold for India in Weightlifting 

 • India’s Asinda Shiuli wins gold medal in men’s 73kg category at Commonwealth Weightlifting Championships. 
 • It is noteworthy that this is his first Commonwealth Games, this is India’s third gold in commonwealth weightlifting.  

Telegram – https://t.me/gkrsInstitute