TNPSC Current Affairs – May 10, 2022

0
27

C.A.10.05.2022 (Tamil Version)

 

  1. தேச துரோக சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

(குறிப்பு: தேச துரோக சட்டம் செல்லுபடியாகும் என 1962-ம் ஆண்டு கேதார்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது)

 

  1. தமிழகத்தில் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆய்வுகள் விளக்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

(குறிப்பு: மயிலாடும்பாறை ஆய்வு – தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள், வாழ்விடப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பாறை ஓவியங்கள், புதிய கற்கால கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களை கொண்டது மயிலாடும்பாறை. இங்கு சேகரிக்கப்பட்ட அடையாளங்களை அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தினர். இதில்  தமிழகத்தில் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்ததை உறுதி செய்துள்ளனர்)

 

  1. கீழடிக்கு அருகில் இருக்கும் அகழ்வாய்வுத்தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அங்கு நெற்பயிர்களை பயிரிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. சிவகளை பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கு நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலையில் இருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது

 

  1. பிரபல பின்னணி பாடகி சுசீலாவை கௌரவிக்கும் வகையில் தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலையுடன் கூடிய சிறப்பு “போஸ்டல் கவர்” வெளியிடப்பட்டது.

 

  1. டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக சுதான்ஷு துலியா, ஜாம்சத் பி.பர்திவாலா ஆகியோர் நேற்று (09.05.2022) பதவியேற்றனர். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34-ஆக முழு பலத்தை எட்டியது.

 

  1. பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கையில் திடீர் திருப்பமாக பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

 

C.A.10.05.2022 (English Version)

 

  1. The central government has told the Supreme Court that the treason law will be reviewed. The Central Government has therefore asked the bench headed by Chief Justice of the Supreme Court NV Ramana not to spend time with the Supreme Court in this matter.

 

(Note: The five-judge Supreme Court Constitutional Court ruled in Kedarnath Singh’s case in 1962 that the treason law was valid)

 

  1. Chief Minister Stalin has said that the Mayilaadumpaarai excavations in Krishnagiri district explain the use of iron in Tamil Nadu 4200 years

 

(Note:Mayilaadumpaarai – Archaeological Survey of Tamil Nadu has carried out excavations at Mayiladuthurai in Krishnagiri district. Mayilaadumpaarai has rare archeological symbols such as rock paintings and Neolithic tools. Authorities examined the identities collected here. This confirms the use of iron in Tamil Nadu 4200 years ago)

 

  1. Analysis of soil samples collected at the excavation site near the bottom found evidence of paddy cultivation Examination of the soil samples collected in the Sivakala area revealed that fresh water had gone into the brick drain that carried the water there and that this water had been brought in from the reservoir water level.

 

  1. A special “postal cover” with a special stamp was issued on behalf of the Post Office in honor of the famous playback singer Susila.

 

  1. Sudhanshu Tulia and Jamshat P. Bardiwala were appointed as Supreme Court Judges in Delhi yesterday (09.05.2022). This brought the total number of judges of the Supreme Court to 34 in full force.

 

  1. Prime Minister Mahinda Rajapaksa has resigned in a sudden twist to Sri Lanka, which is mired in an economic crisis.

Click here to download PDF material: CA 10.05.2022