TNPSC Current Affairs – Dec 03, 2022

0
39

CA 03.12.2022 (Tamil Version)

மாநில செய்திகள்

 1. மக்களைத் தேடி மருத்துவம்

  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 29 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 99,000 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கபட்டுள்ளது.
  • இதில் 18 முதல் 29 வயது வரையிலான 18 லட்சம் பேர்களில் 9.75 லட்சம் பேருக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட 40.56 லட்சம் பேர்களில் 19.36 லட்சம் பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
  • இப்பரிசோதனை மூலம் கடந்த அக்.29-ஆம் தேதி வரை உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 81,198 பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 68,860 பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்ட 67,652 பேர் என மொத்தம் 2.17 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
  • இதில் 45 வயதிற்கு மேற்பட்ட 99,717 பேருக்கு மருந்து பெட்டகங்கள் அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளன.

 2. கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம்

  • கரிசல் காட்டு இலக்கியத்தின் பிதாமகரான கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக திறந்து வைத்தார்.
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ராஜநாராயணன்.
  • கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக கி.ராஜநாராயணன் திகழ்ந்தார்.
  • கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக்கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறு நாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக சாகித்யஅகாதெமி விருது பெற்றார்.
  • இலக்கியச் சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணீயம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட முக்கிய இலக்கிய விருதுகள் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • கி.ரா கடந்த ஆண்டு(2021) மே 17-இல் காலமானார்.

 3. முதல்வரின் முகவரி துறை

  • கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
  • அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  • பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பது ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.
  • பின்னர், பொதுமக்கள் அளித்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த துறைகள் மூலம் தீர்வு காணப்பட்டன.
  • இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் உதவி மையம், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர் மேலாண்மை அமைப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக முதல்வரின் முகவரி துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.
  • இந்த துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் செயல்பட்டு வருகிறார். இணையதளம் வாயிலாக மனுக்கள் அளித்தல். மனுக்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.
  • பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதுவரை 35,97,817 மனுக்கள் பெறப்பட்டு, 33,82,463 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4. ஆவண எழுத்தர்கள் நல நிதியம்

  • ஆவண எழுத்தர்களுக்கான நலநிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மேலும், உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளையும் அவர் அளித்தார்.
  • தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களைச் சார்ந்த தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென நல நிதியம் உருவாக்கப்படும் என கடந்த 2007-08- ஆம் நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல நிதியம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
  • இதற்கென தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, உரிமம் பெற்ற 5,188 நபர்களிடம், ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினராக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1,000 வசூலிக்கப்படும்.
  • மேலும், பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 வீதம் வசூல் செய்யப்படும்.
  • ஒருமுறை செலுத்தப்படும் சந்தா தொகை மற்றும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஒவ்வோர் ஆவணத்துக்கும் நல நிதிய பங்களிப்பு ஆகியன நிதியமாக நிர்வகிக்கப்படும். அதிலிருந்து நல நிதிய நலத்திட்டங்களுக்கான செலவுகள் ஈடு செய்யப்படும்.
  • ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் உறுப்புகள் நிரந்தர செயலிழப்புக்கு உதவித் தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்புகளுக்கு உதவித் தொகையாக ரூ.20,000 ஆகியன வழங்கப்படும்.
  • மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இறுதிச் சடங்கு நிதி, மூக்குக் கண்ணாடி உதவித் தொகை போன்ற நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும்.
  • பதிவுத்துறைத் தலைவரை தலைவராகவும், இதர பதிவுத் துறை அலுவலர்களையும்,ஆவண எழுத்தர் சங்கத்தில் இருந்து நியமனம் செய்யப்படும் நான்கு நபர்களையும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழு நல நிதியத்தை நிர்வகிக்கும்.

விளையாட்டு செய்திகள்

 1. விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்

  • விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் 2-ஆவது முறையாகக் கோப்பை வென்றுள்ளது சௌராஷ்டிரம். இதற்கு முன் 2007-08 எடிஷனில் அந்த அணி வாகை சூடியிருந்தது.

CA 03.12.2022 (English Version)

State news

  1. Makkalait teṭi maruttuvam

  • 29 lakh people above 18 years of age have been tested and 99,000 people have been given medicines in the people seeking medicine program in the area under Chennai Corporation.
  • Out of 18 lakh people between 18 to 29 years of age, 9.75 lakh people and 19.36 lakh people out of 40.56 lakh people above 30 years of age were tested.
  • Through this examination, 81,198 people suffering from high blood pressure, 68,860 people suffering from diabetes, and 67,652 people suffering from high blood pressure and diabetes were given medical advice till last October 29, a total of 2.17 lakh people.
  • Out of which 99,717 people above 45 years of age have been given medicine cabinets at their homes.

 2. Memorial to K. Rajanarayanan

  • Chief Minister M. K. Stalin inaugurated the memorial with a full-length statue of the father of Karical kaṭṭu  literature K. Rajanarayanan in the kovilpaṭṭi.
  • K. Rajanarayanan was born in itaiceval village near Kovilpatti, Tuticorin district.
  • K. Rajanarayanan was the pioneer who created Karisal local dictionary.
  • He has written innumerable short stories like Karical kataikaḷ, katavu, peṇ kataikaḷ, kiramiyakkataikal kitai, pincukaḷ kuru Novels like Gopalla Gramam, Gopallapuratu makka, Andaman Nayakkar ponra and innumerable articles. He won the Sahitya Akademi award for his novel ‘Gopallapuratu Makala’.
  • Ilakkiyac cintanai virutu, Government of Tamil Nadu Award, Manonmaniyam Sundaranar Award, tamil ilakkiyat toṭṭattiṉ of Canada Tamil Literary Achievement Award has been given to K. Rajanarayanan.
  • Ki.ra passed away on May 17 last year (2021).

  3. Mutalvarin mukavari turai

  • M.K.Stalin launched a program called unkal tokutiyil stalin before the last assembly elections.
  • He toured all the constituencies and received petitions from the public. He also announced that the petitions will be resolved within 100 days after the DMK comes to power.
  • Later when the DMK came to power, ‘unkal tokutiyil stalin’ was renamed as ‘unkaḷ tokutiyil mutalvar’ and Shilpa Prabhakar Satish was appointed as the special officer.
  • Later, more than 5 lakh petitions filed by the public were divided department wise and resolved through the respective departments.
  • In this case, Mutalvarin mukavari turai was formed in November last year, integrating all the Chief Minister, Chief Minister’s Help Desk, Chief Minister’s Division and Integrated Grievance Management System into a single department.
  • Shilpa Prabhakar Satish is working as a special officer of this department. Submission of petitions through website. Various facilities were made to know about the status of petitions.
  • Petitions are being received from the public. As of now, 35,97,817 petitions have been received and action has been taken on 33,82,463 petitions.

   4. Document Clerks Welfare Fund

  • Chief Minister M. K. Stalin started welfare fund for document clerks. He also issued identity cards to the members.
  • An announcement was made in the last fiscal year 2007-08 that a welfare fund will be created for the welfare of document clerks who are involved in the profession of deed registration offices in Tamil Nadu.
  • Despite the promulgation of the Ordinance, the welfare fund remained non-functional for more than 10 years.
  • A separate law was brought and passed for this purpose. As per the Act, 5,188 licensed persons will be charged a one-time subscription of Rs.1,000 to become voluntary members of the Clerks’ Welfare Fund.
  • Also, a fee of Rs.10 each will be charged for each document registered in the Registry.
  • One time subscription amount and welfare fund contribution for each document submitted for registration will be managed as fund. Out of which the expenses of Welfare Fund welfare schemes will be covered.
  • Members of the Welfare Fund of Document Clerks will be given a grant of Rs.1 lakh in case of accidental death and permanent organ failure and Rs.20,000 in case of natural death and organ damage.
  • Welfare scheme assistance like monthly pension, marriage allowance, maternity allowance, education allowance, funeral fund, nose glasses allowance etc. will be provided.
  • A committee consisting of Registrar as Chairman, other Registrar officers and four persons appointed from the Union of Document Clerks will manage the welfare fund.

Sports News

  1. Vijay Hazare Trophy Cricket

  • Saurashtra defeated Maharashtra by 5 wickets in the final match of the Vijay Hazare Cup cricket tournament to become champions. Saurashtra has won the trophy for the 2nd time in this competition. The team had previously contested the 2007-08 edition.