நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் (Current Affairs 16.10.2021)

0
63

நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

அக்டோபர் 16- 2021

1.தற்போது டெல்லியில் இந்திய விண்வெளி சங்கத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்தவர் யார்? – நரேந்திர மோடி

2. தற்போது ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக பதவியேற்றவர் யார்? – அலெக்சாண்டர் ஷாலென்பெர்க்

3. நடப்பு நிதியாண்டின் 2 ஆவது காலாண்டில் பயணிகள் ரயில் வருவாய் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது? – 113 சதவீதம்

4. தற்போது 2021-22 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை நிவாரண தொகையின் 7 ஆவது மாதாந்திர தவணையாக ———- கோடி செலவினத் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது. – ரூ.9,871 கோடி

5.தேசிய குத்துச்சண்டை சம்மேளனத்தினால் தேசிய ஆடவர் அணிக்கான குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார்? – சுரஞ்ஜோய் சிங், தேவேந்திர சிங்

6. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் பிரசார் பாரதி கலையரங்கத்தை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ——— என்பவர் திறந்து வைத்தார். – எல்.முருகன்

7. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? – அக்டோபர் 11

8. தற்போது ———- நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதற்காக 200 மில்லியன் டாலர் கடன் உதவி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. – கிர்கிஸ்தான்

9. ——— நாட்டின் அணு ஆயுதத் தந்தை என்றழைக்கப்படும் விஞ்ஞானி ஏக்யூகான் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். – பாகிஸ்தான்

10. நிகழாண்டு (2021) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெரும் மூன்று பொருளாதார வல்லுநர்கள் யார்? – டேவிட் கார்ட், ஜோஷுவா D. ஆங்கிரிஸ்ட், குயிடோ W. இம்பென்ஸ்

11. 2021-22 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) விகிதத்தை எத்தனை சதவீதமாக ICRA அமைப்பு திருத்தியுள்ளது? – 9 சதவீதம்

12.எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை 54 லட்சத்து 50 ஆயிரமாக சரிந்துள்ளது? – 51 ஆண்டுகள்

13.ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை செல்லும் ———— என்ற நேரடி ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. – ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ்

14.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சமாக எத்தனை கோடியை எட்டியுள்ளதாக ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது? – ரூ.24,240 கோடி

15.உலக ரேபிஸ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? – செப்டம்பர் 28

16.தற்போது சிறப்பு பண்புகளுடன் கூடிய எத்தனை வகையான பயிர்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்? – 35 வகை

17.ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ———- மாகாணத்தில் இருந்து சோதித்துப் பார்த்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. – ஜகாங்

18.அஸ்ட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ள வீட்டைக் கண்காணிக்கும் புதிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது? – அமேசான்

19.காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக ————- என்பவரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. – சௌமித்ரா குமார் ஹல்தர்

20.ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளும், 10 ஆயிரத்திற்கு அதிகமான ரன்கள் எடுத்த முதல் வீரர் யார்? – கீரோன் பொல்லார்ட்

21.முதல்முறையாக எந்த நாட்டு கடற்படை பிரிவில் தலைப்பாகை அணிய சீக்கிய அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? – அமெரிக்கா

 

Hope you found useful,

 

FOLLOW US ON:

FACEBOOK , INSTAGRAM , YOUTUBE.