TNPSC Current Affairs – June 20, 2022

0
37

C.A.20.06.2022 (Tamil Version)

 

  1. செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி இந்திராகாந்தி விளையாட்டரங்களில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள 75 நகரங்களுக்கு ஜோதி கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 28ல் மாமல்லபுரம் வந்தடையும். ஜூலை 28 முதல் ஆக. 8 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

 

  1. கடல் காற்றாலை மின் உற்பத்தி தொடா்பாக 5 நாள்கள் ஸ்காட்லாந்து செல்லவிருப்பதாக மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

  1. நாட்டில் உள்ள 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விபின் சங்கி, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அம்ஜத் அதேஷம் சையத், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சம்பாஜி சிவாஜி ஷிண்டே, அஸ்ஸாமில் உள்ள குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஷ்மின்.எம்.சாயா, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உஜ்ஜல் புயான் ஆகிய 5 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

  1. நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ள நிலையில், இயல்பான பருவமழையும் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்

 

  1. சாகித்ய அகாதமி விருதுபெற்ற தமிழ் அறிஞர் ந.தாஸ் காலமானார். இந்திய பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடிபெயர்ந்து மங்களூரில் தஞ்சமடைந்த குடும்பத்தின்  அனுபவங்கள் கொண்ட “முத்துப்பாடி சனங்களின் கதை” என்ற கன்னட நூலை 1000 பக்கங்களில் தமிழில் மொழிபெயர்த்தார்.

 

  1. பின்லாந்தில் நடைபெறும் குவோர்ட்டேன் விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

 

  1. கேரளாவில் நடைபெறும் 83-வது தேசிய ஜூனியர் யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் தமிழகத்தின் நித்யாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  1. கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், ‘பிரதமரின் இ-வித்யா’ திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் பகுதியாக பிரதமரின் இ-வித்யா திட்டம் தொடங்கப்பட்டது, இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி புகட்ட டிஜிட்டல், இணையவழி முறை சார்ந்த அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் கற்றல் இழப்பை குறைப்பதே நோக்கம் ஆகும்.

 

  1. உலகின் முதல் நாசி தடுப்பூசியின் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் அந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்

 

C.A.20.06.2022 (English Version)

  1. Prime Minister Modi inaugurated the Chess Olympiad torch relay. He started the Chess Olympiad torch at the Indira Gandhi Stadium in Delhi. The torch will be flown to 75 cities in India and will reach Mamallapuram on July 28. Become July 28th. The 44th Chess Olympiad is scheduled to take place until 8 p.m.

 

  1. Tamil Nadu electricity minister Mr. Senthil Balaji, has stated that he intends to go to Scotland for 5 days for sea wind power generation.

 

  1. New Chief Justices have been appointed to 6 High Courts in the country. Uttarakhand High Court Chief Justice Vipin Sangi, Himachal Pradesh High Court Chief Justice Amjad Adesham Syed, Rajasthan High Court Chief Justice Sambaji Shivaji Shinde, Assam Chief Guwahati High Court Chief Justice Rashmin M. Chaya and Telangana High Court Chief Justice have been appointed. Telangana High Court Chief Justice Satish Chandra Chama has been appointed as the new Chief Justice of the Delhi High Court.

 

  1. As inflation continues to rise in the country, economists say a normal monsoon and interest rate hikes could help curb inflation.

 

  1. Sahitya Akademi Award winning Tamil scholar N. Das has passed away. He translated 1000 pages of the Kannada book “The Story of the Muthupadi Strings” into Tamil with the experiences of a family who migrated to Pakistan during the partition of India and took refuge in Mangalore.

 

  1. India’s Neeraj Chopra wins gold in javelin throw at the Quartet Games in Finland.

 

  1. Nithyasree of Tamil Nadu won the women’s under-19 title at the 83rd National Junior Youth Table Tennis Championships in Kerala.

 

  1. At a time when corona proliferation was in full swing, it received a UNESCO award for its use of communication technology in school education under the ‘Prime Minister’s e-Vidya’ program. Launched by the Union Ministry of Education in 2020 as part of the Tarsap India project, the Prime Minister’s e-Vidya project integrates all digital and e-learning initiatives to promote education using information technology. The aim is to reduce learning loss.

 

  1. The head of Bharat Biotech has announced that the world’s first nasal vaccine will soon be available for testing.

Click here to download PDF material: CA 20.06.2022