TNPSC Current Affairs – June 25, 2022

0
25

C.A.24.06.2022 (Tamil Version)

  1. என்ஐஏ தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது
  2. வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர், அந்த வாடகை தாயின் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல், கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள், கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டைகளை செலுத்த வேண்டும். வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.உயிரிழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்
  3. வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி திருக்கோயில்கள் மற்றும மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. 2022 – 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையில் திருக்கோயில்களில் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  4. ஜம்மு காஷ்மீரில் வரும் 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் வகையில் ஒருங்கிணைப்பு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
  5. இந்தியா தனது அடுத்த ஜனாதிபதியை ஜூலை 18, 2022 அன்று தேர்ந்தெடுக்கும் நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றம், உயர்மட்ட அரசியலமைப்புச் செயல்பாட்டின் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது முறையாக தேர்தலின் ஒரு பகுதியாக இருக்காது. மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால் குடியரசுத் தலைவர் வாக்குப்பெட்டியின் ஒரு பகுதியாக இல்லாததற்கு முன்னுதாரணங்கள் உள்ளன, இதுபோன்ற முதல் நீதிமன்றம் 1974 இல் குஜராத்தில் இருந்தது. அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைகள் கலைக்கப்பட்டதால் அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட முடியவில்லை. இந்த வழக்கில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2019 இல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை இன்னும் அமைக்கப்படவில்லை.
  6. ஹங்கேரியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 4*200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றது. கிளோ் வெய்ன்ஸ்டின், லியா ஸ்மித், கேட்டி லெடக்கி, பெல்லா சிம்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 7 நிமிஷம்45 விநாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலிய அணி அதிலிருந்து 2.41 விநாடிகள் பின்தங்கி வெள்ளியும், கனடா 3.31 விநாடிகள் தாமதமாக வந்து வெண்கலமும் வென்றன. இப்பிரிவில் தங்கம் வென்ன் மூலம், அமெரிக்க வீராங்கனை லெடக்கி உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் தனது 21-ஆவது பதக்கத்தைப் பெற்று உலக சாதனையை தொடா்கிறாா். அவரது பட்டியலில் 18 தங்கம், 3 வெள்ளி அடங்கும். உலக சாம்பியன்ஷிப்பில் வேறெந்த வீராங்கனையும் இத்தனை பதக்கங்கள் இதுவரை வென்றதில்லை. அடுத்த இடத்தில் சக அமெரிக்கரான நடாலி காஃப்லின் 19 பதக்கங்களுடன் (7 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) இருக்கிறார்.

 

C.A.24.06.2022 (English Version)

  1. Senior IPS officer Dinkar Gupta has been appointed NIA chief, according to the Union Ministry of Personnel
  2. Couples wishing to have a child through a surrogate mother must take out three years of medical insurance in the name of the surrogate mother, the federal government has ordered. Only surrogate mothers can have a baby with the help of a surrogate mother, including those who have had a hysterectomy, cervical cancer, or other life-threatening illness during pregnancy. The surrogate mother must file an affidavit in court acknowledging compensation for medical expenses incurred during pregnancy and congenital malformations such as loss of life. Couples who want to have a baby should take it
  3. At the Vadapalani Murugan Temple, the Minister of Hindu Religious Affairs, PK Sekarbabu, launched a program to provide new dress to the bride and groom at the wedding of the disabled. If one of the bride and groom is a transferee in the last 2021-2022 legislative grant request, no fee will be charged for the wedding that will take place for them at the temple. Also, if the wedding takes place in a wedding hall owned by the temple, only the maintenance fee for the hall will be charged. Notice was issued. Accordingly, weddings for the disabled are being held in temples and halls. An announcement was made on behalf of the temple that the bride and groom would be given new dress at interfaith weddings to be held in temples and halls owned by the church in the 2022 – 2023 Assembly grant request.
  4. The state government has set up a coordination committee to better host the 2023 G20 summit in Jammu and Kashmir.
  5. With India electing its next president on July 18, 2022, the Assembly of the Union Territory of Jammu and Kashmir will not be part of the election for the second time in the electoral history of the high-level constitutional process. There are precedents for the President not being a part of the ballot box since the dissolution of the state legislatures, the first such court being in Gujarat in 1974. In the states of Assam, Nagaland and Jammu and Kashmir, the legislatures were dissolved and could not contest subsequent elections. In this case, the Jammu and Kashmir Legislative Assembly has not yet been constituted after the state of Jammu and Kashmir was divided into Union Territories of Jammu and Kashmir and Ladakh in 2019.
  6. The United States wins gold in the women’s 4x200m freestyle relay at the World Swimming Championships in Hungary. The U.S. team, which included Chloe Weinstein, Leah Smith, Katie Ledecky and Bella Sims, topped the championship record with a time of 7 minutes 41.45 seconds. Australia trailed silver by 2.41 seconds and Canada by 3.31 seconds to win bronze. With a gold medal in this category, American athlete Ledecky sets a world record by winning her 21st medal at the World Swimming Championships. His list includes 18 gold and 3 silver. No other athlete has ever won so many medals at the World Championships. Next in line is fellow American Natalie Cofflin with 19 medals (7 gold, 7 silver, 5 bronze).

Click here to download PDF: CA 24.06.2022