TNPSC CUrrent Affairs – June 6, 2022

C.A.06.06.2022 (Tamil Version)

 

 1. பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 8-ம் நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றும் 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாக அமைந்தது
 2. சென்னையில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை மரக்கன்றுகளை நட்டும், மஞ்சப்பைகளை வழங்கியும் கொண்டாடினர். ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நேற்று பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் அவரது மனைவி லட்சுமி பங்கேற்று வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து செய்தியில் “மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதல்முறையாக தமிழ்நாடு பசுமை சுற்றுச்சூழல் நிறுவனம் (Tamil Nadu Green Climate Company) என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பது ஒரே உலகம் என்பதை மனதில்கொண்டு, அனைத்து வகையிலும் அதைக் காக்கப் பாடுபடுவோம்” என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கிண்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, பசுமைப் பயணமாக பள்ளிக்கு மாணவர்கள் வருவதை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வாரியத் தலைவர் ஏ.உதயன், உறுப்பினர் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில் கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தின் சேவையை துறை செயலர் சுப்ரியா சாஹூ தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகாரட்சி துணை ஆணையர் எஸ்.மனிஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல் துறை மற்றும் பொலுகேர் இன்ஜினியர்ஸ் இந்தியா சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடைபயணத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.எம்.எச்.அசன் மவுலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை துறைமுக நிர்வாகம் சார்பில், அதன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் துறைமுக வளாகத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட நிகழ்ச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூங்கா இயக்குநர் நிவாஸ் ஆர்.ரெட்டி தலைமையில் 350 பூங்கா பணியாளர்களும் தலா ஒரு மரக்கன்றை நடவு செய்தனர்.
 3. பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு இலக்கு நிறைவேறியது. கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. பின்னா், இந்த இலக்கை முன்கூட்டியே அடையும் நோக்கில், 2025-26-க்கு மாற்றியமைக்கப்பட்டது.
 4. ஜன் சமர்த் வலை தளத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை புதுதில்லியின் விக்யான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, வருகிற 11-ந் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. ஜன் சமர்த் தளம் என்ற கடன் இணைக்கப்பட்ட அரசின் திட்டங்களுக்கான தேசிய தளத்தை பிரதமர் அறிமுகப்படுத்துவார். இது, அரசின் கடன் திட்டங்களை இணைக்கும் ஒரு-நிறுத்த டிஜிட்டல் தளமாகும். பயனாளிகளை, கடன் வழங்குபவர்களுடன் நேரடியாக இணைக்கும் முதல் தளம், இதுவாகும்.
 5. ரூபாய் நோட்டுகளில் தற்போது மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக மற்ற தேச தலைவர்களின் படங்களையும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற செய்வதற்கான பரிசீலனை நடந்து வருகிறது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுகளில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படமும் இருக்கும். மேலும் ரூபாய் நோட்டில் வாட்டர் மார்க் எனப்படும் மறைவாக தெரியும் வகையில் மகாத்மா காந்தியின் படம் கூடுதலாக இடம்பெறுகிறது. இப்போது அந்த இடத்தில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
 6. வண்டலூர் பூங்காவில் இனி பிளாஸ்டிக் பாட்டீலுக்கும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 7. நாட்டில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் போல, அதிவேக சரக்கு ரயிலை சென்னை ஐ.சி.எஃப(ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை) தயாரிக்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல் ரயில் தொடா் தயாரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தியாவின் இணையவழி வா்த்தக சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, நீண்ட தூரத்துக்கு பார்சல்களை கொண்டு செல்வதற்கான சிறந்த தோ்வாக உள்ளது. இந்தியாவின் இணையவழி வா்த்தக சந்தை 2030-ஆம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப சரக்குப் போக்குவரத்து பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம்.
 8. மண்ணை பாதுகாக்க 5 திட்டங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
 • மண்ணை ரசாயனம் இல்லாமல் வைத்து இருப்பது
 • மண்ணில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது
 • மண்ணில் ஈரப்பதத்தை பராமரித்து நீர் இருப்பை அதிகரிப்பது
 • நிலத்தடி நீர் குறைவால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகளை நீக்குவது
 • வனபராமரிப்பு குறைவதால் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பது

 

C.A.06.06.2022 (English Version)

 

 1. Rafael Nadal of Spain has won the French Open tennis title for the 14th time. Through this he has recorded various achievements. Spain’s Rafael Nadal, ranked 5th, played against No. 8 seed Caspar Rudd of Norway in the men’s singles final in Paris, France. Rafael Nadal won the set 6-3, 6-3, 6-0 to win the title. The match lasted about 2 hours and 18 minutes. This is Natal’s 14th title at the French Open. This is the 22nd Grand Slam title he has won overall.
 2. World Environment Day was celebrated in Chennai yesterday on behalf of various government departments. The festival was celebrated by planting saplings and presenting yellow bags. June 5 is celebrated annually as World Environment Day. This year too, Environment Day was celebrated yesterday on behalf of various government departments. His wife Lakshmi planted saplings at the Governor’s Palace in Chennai in the presence of Governor RN Ravi at the World Environment Day function. In his World Environment Day message issued by Chief Minister Stalin, he said, “The Government of Tamil Nadu has again initiated a number of nature conservation initiatives, including the Yellow Tamil Movement Movement and the first ever Tamil Nadu Green Climate Company, a special purpose vehicle. With World Environment Day in mind, we will strive to protect it in all respects, with one mind in mind. ” On behalf of the Tamil Nadu Pollution Control Board, Environment Minister Siva Meyyanathan participated in the Environment Day function held at the Head Office in Kindi and presented certificates of appreciation to the schools for encouraging students to come to school on a green trip. Board Chairman A. Udayan and Member Secretary Kannan were also present on the occasion. Supriya Sahu, Secretary, Department of Environment and Forests, launched the service at the Coimbatore Flower Store premises on the occasion of the Environment Day. The event was attended by Deputy Commissioner S. Manish, CMDA Member Secretary Ansul Misra and Coimbatore Market Chief Executive Officer S. Shanthi. Minister of Health Ma Subramaniam and Minister of Environment Siva Meyyanathan inaugurated the World Environment Day Awareness Walk on behalf of the Department of Environment and Polcare Engineers India at Besant Nagar Elliots Beach, Chennai. They regularly provided yellow bags to the public who came to the beach and raised awareness to avoid the use of plastic bags. The event was attended by Congress MLA JMH Assan Maulana among others. On behalf of the Chennai Port Management, Port Authority Chairman Sunil Paliwal participated in the event held at its premises and planted saplings. It has been decided to plant 15,000 saplings in the port complex in the next 2 years. At the event held at the Vandalur Zoo, 350 park staff, led by park director Nivas R. Reddy, planted a sapling each.
 3. The 10% ethanol blending target on petrol was achieved. The last ‘National Policy on Biofuels’ announced in 2018 aims to blend 20% ethanol into petrol by 2030. Subsequently, it was rescheduled for 2025-26, with the aim of achieving this goal in advance.
 4. Prime Minister Modi launches Jan Samarth web site today. Prime Minister Narendra Modi inaugurates the Iconic Week celebrations of the Ministry of Finance and Corporate Affairs at the Vigyan Bhavan in New Delhi. It will be celebrated till the 11th of this month as part of the Amirtha Mahotsav of Liberation. The Prime Minister will launch the Jan Samarth platform, a national platform for debt-linked government projects. It is a one-stop digital platform for linking government loan schemes. This is the first site that connects the beneficiaries directly with the lenders.
 5. At present it is customary for rupee notes to feature only the image of Mahatma Gandhi. In this context, for the first time, consideration is being given to placing pictures of other national leaders on banknotes. At the same time, the rupee notes will have the image of Mahatma Gandhi in their usual place. The rupee note also features a picture of Mahatma Gandhi, also known as a watermark. Now the Reserve Bank is considering publishing pictures of Bengali poet Rabindranath Tagore and former President Abdul Kalam at the site.
 6. It has been reported that the entrance fee for plastic bottles will no longer be charged at Vandalur Park.
 7. Like the Vande Bharat train, the fastest freight train in the country will be manufactured by the Chennai ICF (Integrated Rail Box Factory). The first train will be ready and shipped in December this year. Railways plans to make a name for itself in the Indian e-commerce market. Thus, it is the best skin to carry the bows for long distances. India’s e-commerce market is projected to reach $ 350 billion by 2030. Accordingly, the Indian Railways has stepped in to strengthen freight traffic.
 8. The Prime Minister said that the Central Government is continuously working on 5 projects to protect the soil
  1. Keeping the soil chemical free
  2. Protecting soil-dwelling organisms
  3. Maintaining soil moisture and increasing water availability
  4. Elimination of soil damage due to ground water depletion
  5. Prevent soil erosion caused by deforestation

Click here to download PDF material: CA 06.06.2022