TNPSC Current Affairs – Aug 21, 2022

0
40

CA 21.08.2022(Tamil Version)

 
மாநில செய்திகள் 

1. பொலிவுறு நகரம் திட்டம் முறைகேடு புகார்: விசாரணை அறிக்கை  தாக்கல்  

  • கடந்த திமுக ஆட்சியில் பொலிவுறு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபள்யு.சி.டேவிதார் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் தாக்கல் செய்தார்.  
  • கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது.  
  • இதன் அடிப்படையில் நாடு முழுவதும் நூறு நகரங்களை தேர்வு செய்து பொலிவுறு நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது.  
  • முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.  
  • அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  

2. காசநோய் இல்லா தமிழகம் 2025  

  • தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  
  • சென்னையில் நடைபெற்ற தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65 ஆவது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.  

மத்திய செய்திகள் 

1. உலக வர்த்தக சந்தையில் இரண்டாவது இடம் வாழை ஏற்றுமதி  

  • உலக சந்தையில் பழங்களுக்கான வர்த்தகத்தில் வாழை இரண்டாவது இடம் பிடித்திருப்பதால் வாழை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர மாநில சிறப்பு தலைமைச் செயலர் பூனம் மனக்கொண்டையா தெரிவித்தார். 
  • திருச்சி மாவட்டம் தாயனூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏ.ஆர்) தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.  
  • இந்த மையத்தின் 29 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா நடைபெற்றது.  

விளையாட்டு செய்திகள் 

1. யூ20  உலக மல்யுத்தம்: அன்டிம் பங்கால் அசத்தல் சாதனை  

  • பல்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் தங்கப்பதக்கம் வென்றார்.  
  • இதன்மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.  
  • இந்தியா இரண்டாம் இடம்:   
  • இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1 தங்கம் 3 வெள்ளி 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு இரண்டாம் இடம் பிடித்தது.  

2. சர்வதேச பாரா பாட்மிண்டன் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்  

  • தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மண்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றது.  

CA 21.08.2022(English Version)

State news 

1. Polivuru City Project Irregularity Complaint: Filing of Investigation Report 

  • Retired IAS officer PWCC Davidar, who investigated the complaints regarding the implementation of city projects in Bolivuru during the previous DMK regime, submitted his report to Chief Minister M.K.Stalin. 
  • In the year 2015, Polivuru City Project (Smart City) was introduced on behalf of the Central Government. 
  • Based on this, it was planned to select one hundred cities across the country and convert them into Polivuru cities. 
  • In the first phase, 11 cities were selected in Tamil Nadu. 
  • A government order was also issued to that effect. 

2. Tuberculosis free Tamil Nadu 2025 

  • Minister of People’s Welfare M. Subramanian said that measures are to be taken to eliminate tuberculosis in Tamil Nadu by 2025
  • At the 65th anniversary function of the National Tuberculosis Research Institute held in Chennai, Minister M. Subramanian released an awareness CD on TB prevention measures. 

Central News 

1. Second place in world trade market is banana export 

  • Special Chief Secretary of Andhra Pradesh Poonam Manakondaiah said that since banana is the second most traded fruit in the world market, the export of banana should be increased. 
  • National Banana Research Center of Indian Council of Agricultural Research (ICAR) is located at Dayanur, Trichy District. 
  • The 29th year organization day function and farmers day function of the center was held. 

Sports news 

1. U-20 World Wrestling: Amazing feat by Antim Bangal 

  • India’s Antim Pankal won the gold medal at the Under-20 World Wrestling Championship in Bulgaria. 
  • This made her the first Indian athlete to win gold in the event. 
  • India Runners Up: 
  • The Indian team finished second with 160 points with 7 medals including 1 gold, 3 silver and 3 bronze. 

2. 17 medals for India in International Para Badminton 

  • India won 17 medals including 4 gold, 5 silver and 8 bronze in the International Para Badminton Tournament held in Thailand.