TNPSC Current Affairs – May 31, 2022

0
27

C.A.31.05.2022 (Tamil Version)

 

  1. கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகளுக்கு 23 வயது நிறைவடைந்ததும் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வி, மருத்துவம், உயர்கல்வி பயிலும்போது மாதம் ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும்.

 

  1. கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும்.

 

  1. கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை பிஎம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதார காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.

 

  1. தொழில்முறை படிப்பு அல்லது உயர் கல்வி பயில விரும்பும் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படும். மேலும் உயர்படிப்பு படிக்கும் காலத்தில் (18 முதல் 23 வயது வரை) இதர திட்டங்கள் மூலம் அன்றாட தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 23 வயது நிறைவடைந்தவுடன் ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.

 

  1. நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.

 

  1. விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்பதற்கும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கும் தெலங்கானா மாநிலத்தில் அரசின் வேளாண்மைத் துறை மூலம் ‘ரைத்து பந்து’ (RYTHU BANDHU -விவசாயிகளின் உறவினர்) என்ற திட்டம் 2018-19-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கடந்த ஆண்டுகளில் விவசாயிகளை சாகுபடிக்கு ஊக்கப்படுத்தும் வகையில் குறுவை மற்றும் சம்பா தொகுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டில் ரூ.61.09 கோடிக்கு குறுவை நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தலா ஏறத்தாழ 6 ஆயிரம் மதிப்பில் விதைநெல், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

 

  1. கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937-இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வகை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக கேரளத்தில் 2011-ம் ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2019-இல் ஒரு சிறுவன் கேரளத்தில் அக்காய்ச்சலுக்கு பலியானதும் சுகாதாரத் துறை தகவல்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. திருச்சூரில் 47 வயது நபர் ஒருவர் அதற்கு பலியானார்.

 

  1. உலகளவில் வலிமையான விமானப் படையைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலை (2022) வேர்ல்டு டிரெக்டரி ஆப் மாடர்ன் மிலிடரி ஏர்கிராப்ட் (டபிள்யூடிஎம்எம்ஏ) வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய விமானப் படை, சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப் படைகளை பின்னுக்குத் தள்ளி உள்ளது. டபிள்யூடிஎம்எம்ஏ, 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா9 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114.2 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் இந்தியா 69.4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய விமானப் படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இந்திய விமானப்படை 1950 முதல் பாகிஸ்தானுடன் 4 முறை மிகப்பெரிய போரில் ஈடுபட்டது. இந்திய விமானப்படையின் மூத்த தளபதியாக குடியரசுத்தலைவர் விளங்குகிறார். நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணியிலும் விமானப் படை ஈடுபடுகிறது. 1,645 போர் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. 1,70,576 பேர் பணிபுரிகின்றனர்.

 

  1. குரங்கு அம்மை நோய்க்கு முதல்முதலாக நைஜீரியா நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் புவனேசுவரத்தில் மே 28-ம் தேதி நடைபெற்ற 67 வது ரயில்வே வார விழாவில் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறைகளை சிறப்பாக பராமரித்ததற்கான கேடயத்தை ஜோலார் பேட்டை ரயில் நிலையத்துக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்

 

C.A.31.05.2022 (English Version)

 

  1. Prime Minister Narendra Modi has launched a protection program for children who have lost their parents to the Corona epidemic. Under the scheme, the children will be given Rs 10 lakh in cash on reaching the age of 23. In addition, free education, medicine, higher education, Rs 4,000 per month will be given a stipend.

 

  1. On May 29 last year, Prime Minister Narendra Modi launched the BM Cares for Children program to protect children who have lost their parents to the Corona epidemic. The purpose of the program is to provide integrated care for children who have lost a parent, adoptive parent or legal guardian by Corona. Accordingly, the affected children will be provided with the necessary education, medical care, shelter and food until they reach the age of 23 years.

 

  1. Grants for schooling for children who have lost their parents to corona infection have been released from the BM Course program. A health insurance card was also issued under the BM Cars Passbook and the Ayushman Bharat scheme.

 

  1. Loans will be provided under this scheme to children who want to pursue professional studies or higher education. Measures will also be taken to provide a monthly stipend of Rs. 4,000 for daily needs through other schemes during the period of higher studies (18 to 23 years). Rs 10 lakh cash will be given on completion of 23 years of age.

 

  1. On May 1, 2016, Prime Minister Modi launched the ‘Prime Minister’s Ujwala Yojana’ scheme to provide free cooking gas connection to poor people across the country. Under this scheme, the Central Government provides Rs. 1,600 / – including the deposit for obtaining a cylinder. Gas stove and first cylinder will be provided free of cost to the beneficiaries of this scheme.

 

  1. The RYTHU BANDHU (Relatives of Farmers) scheme has been implemented by the State Department of Agriculture in Telangana since 2018-19 to help farmers recover from debt and purchase inputs for cultivation. Under this scheme, a scheme of Rs. 5,000 per acre per crop is being implemented for farmers in the state and farmers cultivating horticultural crops. In Tamil Nadu too, Kuruvai and Samba package schemes have been implemented in recent years to encourage farmers to cultivate. Last year, a special package of Rs. 61.09 crore was announced for paddy cultivation and inputs including seed paddy and fertilizers were provided to the farmers at a cost of about Rs. 6,000 each.

 

  1. The Tamil Nadu Public Health Department has ordered that anyone with symptoms of the West Nile virus, which is transmitted by mosquitoes, be admitted to hospital immediately. West Nile virus is transmitted by a type of mosquito called “Culex”, which causes fever, body aches, headaches, and swelling of the feet, which can grow in polluted water. The virus was first detected in India in 2011 in Kerala. Following this, in 2019, a boy fell victim to the flu in Kerala, according to the health department. In this situation, West Nile virus is currently spreading in Kerala. A 47-year-old man was died in Thrissur.

 

  1. The World Directory of Modern Military Aircraft (WDMMA) has released a list of countries with the strongest air force in the world (2022). India is ranked 3rd after the United States and Russia. In particular, the Indian Air Force has overtaken the Chinese, Japanese, Israeli and French air forces. The WDMMA has published a list of 124 Air Force services and 47,840 fighter jets from 98 countries. The United States with 242.9 points is in the first place, Russia is in the second place with 114.2 points and India is in the third place with 69.4 points. The Indian Air Force was established on October 8, 1932. The Indian Air Force has fought four major wars with Pakistan since 1950. The President is the Senior Commander of the Indian Air Force. The Air Force is also involved in rescue operations during natural disasters including earthquakes, tsunamis and storms. 1,645 fighter jets are in operation. It employs 1,70,576 people.

 

  1. The first case of monkey pox in Nigeria has been reported.

 

  1. Minister Aswini Vaishnav presented the Shield to the Jolarpet Railway Station on behalf of the East Coast Railway at the 67th Railway Week in Bhubaneswar on May 28 for better maintenance of the drivers’ lounge.

Click here to download PDF :CA 31.05.2022